கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் ஒகஸ்ட் 23 முதல் 25ஆம் திகதி வரை நடைபெற்ற கண்காட்சியில் செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் தனது புகழ்பெற்ற 7 ஸ்டார் வர்த்தக நாமத்தின் கீழ் பெருமையுடன் பங்குபற்றியது.
தரம், புதுமை மற்றும் வாடிக்கையாளரின் திருப்தி என்பது குறித்து கவனம் செலுத்தும் உணவு மற்றும் குடிபான தொழல்துறையில் முன்னணியாளர் என்ற ரீதியில் வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குபற்றுனர்களுடன் ஈடுபாடுகளை ஏற்படுத்த இந்த நிகழ்வு செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனத்துக்கு சிறந்ததொரு தளமாக அமைந்தது. இந்தக் கண்காட்சியில் செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் தொழில்துறையின் தனது தலைமைத்துவம், நிறுவனத்தின் முன்னணி கோதுமை மா உற்பத்திகள் போன்றவற்றைக் காட்சிப்படுத்தியிருந்தது.
வாடிக்கையாளரின் திருப்தி மற்றும் சந்தை இருப்புக்கான அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவது, குறிப்பாக சில்லறை நுகர்வோர் (B2C) மத்தியில், செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனத்தின் தயாரிப்புகளின் உயர்ந்த தரநிலைகள் மற்றும் பல்துறைத்திறன் ஆகியவற்றை உயர்த்தி, அவை வீடுகள் மற்றும் உணவு சேவை வணிகங்களின் பல்வேறு தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்கின்றன என்பதைக் காட்டுகிறது.
விருந்தினர்களுடன் ஈடுபாட்டை ஏற்படுத்தவும், தயாரிப்புக்கள் குறித்த அனுபவத்தை வழங்கும் நோக்கிலும் செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்தது. 7 ஸ்டார் கோதுமை மாவினால் தயாரிக்கப்பட்ட பல்வேறு தயாரிப்புக்கள் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டதுடன், தயாரிப்புக்களின் வேறுபட்ட தரங்கள் மற்றும் அவற்றின் அமைப்பு முறைகள் பற்றிய அனுபவத்தை அவர்களால் பெற்றுக்கொள்ள முடிந்தது.
புகழ்பெற்ற சமையலகலை நிபுணரான துஷாந்தி மதநாயக நேரடியான சமையல் மற்றும் பேக்கிங் அமர்வுகளை நடத்தி விருந்தினர்களுடன் ஈடுபாட்டை ஏற்படுத்தினார். இவர் 7 ஸ்டார் போதுமை மாவைப் பயன்படுத்தி உணவுகளைத் தயாரித்ததுடன், பார்வையாளர்களையும் இதில் இணைத்துக்கொண்டார். இந்த அமர்வுகள் நிறுவனத்தின் தயாரிப்புகளின் பல்துறை மற்றும் மேன்மை பற்றிய பெறுமதி மிக்க தகவல்களை வழங்கின.
கண்காட்சியைப் பார்வையிட வந்தவர்களுக்குத் தேவையான தொழில்நுட்ப விடயங்கள், பிரச்சினைளைத் தீர்ப்பதற்கான வழிகள் மற்றும் உணவுத் தயாரிப்பு முறைகள் போன்ற பல்வேறு தீர்வுகளை வழங்குவதற்காக செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனத்தின் தொழில்நுட்ப மற்றும் விநியோகப் பிரிவின் உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர். இந்தப் பிராந்தியத்தில் செரண்டிப் கோதுமை மா ஆலையின் தயாரிப்புக்களை எவ்வாறு அணுகுவது என்ற வழிகாட்டல்களும் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டன.
இலங்கை உணவு தயாரிப்பாளர்கள் சங்கம் (SLFPA) லங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள் (LECS) உடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், உணவுப் பொருட்கள் மற்றும் பொதியிடலின் அண்மைய கண்டுபிடிப்புக்கள் மற்றும் இத்துறையின் போக்குளை வெளிப்படுத்தும் வகையில் உணவு மற்றும் குடிபானத் துறையில் உள்ள முன்னணியாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.