Richwin Investment and Credit நிறுவனத்துக்கு Pinnacle Sri Lanka  மற்றும் People’s Excellency இரட்டை விருதுகள்

17

Richwin Investment and Credit நிறுவனம் Pinnacle Sri Lanka 2024 விருது விழாவில் நிதிச் சேவை உயர் விருதை வென்றுள்ளது. கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற மேற்படி விருது விழாவில் அதன் பணிப்பாளரும் தலைமை நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி சம்பத் நிரோஷன சந்திரசிறி மற்றும் பணிப்பாளர் சானுக்க பிரதீப் ஆகியோர் விருதை பெற்றுக்கொண்டனர். இந் நிறுவனம் People’s Excellency 2024 விருது விழாவில் ஆண்டின் மேலான புத்தாக்க நிறுவனம் என்ற விருதையும் வென்றுள்ளது.

Richwin Investment and Credit நிறுவனம் பரந்துபட்ட துறைகள் வரை விரிந்துள்ள நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதோடு தொழில்முயற்சியும் தனியார் கடன்களும், காணிகள், வாகனங்கள் மற்றும் பிணைகளின் மீது வழங்கும் கடன்கள், தங்கக் கடன்கள் மற்றும் குழு கடன்கள் அவற்றில் முக்கிய இடத்தை பெறுகின்றன. மேற்படி நிறுவனம் கடந்த காலம் முழுவதுமாக வாடிக்கையாளர்களையும் தொழில்முயற்சிகளையும் வலுவூட்டுவதை இலக்காக கொண்ட பல்வேறு  நுண் நிதித் தீர்வுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முதலீடுகளுக்கு மாதாந்த அல்லது வருடாந்த வருமானம், அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு உடன்படிக்கை சான்றிதழொன்றை வழங்குதல், முதலீடுகள் மீதான கடன் பெறுவதற்கான இயலுமை என ஏராளமான அனுகூலங்கள் இந் நிறுவனத்துடன் முதலீட்டில் ஈடுபடும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. முதலீட்டார்களுக்கு இலவசமாக ஆயுள் காப்புறுதியை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி நிறுவன வலையமைப்புக்குச் சொந்தமான ரிச்வின் பிளாசா தனியார் நிறுவனம் உலகப் புகழ் பெற்ற வர்த்தகநாமங்களின் கீழ் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மின் சாதனப் பொருள் விற்பனைத் துறையில் முன்னணி இடத்தை வகிக்கிறது. இந் நிறுவனத்தின் கிளைகள் நீர்கொழும்பு, கட்டானை மற்றும் ஜாஎல ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன. கடன் அட்டைகள் அல்லது பிணையாளர்கள் இல்லாத இலகு தவணை முறையில் மேற்படி நிறுவனத்தில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும். ரிச்வின் பிளாசா நிறுவனம் கடன் அட்டை இல்லாமலே இலகு தவணைத் திட்டங்களை வழங்கும் இலங்கையின் ஒரே நிறுவனமுமாகும்.தரம் மற்றும் வாடிக்கையாளர்களின் சௌகரியம் மீது கூடுதல் கவனம் செலுத்தும் இந் நிறுவனம் விற்பனைக்கு பிந்திய சிறந்த சேவையினை வழங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here