Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட YAMALUBE Lubricants தற்போது AMW இடமிருந்து கிடைக்கிறது

43

இலங்கையின் வாகனத் துறையில் முன்னணியில் உள்ள Associated Motorways (Private) Limited (AMW) நிறுவனமானது, ஜப்பானின் Yamaha Motor Co. Ltd. (YMC) இன் அங்கீகரிக்கப்பட்ட முகவரும், இலங்கையில் Yamalube Lubricants இன் ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராகவும் உள்ளது. Yamalube Lubricants குறிப்பாக Yamaha தயாரிப்புகளுக்காக, பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகள் ஆகும். செயற்றிறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த Yamaha மோட்டார்சைக்கிள்கள் மற்றும் தயாரிப்புகளின் தனித்துவமான தேவைகளை ஆழமாகப் அறிந்து, மிகவும் திறமையான Yamaha பொறியியலாளர்களால் இது உருவாக்கப்பட்டுள்ளது.

சிறந்த எண்ணெய் தக்கவைப்பை Yamalube கொண்டுள்ளது. அதாவது தேய்மானம் மற்றும் பாதிப்பைத் தடுக்க மிகவும் கடினமான சூழல்களிலும் இது மிகவும் பாதுகாப்பான மசகு அடுக்கைப் பராமரிக்கிறது. இத்தயாரிப்புகள் யாவும் American Petroleum Institute (API) மற்றும் National Marine Manufacturers Association (NMMA) ஆகியவற்றின் தொழில்துறை தரங்களையும் பூர்த்தி செய்கின்றன. இதன் மூலம், மிக உயர்ந்த தரத்தையும், தரம் வாய்ந்ததாகவும் இருப்பதை Yamalube Lubricants உறுதி செய்வதோடு, தொழிற்துறை அளவுகோல்களை அது கடைப்பிடிக்கிறது.

செயற்றிறன் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமையளிப்பவர்களுக்கு ஒரு தெளிவான நன்மையை Yamalube வழங்குகிறது. அதன் தனித்துவமான உருவாக்கம் மற்றும் சர்வதேச தர கடைபிடிப்பானது, எந்தவொரு Yamaha மோட்டார்சைக்கிளின் எஞ்சினினதும் ‘திரவ பாகமாக’ அதனை அமைக்கிறது. AMW ஆனது, இலங்கையில் Yamaha மற்றும் Yamalube Lubricants ஆகிய இரண்டிற்கும் ஒரே அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் எனும் வகையில், கிரீஸ்கள், கியர் ஒயில்கள், செயின் லூப்ரிகண்ட் உள்ளிட்ட மசகு எண்ணெய்களின் விரிவான வரிசை மூலம் தமது வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. தற்போது அனைத்து AMW வின் அங்கீகரிக்கப்பட்ட Yamaha முகவர்களிடமும் Yamalube Lubricants கிடைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here