Sterling Steels உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வில் புதிய முதன்மைவர்த்தகநாமமான “Sterling Ultra” மற்றும் அடுத்த தலைமுறை கூரைத்தீர்வு ஆகியனஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

25

E.B. Creasy & Co. PLC நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட BlueScope Lysaght Lanka (Private) Limited என்ற நிறுவனத்தின் மீள்நாமமிடலுடன் தோன்றியுள்ள புதிய நிறுவனமான Sterling Steels Limited என்ற நிறுவனம், அண்மையில் ITC Ratnadipa ஹோட்டலில் இடம்பெற்ற விமரிசையான நிகழ்வில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. Lysaght இற்குப் பதிலாக, இலங்கையில் 1ஆம் ஸ்தானத்திலுள்ள தரமான உருக்கிலான கூரைத் தீர்வுகள் வர்த்தகநாமமாக அமைந்துள்ள, நிறுவனத்தின் புதிய முதன்மை, உயர்ரக வர்த்தகநாமமான “Sterling Ultra” இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. தரம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றின் மீதான அர்ப்பணிப்பை மீளவும் வலியுறுத்தும் வகையில், இலங்கையில் Tata BlueScope Steels இன் ஏகபோக முகவராக  Sterling Steels தொடர்ந்தும் பெருமையுடன் செயற்படும்.              

அதன் பிரதான வர்த்தகநாம அறிமுகத்துடன் இணைந்ததாக, இலங்கைச் சந்தையில் முதல்முறையாக, புத்தாக்கம்மிக்க “MaxSeamTM 470” எனப்படும் அடுத்த தலைமுறை 360 கோணத்தில் பொருத்தப்படக்கூடிய கூரைத்தொகுதியையும் Sterling Steels Limited அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னணி வர்த்தக நிறுவனங்களின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள், புகழ்பெற்ற கட்டிடக்கலைஞர்கள் மற்றும் பொறியியலாளர்கள் மற்றும் ஏனைய மதிப்பிற்குரிய விருந்தினர்கள் என பலரும் இந்த அறிமுக நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளதுடன், நிறுவனத்தின் வரலாற்றில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மைல்கல்லாக மாறியுள்ளது.     

E.B. Creasy & Co. PLC நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சஞ்சீவ் ராஜரட்ணம் அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கருத்து வெளியிடுகையில், “BlueScope Lysaght Lanka நிறுவனம் தற்போது Sterling Steels Limited நிறுவனமாக பரிமாண மாற்றம் கண்டு, E.B. Creasy குடையின் கீழ் Lysaght இற்கு பதிலாக Sterling Ultra அறிமுகப்படுத்தப்பட்டு, MaxSeamTM 470 அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளமை எமது வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த தீர்வுகளை வழங்கும் எமது பயணத்தில் ஒரு முக்கியமான மேம்பாட்டைக் குறிக்கின்றது. எமது ஆழமான தொழிற்துறை அனுபவம், புத்தாக்கமான தயாரிப்பு வழங்கல்கள் மற்றும் தரத்தின் மீதான ஓயாத அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன், கூரை மற்றும் கட்டமைப்பு தயாரிப்புக்கள் துறையில் புதிய தர ஒப்பீட்டு நியமமாக மாறத் தலைப்பட்டுள்ளன. இலங்கைச் சந்தையில் எமது நீண்ட பாரம்பரியத்தைத் தொடர்ந்தும் கட்டியெழுப்பி, வளர்ச்சியை முன்னெடுக்கும் வாய்ப்பு நாம் மிகவும் பெருமைப்பட வேண்டிய ஒரு தருணமாக உள்ளது,” என்று குறிப்பிட்டார்.             

Sterling Steels Limited நிறுவனத்தின் தோற்றமானது, E.B. Creasy & Co. PLC நிறுவனத்தின் 146 ஆண்டு கால தொழிற்துறை தலைமைத்துவம், கூரை மற்றும் கட்டமைப்பு தயாரிப்புக்கள் துறையில் நிறுவனத்தின் (முன்னர் BlueScope Lysaght Lanka (Private) Limited என்ற நாமத்தில் இயங்கியது) 30 க்கும் மேற்பட்ட ஆண்டுகள் கொண்ட ஒப்பற்ற நிபுணத்துவம் ஆகியவற்றை இணைக்கின்ற ஒரு மூலோபாய நகர்வாக அமைந்துள்ளது. 1993 நவம்பரில் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச் சபையின் கீழ், ஆரம்பத்தில் BHP Steel Building Products Lanka (Pvt) Ltd நிறுவனத்தால் ஸ்தாபிக்கப்பட்ட Sterling Steels Private Limited நிறுவனம், இலங்கையில் உருக்கு கூரைகள் மற்றும் கட்டடங்களுக்கான கிளாடிங் தொகுதிகளை அபிவிருத்தி செய்து, தயாரித்து, சந்தைப்படுத்துவதில் நீண்ட காலமாக தனிப்பெயர் பெற்று விளங்குகின்றது. தற்போது E.B. Creasy & Co. PLC நிறுவனத்தால் அது கையகப்படுத்தப்பட்டுள்ளமை, நிறுவனத்தைப் பொறுத்தவரையில் வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்திற்கான புதிய யுகத்திற்கு வித்திட்டுள்ளதுடன், தனது பல்வகைப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உயர் வகுப்பு தயாரிப்புக்கள் மற்றும் தீர்வுகளை வழங்கும் ஆற்றலையும் மேம்படுத்தியுள்ளது.             

30 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட செழிப்பான வரலாற்றைக் கொண்டுள்ள இந்நிறுவனம், உயர் தர ZINCALUME® மற்றும் COLORBOND® உருக்கினை உபயோகித்து பல்வகைப்பட்ட கட்டட தயாரிப்புக்கள் மற்றும் தொகுதிகளை வழங்கி, கைத்தொழில் மூலப்பொருட்களை வழங்குவதில் நம்பிக்கைக்குரிய வழங்குனராக நன்மதிப்பைச் சம்பாதித்துள்ளது. இந்த மூலப்பொருட்கள் அனைத்தும், கைத்தொழில், வர்த்தக, வதிவிட மற்றும் பொது கட்டங்களின் பயன்பாடுகளுக்கு உகந்த வகையில் நவீன வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் கிடைக்கப்பெறுகின்றன. இலங்கை சந்தையில் பரிமாண மாற்றம் கண்டு வருகின்ற தேவைகளை தொடர்ச்சியாக நிறைவேற்றி, புத்தாக்கமான கட்டுமானத் தீர்வுகளை வழங்குவதில் Sterling Steels ஒரு முன்னோடியாகத் திகழ்ந்து வந்துள்ளது. மேலும், சூழல்நேய மூலப்பொருட்களின் பயன்பாடு மற்றும் எரிசக்தியை சேமிக்கும் தயாரிப்பு நடைமுறைகள் என்பன நிலைபேற்றியல் மீது நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன.   

MaxSeamTM 470 கூரைத்தொகுதியானது பாரிய கைத்தொழில், வர்த்தக மற்றும் களஞ்சியசாலை கட்டடங்களுக்கு உகந்ததாக, எந்த காலநிலைக்கும் தாக்குப்பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடமாடும் தொழிற்சாலையின் துணையுடன், வாடிக்கையாளர்களின் இடங்களுக்கு நேரடியாகச் சென்று அங்கேயே அவர்களுக்கு வேண்டிய விதத்தில் வடிவமைப்புச் செய்யப்படும் MaxSeamTM 470 ஆனது நீடித்த உழைப்பு, தலைசிறந்த பெறுபேற்றுத்திறன் மற்றும் எவ்விதமான குறைகளுமின்றிய தயாரிப்பை வழங்கி, திறன்மிக்க வழியில் அவை பெறப்பட்டு, பொருத்தப்படுவதை உறுதி செய்கின்றன. மிகவும் வலுவான COLORBOND® மற்றும் ZINCALUME® உருக்கு ஆகியவற்றைக் கொண்டு நிர்மாணிக்கப்படும் இத்தொகுதி, கலைநயம் மற்றும் அரிப்பிலிருந்து மேம்பட்ட வகையில் தடுப்புத்திறன் ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்குகின்றது. அதன் புத்தாக்கமான 360° Pittsburgh Double-Lock Seam பொருத்தல் முறைமையானது பான வகை கேன்கள் மற்றும் எரிபொருள் தாங்கிகளை ஒத்த பண்பு கொண்டதுடன், தொழிற்துறையில் இறுக்கமாக மூடுகின்ற, நீடித்து உழைக்கின்ற, ஒற்றைக்கூறு கொண்ட கூரைக் கட்டமைப்பை வழங்குகின்றது.         

இந்த மூலோபாய மேம்பாடுகளுடனும், தனது புதிய தாய் நிறுவனமான E.B. Creasy & Co. PLC  இன் பக்கபலத்துடனும், புத்தாக்கமான, உயர் தர கூரைகள் மற்றும் கிளாடிங் தீர்வுகளை வழங்கி, மகத்துவத்தில் தனது பாரம்பரியத்தை தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுத்து, இலங்கையில் தொழிற்துறை தராதரங்களுக்கு மீள்வரைவிலக்கணம் வகுப்பதற்கு Sterling Steels Limited தலைப்பட்டுள்ளது. தனது வளர்ச்சிச் சரித்திரத்தில் இப்புதிய அத்தியாயத்தினுள் காலடியெடுத்து வைக்கின்ற இந்நிறுவனம், ஒப்பற்ற தரம், நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் தனது வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றுவதில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here