SLIM DIGIS 2.3 விருதுகள் நிகழ்வு டிஜிட்டல் சந்தைப்படுத்தலின் தரத்தை மேம்படுத்தவுள்ளது  

36

இலங்கை சந்தைப்படுத்தல் கற்கை நிறுவனம் (Sri Lanka Institute of Marketing – SLIM) ஆனது ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட SLIM DIGIS 2.3 இன் 2023 பதிப்பு இடம்பெறவுள்ளமை தொடர்பில் பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளதுடன், இது சந்தைப்படுத்தல் துறையில் டிஜிட்டல் புத்தாக்கங்களின் முன்னிலையை, அங்கீகரித்து பாராட்டும் ஒரு தனித்துவமான தளமாகும். டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மேன்மையில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில், இந்த ஆண்டு SLIM DIGIS ஆனது போட்டியின் தரத்தை உயர்த்த புதிய, தரப்படுத்தப்பட்ட நுழைவு விண்ணப்பங்களால் உள்வாங்கப்படும் வேகமான சந்தைப் பரிணாமத்தையும், மேம்படுத்தப்பட்ட நுழைவு சமர்ப்பிக்கும் வழிமுறையையும் நெருக்கமாகப் பிரதிபலிக்கும் அம்சங்களை உள்ளடக்கும். SLIM DIGIS 2.3 க்கான நுழைவு விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, செப்டெம்பர் 25 ஆம் திகதி நிறைவடையும்.

2023 பதிப்பின் அறிமுகம் மற்றும் நுழைவுகளை ஏற்றுக்கொள்ள ஆரம்பிப்பது குறித்து அறிவித்த SLIM இன் தலைவரான சிந்தக பெரேரா அவர்கள் கருத்து வெளியிடுகையில், “SLIM DIGIS 2.3 இன் வலிமையை நாம் உள்வாங்கிக்கொள்ளும் போது, இது வெறுமனே தொழில்நுட்பம் மட்டுமல்ல, மாறாக, மக்களுடன் தொடர்புகொள்வது, அவர்களின் தேவைகளைப் புரிந்துகொள்வது, மற்றும் அவர்களுக்கு பெறுமானத்தை வழங்குவது என்பதை நாம் நினைவில் கொள்வோம். டிஜிட்டல் உலகத்திற்கான எமது பயணம் புத்தாக்கம், படைப்பாற்றல் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பாகும். எதிர்வரும் வாரங்களில், டிஜிட்டல் சந்தைப்படுத்தலின் பல்வேறு அம்சங்களில் ஆழமாக மூழ்கி, எமது வர்த்தகநாமத்தை மேம்படுத்தி, வெளிப்படையான பெறுபேறுகளைத் தரக்கூடிய மூலோபாயங்களை ஆராய்வோம். இந்த அற்புதமான பயணத்தை நாம் ஒன்றாக இணைந்து ஆரம்பிக்கும்போது, இதில் அனைவரையும் பங்கேற்கவும், நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்ளவும், கேள்விகளைக் கேட்கவும் முன்வருமாறு ஊக்குவிக்கிறேன். சந்தைப்படுத்துதலின் எதிர்காலம் டிஜிட்டல் மயமானது, மேலும் அதை வளர்ச்சி பெறச் செய்ய, வெற்றி மற்றும் அர்த்தமுள்ள இணைப்புகளின் எதிர்காலமாக மாற்ற நாம் தயாராக உள்ளோம். மேலும் தகவல் விபரங்களுக்கு காத்திருங்கள். டிஜிட்டல் உலகில் நம் தனித்துவமான முத்திரையைப் பதிப்போம்!” என்று குறிப்பிட்டார்.

டிஜிட்டல் அறிவாற்றலை ஊக்குவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட SLIM DIGIS 2.3, டிஜிட்டல் துறையை வடிவமைக்கும் ஆற்றல்மிக்க போக்குகளைப் பிரதிபலிக்கும் புதுமையான விருது வகைகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது. இந்த பதிப்பில் உள்ள அறிமுகங்களில் குறிப்பிடத்தக்கதாக “Creator/Influencer Digital Marketing” என்ற பிரிவு இடம்பெறவுள்ளது. வர்த்தகநாமத்தின் ஈடுபாட்டை மேம்படுத்தவும், விற்பனையைப் பெருக்கவும், தயாரிப்புகள் அல்லது சேவைகளை அடியொற்றி உற்சாக உணர்வை உருவாக்கவும் நுகர்வோர் உருவாக்கிய உள்ளடக்கம் மற்றும் செல்வாக்குமிக்க கூட்டாண்மைகளின் பரவலான பயன்பாட்டை இந்த விசேட விருதுகள் பிரிவு அங்கீகரிக்கிறது. இதற்கான நுழைவுகள், ஈடுபாட்டு அளவீடுகள், சமூக அடைவுமட்டம் மற்றும் படைப்பாளர் அல்லது செல்வாக்காளரின் உள்ளடக்கத்தின் ஆக்கபூர்வமான பயன்பாடு ஆகியவற்றின் சிக்கலான வலையமைப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதுடன், விளம்பர பிரச்சார செயல்திறனில் அவற்றின் தீர்க்கமான தாக்கத்தையும் நிரூபிக்க வேண்டும்.

“இன்றைய சூழலில், டிஜிட்டல் பொருளாதாரத்தின் எழுச்சியில் டிஜிட்டல் சந்தைப்படுத்தலானது மிகவும் முக்கியமான சந்தைப்படுத்தல் கருவியாக உருவெடுத்துள்ளது. சந்தைப்படுத்தலுக்கான தேசிய அமைப்பாக, SLIM ஆனது டிஜிட்டல் சந்தைப்படுத்தல் சமூகத்தின் திறன்கள் மற்றும் ஆற்றல்களை மேம்படுத்துவதற்கு ஒரு தொடர்ச்சியான முயற்சியை மேற்கொள்வதுடன், வர்த்தகநாமங்கள் மற்றும் வணிகங்களுக்கு சிறந்த பெறுபேறுகளைத் தந்த அவர்களின் தலைசிறந்த படைப்புகளை வெளிப்படுத்த ஒரு தளத்தை உருவாக்குகிறது. இந்த ஆண்டும், நாட்டில் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தலைவர்களாக மாறுவதற்காக “விறுவிறுப்பான” போட்டிக்கான பல நுழைவு விண்ணப்பங்களை நாம் எதிர்பார்க்கிறோம்,” என்று SLIM இன் நிகழ்வுகளுக்கான உப தலைவரான கயான் பெரேரா அவர்கள் குறிப்பிட்டார்.

SLIM DIGIS 2.3 க்கான நடுவர் குழாத்தின் தலைவரான அரோஷ பெரேரா, இந்த ஆண்டு போட்டியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கருத்து வெளியிடுகையில், “DIGIS தற்போது தொழில்முறை டிஜிட்டல் சந்தைப்படுத்துபவர்களுக்கான போட்டிக் களமாக வலுவாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது இலங்கையில் டிஜிட்டல் சந்தைப்படுத்தலில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகளுக்கு ஏற்ப, தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு, பரிணாம வளர்ச்சியடைந்து வரும் ஒரு விருது வழங்கல் திட்டமாகும். கடந்த ஆண்டு பிரிவுகளின் மட்டத்தை மேம்படுத்தினோம். இந்த ஆண்டு, போட்டியின் ஆழத்தில் கவனம் செலுத்தி, சிறந்த படைப்பை பிரகாசிக்கச் செய்வதற்கு, விண்ணப்பத்தின் விபரிப்பின் தரம் மற்றும் நெறிமுறையை மேம்படுத்துகிறோம். டிஜிட்டல் ஊடகத்தில் இணைக்கப்பட்ட சிந்தனை, யோசனைகள், செயல்படுத்தல் மற்றும் அவை உலகத் தரம் வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துவதை நாம் தொடர்ந்து ஊக்குவித்து, தட்டிக்கொடுக்கிறோம்,” என்று குறிப்பிட்டார்.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், SLIM DIGIS 2.3 க்கு ஒரு முக்கியமான மற்றும் மிகவும் முற்போக்கான மாற்றம் ஒன்றாக, ஒரு புதிய தரப்படுத்தப்பட்ட நுழைவு விண்ணப்பம் மற்றும் சமர்ப்பிப்பு அளவுகோல்களை அறிமுகப்படுத்தவுள்ளதுடன், இது போட்டியை மேம்படுததுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், உயர்தர, அதிக போட்டித்தன்மை கொண்ட விண்ணப்ப விபரிப்புகளுக்களை மதிப்பெண் அளவுகோல்களுடன் தொடர்புபடுத்துகிறது. இந்த நடவடிக்கையானது SLIM DIGIS நுழைவு விண்ணப்பங்களை மிகவும் ஈர்க்கும் வகையில் உலகளாவிய போட்டிகளுக்கு இணையாகக் கொண்டு வரும்.

SLIM DIGIS 2.3 க்கான செயல்திட்டத் தலைவரான ரஜீவ் டேவிட் அவர்கள், SLIM DIGIS 2.3 ஆனது சிறந்த டிஜிட்டல் நிபுணத்துவத்தின் கொண்டாட்டமாக இருக்கும் என்றும், சந்தைப்படுத்தல் களத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மூலோபாய சிந்தனாசிற்பிகள், படைப்பாளிகள் மற்றும் புத்தாக்குனர்களை ஒன்றிணைக்கும் என்றும் குறிப்பிட்டார். புதிய விருதுகள் மற்றும் மீள்மேம்பாட்டுடனான விருது பிரிவுகளின் அறிமுகம், டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மூலம் இதயத் துடிப்பின் வலுவான எதிரொலிக்கான தளத்தை வழங்குவதில் முன்னணியில் திகழ்வதற்கான SLIM இன் அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது. 

SLIM இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும்/நிறைவேற்றுப் பணிப்பாளருமான சனத் சேனாநாயக்க அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “SLIM DIGIS 2.3 இன் இந்த மதிப்புமிக்க விருதுகளைப் பெறுவது, ஒரு அணியின் இடைவிடாத அர்ப்பணிப்பு மற்றும் அவர்களின் கூட்டாளர்களின் அசைக்க முடியாத ஆதரவின் சான்றாகும். இந்த பாராட்டுக்கள் புத்தாக்கத்தின் வரையறைகளைத் மேல்தள்ளுவதற்கும் புதிய தொழில்துறை தரநிலைகளை அமைப்பதற்கும் நிறுவனரீதியான அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகின்றன. விருதுகளுக்காக போட்டியிடுகின்ற இந்த நிறுவனங்கள், தொழில்நுட்பத்தின் உருமாற்றத்தின் வலுவை நம்புகின்றன, மேலும் இந்த விருதுகள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், அவற்றுக்கும் மேலான தீர்வுகளை உருவாக்குவதற்கான அவர்களின் ஆர்வத்தை தூண்டுகின்றன. SLIM DIGIS 2.3 மூலம் இந்த நாட்டின் எதிர்காலத்தையும் மேலும் இணைக்கப்பட்ட எதிர்காலத்தையும் வடிவமைக்கும் தலைசிறந்த நிறுவனங்களை அங்கீகரிப்பதற்கான எமது பயணத்தைத் தொடர நாங்கள் கௌரவமும் ஊக்கமும் அடைகிறோம்,” என்று குறிப்பிட்டார்.

மேலும் தகவல் விபரங்கள் மற்றும் நுழைவு விண்ணப்பங்களுக்கான விபரங்களுக்கு, https://slim.lk/slim-digis ஐப் பார்வையிடவும் அல்லது 070 326 6988 என்ற இலக்கத்தினூடாக கங்கானி அவர்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தவும்.

SLIM தொடர்பான விபரங்கள் – https://slim.lk/slim-digis/

இலங்கை சந்தைப்படுத்தல் கற்கை நிறுவனம் (Sri Lanka Institute of Marketing -SLIM) இலங்கை சந்தைப்படுத்தல் தொழில் வல்லுனர்களுக்கான அதியுச்ச அமைப்பாகும். இது தொழில் துறையில் அதியுச்ச அளவில் தொழில் நிபுணத்துவ தர நிலைகளை ஊக்குவித்து, சந்தைப்படுத்தலில் மேன்மையை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. மிகவும் புகழ்பெற்ற SLIM DIGIS உட்பட SLIM இன் முயற்சிகள், சந்தைப்படுத்தலின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அதன் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காண்பிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here