Safe Care Facilities Management தனியார் நிறுவனத்துக்கு சிறந்த தொழில்முயற்சியாளர் விருது

11

Safe Care Facilities Management தனியார் நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்கான மேல் மாகாண சிறந்த தொழில்முயற்சியாளர் விருது விழாவில் சேவை பிரிவில் (விருந்தோம்பல், சுற்றுலா, இதர சேவைகள்) பாரியளவிலான பிரிவின் திறமைச் சான்றிதழ் விருதை வெள்றுள்ளது. தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையும் தேசிய வணிகச் சபையும் இணைந்து ஏற்பாடு செய்த மேற்படி விருது விழா அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. சுமார் 15 ஆண்டு கால அனுபவத்தை கொண்ட Safe Care நிறுவனத்தில் 1250 இற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. தூய்மை பணி மற்றும் வசதி அளித்தல் துறையின் முன்னோடியாக திகழும் மேற்படி நிறுவனம் நாடெங்கிலும் 500 இற்கும் மேற்பட்ட கருத்திட்டங்களை நிறைவு செய்துள்ளது. மேற்படி நிறுவனம் அலுவலகங்கள், தரைப்பகுதி, ஜன்னல்கள், காப்பற் போன்றவற்றை சுத்தப்படுத்தல், புழுதி, கழிவுகளை அப்புறப்படுத்தல் மற்றும் மீள்சுழற்சி போன்ற சேவைகளை வணிக மற்றும் குடிமனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறதுபீடைக்கொல்லி, கழிவுத் தொட்டில் சேவைகள்> காப்பற் மற்றும் இருக்கைகளை சவர்க்காரத் திரவம் இட்டு தூய்மைப்படுத்தல், பீலி மற்றும் கண்ணாடிகளை சுத்தப்படுத்தல், விடுமுறை விடுதிகள் முகாமைத்துவம் போன்றவை மேற்படி நிறுவனத்தின் இதர சேவைகளாகும். குறை அழுத்த சலவைகள், சுகாதார சேவை நிறுவனங்களில் தூய்மை பணிகளை மேற்கொள்ளுதல், கட்டுமானப் பணிகளுக்கு பின்னர் அந்த வளாகத்தை சுத்தப்படுத்தல் போன்ற விடயங்களிலும் Safe Care நிறுவனம் சிறப்பு ஆற்றலை கொண்டுள்ளது. பெரும் பரப்பு வரை வியாபித்துள்ள சேவைகளை வழங்குவதால் தூய்மை பணி சேவைகளை மேற்படி நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். செயலாற்றுகை, பாதுகாப்பு, சூழல் ஒழுங்குபடுத்தல் உள்ளிட்ட சகல தர நியமங்களுக்கும் உட்பட்டு சேவைகளை வழங்கி வரும் மேற்படி நிறுவனம் ISO 9001-2015 தரச் சான்றிதழையும் பெற்றுள்ளது. முறையான பயிற்சியை பெற்றுள்ள 1250 இற்கும் மேற்பட்ட பணியாளர்கள் உரிய நேரத்தில் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப நியாயமான விலைகளில் சேவைகளை வழங்குகிறது. அரச மற்றும் தனியார் வங்கிகளும் நிறுவனங்களும், ஆடைத்தொழிற்சாலைகள், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளுக்கு சேவைகளை வழங்கும் இந் நிறுவனம் தூய்மையானதும் தொழில்முறை தோற்றத்துடன் கூடியதுமான சேவைச் சூழலை உறுதிப்படுத்துகிறது. குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆட்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கியுள்ள Safe Care நிறுவனம் பசுமைத் தீர்வுகள் மற்றும் நிலைபேறான தன்மை தொடர்பாகவும் கூடுதல் கவனம் செலுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here