Scope Cinemas, இலங்கையில் சினிமாத்துறையில் புரட்சிக்கு வித்திட்டு, IMAX®️ இனை இலங்கைக்கு அறிமுகப்படுத்துகின்றது  

28

Scope Cinemas, இலங்கையில் சினிமா அனுபவத்தில் புரட்சிக்கு வித்திட்டு, 2024 ஜுலை 26 அன்று ஹவ்லொக் சிட்டி வர்த்தகத் தொகுதியில் தனது புத்தம்புதிய IMAX®️ திரையரங்கத்தை திறந்து வைக்கவுள்ளது. மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆரம்பம் இலங்கையில் திரைப்பட ரசிகர்களுக்கு ஒலி,ஒளி ஏற்பாட்டில் பரவசப்படுத்தும் ஒப்பற்ற அனுபவத்திற்கு உத்தரவாதமளிப்பதுடன், நாட்டில் பொழுதுபோக்குத் துறையில் சாதனைமிக்க தருணமாகவும் மாறியுள்ளது. IMAX®️ அதன் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் தனித்துவமான திரைப்பட காட்சிப்படுத்தல் திறன்களுக்காக உலகளாவில் புகழ்பெற்றுள்ளது.     

அந்த வகையில், ஹவ்லொக் சிட்டி Scope Cinemas Multiplex இலுள்ள IMAX®️ திரையரங்கம், இப்போதைக்கு மிகவும் நவீன திரையரங்க அனுபவத்தை வழங்கும் அடுத்த தலைமுறை லேசர் காட்சிப்படுத்தல் முறைமையான Laser ஐக் கொண்டுள்ளது. அற்புதமான ஓடியோவுக்காக IMAX®️ Precision Sound ஒலியமைப்பு, Design இருக்கை வசதிகளுடன் IMAX®️ Immersion ஆகியவற்றுடன் இணைந்த அதிநவீன தொழில்நுட்பத்துடன், திரைப்படத்தை தெளிவாக அமர்ந்து பார்ப்பதற்கு ஏற்றவாறு ஒவ்வொரு இருக்கையும் அரங்க இருக்கை வடிவமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஒன்றிணைந்து, தற்போது உலகில் மிகவும் பரவசமான சினிமா திரையரங்க அனுபவத்தை வழங்குகின்றன.         

Scope Cinemas இலங்கையின் முதலாவது பல்லுணர்திறன் ஆடம்பர பொழுதுபோக்கு நிறுவனமாகத் திகழ்வதுடன், 2017 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு சினிமாத் துறையில் அனைத்திற்கும் முன்னோடியாகக் காணப்படுகின்றது. இலங்கை மக்கள் தாம் திரைப்படம் பார்க்கச் செல்வதற்கான டிக்கெட்டுக்களை முற்பதிவு செய்யும் முறையில் புரட்சிக்கு வித்திட்டு, தனது நம்பகமான இணையவழி முற்பதிவு முறைமையை இலங்கையில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தி பாரியதொரு அலையைத் தோற்றுவித்தது. இப்புத்தாக்க அணுகுமுறையானது, நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய சிரமங்களைப் போக்கி, இருக்கைகளை தெரிவு செய்யும் சௌகரியத்தை வழங்கி, இணையத்தின் மூலமாகவே உணவு மற்றும் பான வகைகளை பெற்றுக்கொள்வதற்கு வழிவகுத்தது. அத்துடன் தனது மொபைல் செயலி (mobile app) மூலமாக பயனர்கள் தமது ஸ்மார்ட்போன்களை உபயோகித்து எவ்விதமான சிரமங்களுமின்றி டிக்கட்டுகளை முற்பதிவு செய்யவும், உணவுகளைப் பெற்றுக்கொள்ளவும் இடமளித்து, வாடிக்கையாளர்களின் அனுபவத்தையும் Scope Cinemas மேம்படுத்தியது.         

ஆடம்பரம், சௌகரியம் மற்றும் தொழில்நுட்பத்திற்கும் அப்பாற்பட்ட விசேட அனுபவங்கள் மீது இவ்வர்த்தகநாமம் கொண்டுள்ள அர்ப்பணிப்புடன், முதல்நாள் காட்சிகள், ரசிகர்களுக்கான விசேட காட்சிகளை அறிமுகப்படுத்தி திரைப்பட அனுபவத்தில் புரட்சிக்கு வித்திட்டுள்ள Scope Cinemas, திரைப்பட கருப்பொருளைக் கொண்ட அலங்காரங்கள் மற்றும் விளம்பர ஊக்குவிப்பு ஏற்பாடுகளுடன் திரையரங்கத்தினுள் நுழையும் இடமெங்கும் தத்ரூப அனுபவத்தையும் வழங்குகின்றது. புத்தம்புதிதாக தயாரிக்கப்பட்ட பர்கர் உணவுகள் முதல் சூடான, குளிரான பான வகை போன்ற தனித்துவமான சினிமா உணவுத் தெரிவுகளையும் Scope Cinemas திரையரங்குகள் வழங்குவதுடன், திரைப்பட ரசிகர்கள் தாம் திரைப்படத்தை அனுபவிக்கும் சமயத்தில் முழுமையான உணவு அனுபவத்தையும் இது உறுதிப்படுத்துகின்றது. அதன் VIP Gold Class திரையரங்குகள் சாய்வு இருக்கைகள், வசதியான போர்வைகள் மற்றும் பிரத்தியேகமயப்படுத்தப்பட்ட சேவைகளுடன் இன்னும் மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்குவதுடன், உயர் மட்டத்திலான நன்மைகளுடன் உண்மையில் முதற்தர திரைப்பட அனுபவத்தை வழங்குகின்றன. மேலும், டிக்கட் முற்பதிவு முதற்கொண்டு, விருந்தினர்களின் இருக்கைகளுக்கே உணவு மற்றும் பான வகைகளை நேரடியாக பரிமாறுவது வரை அனைத்தையும் தங்குதடையின்றி ஏற்பாடு செய்து, முழுமையான உதவிகளை வழங்கும் வகையில் பயிற்றுவிக்கப்பட்ட பணியாளர்களுடன், மகத்தான வாடிக்கையாளர் சேவைகளுக்கும் இந்நிறுவனம் புகழ்பெற்றுள்ளது.               

Scope Cinemas பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான துஷான் ரங்கன மீமனகே அவர்கள் மகிழ்ச்சியுடன் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “எமது IMAX®️  திரையரங்கமானது எமது வலையமைப்பின் கிரீடமாக மாறவுள்ளதுடன், இலங்கையில் இந்த அனுபவத்தை முதல்முறையாக கொண்டுவருவதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம். நாம் செயல்பட ஆரம்பித்த காலம் முதற்கொண்டே, நாட்டில் சர்வதேச தராதரங்களை நிலைநாட்டி, ஒப்பற்ற சினிமா அனுபவங்களை வழங்கும் நோக்குடன் Scope Cinemas செயல்பட்டு வந்துள்ளது. இது தொடர்ந்தும் எமது குறிக்கோளாக உள்ளதுடன், இலங்கைக்கு IMAX®️  இனைக் கொண்டு வருவது, எமது பயணத்தில் சாதனைமிக்கதொரு தருணமாக மாறியுள்ளது. வியப்பூட்டும் புதிய பொழுதுபோக்கு தொழில்நுட்பத்துடன், பார்வையாளர்களை பரவசப்படுத்துவதற்கு நாம் ஆவலாக உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.     

Scope Cinemas இன் நிறைவேற்றுத் தலைவரான நவீன் காதர் அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “இலங்கை மக்களுக்கு புரட்சிகரமான சினிமா அனுபவத்திற்கான வாய்ப்பினை வழங்குவது என்பது நாம் எப்போதும் பேரார்வத்துடன் முன்னெடுத்து வரும் ஒரு விடயம். ஆகவே, IMAX®️  ஆரம்பத்தை தயார்படுத்துவதற்கு நாம் கடினமாக உழைத்துள்ளதுடன், அனைத்தும் நேர்த்தியாக அமைவதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தியுள்ளோம். எமது வாடிக்கையாளர்களுக்கு இலங்கையிலேயே புதிய, உலகத்தரம் வாய்ந்த, உயர் மட்ட, பாரிய வடிவிலான திரைப்பட அனுபவத்தை வழங்குவதற்கு IMAX®️  உடன் கைகோர்க்கின்றமை எமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை,” என்று குறிப்பிட்டார்.     

2024 ஜுலை 26 இனை இப்போதே உங்கள் நாட்காட்டியில் குறித்து வைத்துக்கொள்வதுடன், ஹவ்லொக் சிட்டி வர்த்தகத்தொகுதியில் அமைந்துள்ள Scope Cinemas இன் புதிய IMAX®️ திரையரங்கத்தில் அற்புதமான திரைப்பட்ட அனுபவத்தின் பரவசத்திற்கு தயாராகுங்கள். இது நீங்கள் தவற விடாமல் பார்க்கவேண்டிய சினிமா புரட்சி!       

மேலதிக விபரங்களுக்கு தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்:

சேஸி கோர்டஸ் – சந்தைப்படுத்தல் மற்றும் வெகுசன உறவுகள் தலைமை அதிகாரி, Scope Cinemas Pvt Ltd

[email protected]

+94779579955

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here