WCIC PRATHIBHABHISHEKA

17

பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024
(செப்டெம்பர் 2024, கொழும்பு) கைத்தொழில் மற்றும் வர்த்தகத்திற்கான மகளிர்
சம்மேளனம் தனது வருடாந்த முதன்மை நிகழ்வான “WCIC PRATHIBHABHISHEKA –
WOMEN ENTREPRENEUR AWARDS 2024” என்ற பெண் தொழில்முயற்சியாளர் விருது
நிகழ்வை ஆரம்பித்துள்ளமை குறித்து அறிவித்துள்ளது. இலங்கையிலும், சார்க்
பிராந்தியத்திலும் மிகச் சிறந்த பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு அங்கீகாரமளித்து,
வெகுமதியளிப்பதே இதன் நோக்கம்.
“பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024 நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2025
ஜனவரியில் இடம்பெறவுள்ள வைபவத்தில் பெருமதிப்புமிக்க WCIC
PRATHIBHABHISHEKA என்ற பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024 இல்
போட்டியிடுவதற்கு கடந்த சில ஆண்டுகளில் எந்த கடினமான சூழ்நிலையையும்
எதிர்கொண்டு அதிலிருந்து வெளிவந்துள்ள தமது சரித்திரங்கள் மற்றும் சாதனைகளை
பகிர்ந்து கொள்ளுமாறு மிகச் சிறந்த பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு நாம் அழைப்பு
விடுக்கின்றோம். தமது தொழிலை விரிவுபடுத்தி வளர்ப்பதில் அவர்களின் உறுதிப்பாடு
மற்றும் பொருளாதாரத்திற்கு அவர்களுடைய பங்களிப்பு மற்றும் விளைவு
ஆகியவற்றுக்காக பெண் தொழில்முயற்சியாளர்களைக் கௌரவிக்கும் வகையில்
இவ்விருது வைபவம் இடம்பெறும். இப்போட்டியானது அடிப்படையில் இலங்கை பெண்
தொழில்முயற்சியாளர்களுக்கானது என்றாலும், விசேட பிரிவின் கீழ்
போட்டியிடுவதற்காக சார்க் பிராந்தியத்திலுள்ள பெண் தொழில்முயற்சியாளர்களுக்கான
வாய்ப்பினையும் நாம் உள்ளடக்கியுள்ளோம். கடந்தகாலங்களில் WCIC இன் பெண்
தொழில்முயற்சியாளர் விருதுகளுக்கு மேலும் பொலிவு சேர்ப்பிக்கும் வகையில் இது
ஆண்டுதோறும் மென்மேலும் மெருகேறியுள்ளது. புதிய கருப்பொருளின் கீழ் தொடர்ந்து
மூன்றாவது தடவையாக இடம்பெறும் விருது வழங்கல் வைபவத்தை 2024 இல் நாம்
முன்னெடுப்பதுடன், இது ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிகத் தெளிவாகப் புலப்படுகின்றது.

வலுவான நிறுவன ஆட்சி மற்றும் நிதியியல் நடைமுறைகளை ஸ்தாபிக்க வேண்டிய
தேவையையும், வர்த்தகத்திற்கு மூலோபாய வெளித்தோற்றத்திற்கான தேவையையும்
விண்ணப்பதாரிகள் நன்கறிவர்,” என்று WCIC இன் தலைவியான அனோஜி டி சில்வா
அவர்கள் குறிப்பிட்டார்.
ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் இணைத் தலைவிகளான நிலானி செனவிரட்ண மற்றும்
துசிதா குமாரகுலசிங்கம் ஆகியோர் தமது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கையில்,
“நாடெங்கிலுமுள்ள பெண் தொழில்முயற்சியாளர்களைக் கௌரவிப்பதற்காக இந்த தேசிய
முயற்சியை முன்னெடுப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். இதற்கான
ஆர்வமும், வேகமும் ஏற்கனவே துளிர்விட்டுள்ளதுடன், இப்பயணத்தில் அங்கம்
வகிப்பதற்கு தொழில்முயற்சியாளர்கள் பேரார்வத்துடன் காத்திருக்கின்றனர். தொடக்க
வணிக முயற்சி, நுண், சிறிய, நடுத்தர மற்றும் பாரிய பிரிவுகளின் கீழ் விண்ணப்பங்களை
நாம் ஏற்றுக்கொள்ளவுள்ளோம். ஒவ்வொரு பிரிவும் மீளாய்வுக்குட்படுகின்ற 2023/2024
ஆண்டில் குறிப்பிட்ட வருமானத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். ஒவ்வொரு பிரிவுக்கும்
தங்க, வெள்ளி மற்றும் வெண்கல விருதுகள் வழங்கப்படும்.
தேசிய தொழில்முயற்சியாளர் விருதுகள் என்ற எமது விளைவை உண்மையாக
ஏற்படுத்தும் வகையில், பிராந்திய பெண் தொழில்முயற்சியாளர்களின் பங்குபற்றலை நாம்
எதிர்பார்ப்பதுடன், முன்னைய ஆண்டுகளைப் போலவே 9 மாகாணங்களிலிருந்தும்
பங்கேற்பாளர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர். ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் அனைத்து
விண்ணப்பங்கள் மத்தியிலும் மிகச் சிறந்த ஒன்றுக்கு “மாகாணத்தில் மிகச் சிறந்தவர்”(Best
of the Province) என்ற விருது வழங்கப்படும்.
2024 க்கான இளம் பெண் தொழில்முயற்சியாளர், மிகச் சிறந்த தொடக்க வணிகம்,
தைரியமான பெண், மிகச் சிறந்த ஏற்றுமதியை மையமாகக் கொண்ட
தொழில்முயற்சியாளர் (தயாரிப்புக்கள் மற்றும் சேவைகள்) மற்றும் மிகச் சிறந்த சார்க்
பிராந்திய தொழில்முயற்சியாளர், டிஜிட்டல் தொழில்முயற்சியாளர், மிகவும்
புத்தாக்கம்மிக்க தொழில்முயற்சியாளர் மற்றும் சமூக தொழில்முயற்சியாளர் போன்ற
மதிப்புமிக்க விசேட விருதுகளும் வழங்கப்படுவதற்கு பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வைபவத்தின் உச்ச நிகழ்வாக “வருடத்தின் மிகச் சிறந்த பெண் தொழில்முயற்சியாளர்

  • 2024” (WOMAN ENTREPRENEUR OF THE YEAR – 2024) தெரிவு இடம்பெறும்.
    “நிகழ்வுக்கான விண்ணப்பங்களை www.wcicsl.lk மூலமாக பதிவிறக்கம் செய்துகொள்ள
    முடியும், அல்லது WCIC அலுவலகத்திலிருந்து கோரிப் பெற்றுக்கொள்ள முடியும்
    (ஆர்வமுள்ள விண்ணப்பதாரிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்).

விண்ணப்பங்கள் மிகவும் கவனமாக பூர்த்தி செய்யப்பட்டு, விண்ணப்பதாரியின்
சரித்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஆவணங்களுடன் WCIC ற்கு
சமர்ப்பிக்கப்படல் வேண்டும். நுழைவுகளுக்கான இறுதித் திகதி 2024 ஒக்டோபர் 31
ஆகும்,” என்று இணைத் தலைவிகள் குறிப்பிட்டனர்.
WCIC Prathibhabhisheka – பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024 க்கு Platinum
கூட்டாளராக AIA Insurance, Diamond மற்றும் வங்கிச்சேவை கூட்டாளராக DFCC
ALOKA, ஒத்துழைப்பு கூட்டாளராக USAID CATALYZE ஊடாக U S Agency for
International Development (USAID), தனியார் துறை அபிவிருத்திச் செயற்பாட்டுக்கான
Gold கூட்டாளராக McLarens Group, தங்க அனுசரணையாளராக Sunquick Lanka Pvt
Ltd, Silver கூட்டாளராக Hayleys PLC, Bronze கூட்டாளராக Imperial Tea Exports (Pvt)
Ltd, படைப்பாக்க கூட்டாளராக Triad மற்றும் அறிவு கூட்டாளராக Ernst & Young
ஆகியன வலுவூட்டுகின்றன. அடுத்துவரும் வாரங்களில் மேலும் பல கூட்டாளர்கள்
கைகோர்ப்பர் என நாம் நம்புகின்றோம்.
கைத்தொழில் மற்றும் வர்த்தகத்திற்கான மகளிர் சம்மேளனம் (Women’s Chamber of
Industry and Commerce – WCIC) ஆனது இலங்கையின் தேசிய சம்மேளனம்
என்பதுடன், பெண் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்சார் வணிகத்துறையிலுள்ள
பெண்களுக்கு ஆதரவளிக்கின்ற முதன்மை ஸ்தாபனமாகும். சமுதாயத்திற்கு பங்களித்து,
இந்த ஸ்தாபனம் வழங்குகின்ற பல வசதிகளின் மூலமாக பயன்பெற முடியும் என
நம்புகின்ற அனைத்து பெண்களும் இதன் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஒரு முதன்மையான நிகழ்வான WCIC Prathibhabhisheka ஆனது எந்த சூழ்நிலைக்கும்
சிறப்பாக முகங்கொடுத்து எதிர்நீச்சல் போட்ட மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு
பங்களித்துள்ள மிகச் சிறந்த பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு அங்கீகாரமளித்து,
வெகுமதியளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு தயவு செய்து தொடர்பு கொள்ளவும் : 076-6848080

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here