2024 ஆம் ஆண்டில் இலங்கையில் ஆகச் சிறந்த பரீட்சைப் பெறுபேறுகளை உருவாக்கித் தந்த Online கல்வி நிறுவனமான PassMe கல்வி நிறுவனம் People’s Excellency Awards 2024 விருது விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. தரமான கல்விக்கு புது அர்த்தம் கற்பிக்கும் வகையில் 10 தமது ஆண்டு கால பயணத்தின் திருப்புமுனையாக Pinnacle Awards 2024 விருது விழாவில் ஆண்டின் சிறந்த கணித ஆசிரியராக PassMe தனியார் நிறுவனத்தின் ஸ்தாபகரும் முன்னணி சாதக சிந்தனை பேச்சாளரும் எழுத்தாளருமான பொறியிலாளர் காவிந்த இரோஷனுக்கு (K. V. Iroshan) விருது வழங்கப்பட்டுள்ளது. இலங்கையிலும் மேலும் ஐந்து நாடுகளிலுமுள்ள மாணவர்களுக்கு இணைய வழி ஊடாக கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள PassMe கல்வி நிறுவனம் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் நடாத்தும் சாதாரணத் தரப் பரீட்சைக்கும் உயர் தரப் பரீட்சைக்கும் உள்நாட்டு மாணவர்களுக்கும் Edexcel, AQA மற்றும் OCR ஆகிய நிறுவனங்களால் நடாத்தப்படும் வெளிநாட்டுப் பரீட்சைகளுக்கு வெளிநாட்டு மாணவர்களுக்கும் கல்வி போதிக்கின்றது.மாணவர்களின் திறமைகளை பாராடடும் வகையில் நாடளாவிய ரீதியில் நடாத்தப்படும் PassMe Golden Awards கணிதப் போட்டிகள் ஆண்டு தோறும் கொழும்பு BMICH வளாகத்தில் ஏற்பாடு செய்யப்படுவதோடு அதில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் விருதுகளை வழங்கப்படுகின்றன. கல்வி நிறுவனம் என்ற வட்டத்துக்குள் தம்மை சுருக்கிக்கொள்ளாது இலங்கையில் முதல் தடவையாக உயிருள்ள கணித நூலை உருவாக்கி கலப்பு தொழில்நுட்ப நூல் வெளியீட்டின் முன்னோடியாக தடம் பதித்துள்ள PassMe நூல் வெளியீட்டு நிறுவனம் 2023/2024 ஆண்டுக்கான ஆண்டின் சிறந்த புத்தாக்க நூல் வெளியீட்டு நிறுவனத்துக்கான விருதையும் வென்றுள்ளது. பொருளாதார ரீதியாக பின்னடைந்துள்ள மாணவர்களுக்கு இலவசமாக கற்பதற்கு வாய்ப்பாளித்து கல்வியின் சம உரிமை சகலருக்கும் உண்டு என்பதை பெரிதும் நம்புவதாலேயே PassMe மற்றும் PassMe Video APP செயலிகளை இந் நிறுவனம் உருவாக்கியுள்ளது. தொடர்ச்சியாக 10 ஆண்டுகளாக தரமான கல்வியின் பயன்களை அடைந்து வரும் PassMe நிறுவனத்தின் ஆயிரக்கணக்கிலான மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் தம்மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாக PassMe நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்தார்.
Popular
தெங்குச் செய்கையில் அதிக விளைச்சலுக்காக DIMO Agribusinesses இடமிருந்து வெற்றிகரமான தீர்வுகள்
உள்ளூர் சந்தையில் தேங்காய் விலை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம், நாட்டின் கேள்வியை பூர்த்தி செய்யும் அளவுக்கு சந்தையில் தேங்காய் விநியோகம் இல்லாததால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை என்பது தெளிவாகிறது. இதற்குத் தீர்வாக, தென்னங் காணிகளின்...
அதிநவீன Gastroenterology & Endoscopy சேவையை அறிமுகப்படுத்தும் நைன்வெல்ஸ் மருத்துவமனை
பெண்கள் மற்றும் சிறுவர்களின் சுகாதாரப் பராமரிப்பில் இலங்கையின் முன்னணி நிறுவனமாக புகழ்பெற்று விளங்கும் நைன்வெல்ஸ் மருத்துவமனை, அதிநவீன எண்டோஸ்கோபி வசதியுடனான சமிபாட்டுத்தொகுதி பிரச்சினைகள் தொடர்பான gastroenterology & endoscopy சேவையை அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறது....
AESL ~ $3 பில்லியன் மின்பரிமாற்றத் திட்டத்தை வென்றது;
இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய திட்ட வெற்றி
Editor’s Synopsis
இந்த திட்டம் 6 GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வெளியேற்றும்
AESL இன் orderbook இப்போது ~$6.5 பில்லியனாக உள்ளது
AESL இந்த திட்டத்தை 4.5 ஆண்டுகளில் BOOT...
Richwin Investment and Credit நிறுவனத்துக்கு Pinnacle Sri Lanka மற்றும் People’s Excellency இரட்டை விருதுகள்
Richwin Investment and Credit நிறுவனம் Pinnacle Sri Lanka 2024 விருது விழாவில் நிதிச் சேவை உயர் விருதை வென்றுள்ளது. கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற மேற்படி விருது விழாவில்...
Datatech Lanka நிறுவனத்துக்கு இரண்டு தேசிய மட்டத்திலான உயர் விருதுகள்
இலங்கையின் ஜப்பான் மொழி பாடசாலைகளில் முதன்மை நிறுவனமான Datatech Lanka குழுமத்துக்குச் சொந்தமான Institute of Datatech Lanka தனியார் நிறுவனத்துக்கு இலங்கை இளம் தொழில்முயற்சியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த 2024 ஆம்...