Pearson BTEC Higher Education Forum 2024 நிகழ்வானது 2024 ஒக்டோபர் 23 அன்று கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலின் லோட்டஸ் நிகழ்வு மண்டபத்தில் இடம்பெற்றதுடன், இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர், மேதகு அன்ட்ரூ பற்றிக் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்துள்ளார். Pearson BTEC கல்வித் தகைமைகளை வழங்கும் உயர் கல்வி நிறுவனங்கள் மத்தியில் மகத்துவமாகத் திகழ்கின்றவற்றைக் கௌரவிக்கும் வகையில் Pearson UK ஆல் ஏற்பாடு செய்யப்படுகின்ற இந்த வருடாந்த நிகழ்வானது இலங்கையின் உயர் கல்வித் துறையின் நாட்காட்டியில் மிகவும் முக்கியமானதொரு நிகழ்வாகக் காணப்படுகின்றது. நாடெங்கிலுமிருந்து மிகச் சிறப்பாகச் செயற்படுகின்ற Pearson அங்கீகாரம் பெற்ற BTEC மையங்களை ஒரே மேடைக்கு கொண்டு வருகின்ற நிகழ்வாக அமைந்துள்ளதுடன், சர்வதேச ரீதியாக அங்கீகாரம் பெற்ற Pearson BTEC கல்வித் தகைமைகளுக்கு உயர் தரத்திலான கற்றல் அனுபவங்களை வழங்குவதில் மேற்குறிப்பிட்ட மையங்களின் அர்ப்பணிப்பைப் போற்றும் நிகழ்வாகவும் காணப்படுகின்றது. உயர் கல்வித் துறையில் முக்கியமான பிரபலங்கள் ஒன்றுகூடி தமக்கிடையில் அறிமுகங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கான முக்கியமான வாய்ப்பினையும் இந்நிகழ்வு வழங்கியுள்ளது.
Pearson அங்கீகாரம் பெற்ற BTEC மையங்கள் பலவும் இந்நிகழ்வில் பிளாட்டினம், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் தரப்படுத்தலைப் பெற்றுக்கொண்டதுடன், 2023 ஆம் ஆண்டின் அவற்றின் மிகச் சிறந்த பெறுபேறுகளுக்காக விசேட விருதுகளும் வழங்கப்பட்டன. கல்விரீதியான வெற்றி மற்றும் உயர்மட்ட கல்வியை வழங்குவதில் முறையே அந்த கல்வி நிறுவனங்களின் ஓயாத அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கான அங்கீகாரமாக இவ்விருதுகளும், பாராட்டுக்களும் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக BTEC கல்வித் தகைமைகளை வழங்கி, இலங்கையில் தனது அர்ப்பணிப்புமிக்க சேவையின் 50 ஆண்டுகளை Pearson எட்டியுள்ள தருணத்தில், இந்த ஆண்டு Pearson BTEC Higher Education Forum நிகழ்வானது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியது.
இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகரான மேதகு அன்ட்ரூ பற்றிக் அவர்கள் நிகழ்வில் உரையாற்றுகையில், கல்வித்துறையில் ஐக்கிய இராச்சியத்திற்கும், இலங்கைக்கும் இடையில் காணப்படும் வலுவான பிணைப்பினை வலியுறுத்தினார். “BTEC கல்வித் தகைமைகளைப் பொறுத்தவரையில் Pearson இன் இரண்டாவது பாரிய சர்வதேச சந்தையாக இலங்கை பெருமையுடன் திகழ்வதுடன், இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் வலுவான கல்விப் பிணைப்பை இது பிரதிபலிக்கின்றது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில், நாடெங்கிலுமுள்ள 40 க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களிலிருந்து 100,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஐக்கிய இராச்சியத்தின் உச்சப் பட்டப்படிப்பொன்றை கட்டுபடியான வழிமுறைகளின் கீழ் BTEC வழங்கும் 2+1 முறைமை மூலமாகப் பெற்று பயனடைந்துள்ளனர். வணிகம், பொறியியல், நவநாகரிக ஆடை வடிவமைப்பு மற்றும் உளவியல் என பல்வேறு துறைகளில் பல்வகைப்பட்ட தகைமைகளை இது வழங்குவதுடன், இன்றைய சர்வதேச பொருளாதாரப் பரப்பில் சிறந்த விளங்குவதற்குத் தேவையான நடைமுறைத் திறன்களை பட்டதாரிகளுக்கு வழங்கி, இலங்கையில் எதிர்கால தொழிற்படையை மேம்படுத்தி வருகின்றது. BTEC போன்ற மேடைகள் மூலமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவானது கதவுகளைத் திறந்து, வாய்ப்புக்களைத் தோற்றுவிக்கின்றது என்பதைக் கூறுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
Pearson தெற்காசியாவுக்கான வேலைவாய்ப்பு மற்றும் தகைமைகள் துறைப் பணிப்பாளரான பிரமிளா போல்ராஜ் அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “இலங்கை மாணவர்கள் Pearson BTEC கல்வித் தகைமைகளை தெரிவு செய்வதன் மூலமாக, பரந்துபட்ட துறைகளில் உயர் கல்விக்கான வாய்ப்புகளுடன், தமது வேலைவாய்ப்புத் திறனையும் மேம்படுத்திக் கொள்கின்றனர். இந்த வழித்தடமானது மாணவர்கள் தமது தொழில் இலக்குகளை அடைந்து கொள்வதற்கு அவர்களுக்கு வலுவூட்டுவது மாத்திரமன்றி, தேசத்தில் தொழிற்திறன் கொண்ட தொழிற்படையை அதிகரிப்பதற்கும் பங்களிக்கின்றது. Pearson க்கு ஆதரவளித்து வருகின்ற பெறுமதிமிக்க எமது கூட்டு கல்வி நிலையங்களுக்கும், அவற்றில் கற்கின்றவர்களுக்கும் நான் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்,” என்று குறிப்பிட்டார்.
சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்படுகின்ற பட்டப்படிப்புக்களை நாடுகின்ற மாணவர்களுக்கான முக்கியமான வழித்தடமாக மிக நீண்டகாலமாக பெயர்பெற்று விளங்கும் Pearson BTEC கல்வித் தகைமைகள், ஐக்கிய இராச்சியத்தின் உயர் கல்வித் தகைமைகளுக்கான கட்டமைப்புடன் ஒன்றியுள்ளதுடன், தமது கல்வி இலக்குகளை அடையப்பெறுவதில் ஐக்கிய இராச்சியத்தின் கலைமாணிப் பட்டமொன்றை, சிக்கமான வழியில் பெற்றுக்கொள்வதற்கு பெருந்தொகையான மாணவர்களுக்கு உதவியுள்ளது. மாணவர்கள் தமது பட்டப்படிப்பை இலங்கையிலோ அல்லது ஐக்கிய இராச்சியத்திற்கான மாற்றல்களைப் பெற்றோ மேற்கொள்ளும் தெரிவைக் கொண்டுள்ளமை, Pearson BTEC கல்வித் தகைமைகளின் சர்வதேச அங்கீகாரத்தையும், மதிப்பையும் பிரதிபலிக்கின்றது. இலங்கை மாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்குவதில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக Pearson BTEC முக்கிய பங்கு வகித்துள்ளதுடன், உள்நாட்டிலும், சர்வதேசரீதியாகவும் வாய்ப்புக்களுக்கு வழிவகுத்துள்ளது.
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான Pearson இன் பிரதிப் பொது முகாமையாளரான சூரியா பிபிலே அவர்கள் இது குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கையில், “BTEC கட்டமைப்பானது கல்வியறிவை மாணவர்களுக்கு வழங்குவது மாத்திரமன்றி, நிஜ உலகின் பயன்பாடுகளுக்கு தேவையான நடைமுறைத் திறன்களையும் வழங்கும் தனித்துவமான ஸ்தானத்தில் காணப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டு இலங்கையில் BTEC மையங்களுக்கு மற்றுமொரு மகத்தான ஆண்டாக அமையப்பெற்றது. கணிசமான அளவில் சந்தை வளர்ச்சி கண்டுள்ளமையால், தமது கல்வி மற்றும் தொழில் இலக்குகளை எட்டுவதற்காக BTEC வழித்தடத்தைப் பின்பற்றும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எமது BTEC சர்வதேச மட்டம் 3 இன் வளர்ச்சியானது மிகவும் குறிப்பிடத்தக்கது,” என்று கூறினார்.
Pearson அங்கீகாரம் பெற்ற BTEC கல்வி மையங்களின் சாதனைகளைக் கொண்டாடுவதற்குப் புறம்பாக, நாட்டில் BTEC தகைமைகளின் விசாலமான நற்பலன்களும் இந்த அமர்வின் போது சுட்டிக்காட்டப்பட்டன. உதாரணத்திற்கு BTEC Higher National Diploma க்கள் பிரயோகக் கற்றல் மீதான இலக்கு, மாணவர்கள் நடைமுறை, ஆளுமை மற்றும் விமர்சன சிந்தனைத் திறன் ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள உதவுதல் ஆகியவற்றுக்காக அங்கீகாரம் பெற்றுள்ளன. இந்த தகைமைகள் ஐக்கிய இராச்சியத்திலும், ஏனைய இடங்களிலும் தொழில்தருநர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களால் மிகவும் நாடப்படுகின்றவையாக காணப்படுவதுடன், வேலைவாய்ப்பு அல்லது மேற்படிப்புக்கு தங்குதடையின்றிய வழித்தடத்தை வழங்குகின்றன. தமது வாழ்வில் தொழிலில் முதல் அடியை எடுத்து வைக்க விரும்புகின்றவர்கள் முதல், மேற்படிப்பின் மூலமாக தமது தொழில்வாய்ப்புக்களை மேலும் மேம்படுத்திக் கொள்ள விரும்புகின்றவர்கள் வரை பல்வகைப்பட்ட பயிலுனர்களுக்கும் Pearson BTEC தகைமைகள் உதவுகின்றன.
Pearson BTEC தொடர்பான கூடுதல் தகவல் விபரங்களுக்கு அல்லது Pearson சர்வதேச வலையமைப்பின் அங்கமாக மாறுவதற்கு தயவு செய்து <Link> என்ற தளத்தைப் பாருங்கள் அல்லது <Number> என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துங்கள்.