TMH குழுமத்தின் தலைவரும் சர்வதேச பொலிஸ் ஆணைக்குழுவின் பிரிகேடியர் ஜெனராலுமான கலாநிதி தர்மலிங்கம் தர்சனன் சர்வதேச மனித உரிமைகள் தின வைபவத்தில் கௌரவிப்பு

31

TMH குழுமத்தின் தலைவரும் சர்வதேச பொலிஸ் ஆணைக்குழுவின் பிரிகேடியர் ஜெனராலுமான கலாநிதி தர்மலிங்கம் தர்சனன் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச மனித உரிமைகள் தின வைபத்தில் சிறப்பு விருந்தினராகவும் உரையாளராகவும் கலந்து சிறப்பித்துள்ளார். அதன் போது மனித உரிமைகளை ஊக்குவித்து பாதுகாப்பதில் வெளிப்படுத்தியுள்ள ஆற்றலை கௌரவிக்கும் முகமாக அவருக்கு Human Rights Crusaders எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மனித உரிமைகள் துறையின் மேம்பாட்டுக்கு பங்களிப்பு செய்யும் ஆட்களையும் நிறுவனங்களையும் பாராட்டி கௌரவிப்பதற்காக கலாசார மற்றும் இராஜதந்திர உறவுகளுக்கான சர்வதேச ஆணைக்குழுவும் ஐக்கிய மனித உரிமைகள் சம்மேளனமும் இணைந்து மேற்படி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், கல்வியலாளர்கள் மற்றும் இதர சமூகத் தலைவர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். மடகாஸ்கார் நாட்டின் கொன்சியுலர் ஜெனரால் அவனித்ரா குமார் தண்டாமுடி, சர்வதேச குடிவரவுச் சட்டத்தரணி கவேட் ஸ்ரீநிவாச ராவ், புகழ்பெற்ற பெண்ணியல்வாத எழுத்தாளரான Smt Jwalitha மற்றும் பெண்கள் உரிமைகள் தொடர்பான செயற்பாட்டாளர் கலாநிதி வேதமதி தினேஷ் என சிறப்பு அழைப்பாளர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.“கண்ணியமான பழக்கங்கள் மற்றும் நிறுவன ரீதியான சமூகப் பொறுப்புகள் போன்ற விடயங்கள் மூலம் மனித உரிமைகள் துறையை மேம்படுத்துவதற்கு வர்த்தகத் துறைக்கு பெரும் பொறுப்புள்ளது. மனித மாண்புகள் மற்றும் சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கு உலகளவில் பெரும் பங்களிப்பை வழங்குவதற்கு வர்த்தக நிறுவனங்களால் முடியும்” என தர்சனன் தெரிவித்தார். நோக்குடன் கூடிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக புகழ்பெற்றுள்ள திரு தர்சனனின் நிருவாகத்தினதும் முகாமைத்துவத்தினதும் கீழ் ஏராளமான நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியினை அடைந்துள்ளன. Mother care International Global Foundation அமைப்பின் நிறைவேற்றுத் தலைவரும் ஸ்தாபகருமான அவர் ப்ளூ லேக் வோட்டர், ரொக்ஸ்பேரி இண்டர்நெஷனல், கிரீன் வெளி அக்ரோ ப்ளான்டேஷன், சிலோன் ஐலண்ட் டிரவல்ஸ் அன்ட் டுவர்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு தலைமைத்துவம் வழங்குகிறார். மேலும், சர்வதேச பொலிஸ் ஆணைக்குழுவின் இலங்கைக்கான பிரிகேடியர் ஜெனராலாகவும் விளங்குகிறார். அமைதிக்கான ஜோர்ஜ் வொஷிங்டன் பல்கலைக்கழகம் மற்றும் பொது நலவாய சமாதான பல்கலைக்கழகத்தில் நிதி முகாமைத்துவம் மற்றும் வர்த்தக நிர்வாகம் தொடர்பான முது தத்துவமாணி பட்டங்களை பெற்றுள்ள அவர் கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் பொறியியல், வர்த்தக முகாமைத்துவம், மனித வள முகாமைத்துவம், சந்தைப்படுத்தல் முகாமைத்துவம், வங்கியியல் மற்றும் நிதித் துறைகளுடன் தொடர்புடைய டிப்ளோமா பாடநெறிகளையும் பூர்த்தி செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here