Muscle Max Fitness Kingdom மற்றும் Iron Arms ஆகியவற்றின் வலுவூட்டலுடன் உடற்கட்டழகுப் போட்டியை அடுத்த மட்டத்திற்கு கொண்டு செல்லவுள்ள MUSCLE MAX SRI LANKA 2024 நிகழ்வு  

36
புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி இடமிருந்து வலப்புறமாக: திரு. ஜொனி மொஹிதீன் - சுற்றுப்போட்டியின் பணிப்பாளர், Muscle Max Sri Lanka 2024, திரு. ரசிந்த தெலபொல - பணிப்பாளர், பயிற்சி மற்றும் அபிவிருத்தி, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், திரு. சானக பீட்டர் - தலைவர், Muscle Max Sri Lanka 2024, திரு. கசுன் சத்துரங்க - உப செயலாளர், இலங்கை உடற்கட்டழகு மற்றும் உடல் தகுதி சம்மேளனம், எம். டி. ஜெகத் சுசந்த - தெரிவுக்குழு உறுப்பினர் மற்றும் A தர நடுவர், இலங்கை உடற்கட்டழகு மற்றும் உடல் தகுதி சம்மேளனம்.

களனியிலுள்ள இரு முன்னணி உடற்பயிற்சிக்கூடங்களான Muscle Max Fitness Kingdom மற்றும் Iron Arms ஆகியன இலங்கையில் உடற்கட்டழகுப் போட்டிகளில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தவுள்ள MUSCLE MAX SRI LANKA நிகழ்வுக்காக கைகோர்த்துள்ளன. ஒரு பிரத்தியேக உடற்கட்டழகு நிகழ்வாக அமையவுள்ள இது, இலங்கை உடற்கட்டழகு சம்மேளனத்தின் ஆதரவுடன், களனி உடற்கட்டழகு சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடெங்கிலுமிருந்து மிகச் சிறந்த உடற்கட்டழகு வீரர்களை அறிமுகப்படுத்தி, அங்கீகாரமளிக்கும் வகையில் இந்நிகழ்வு இடம்பெறும். MUSCLE MAX SRI LANKA நிகழ்வானது முற்றிலும் உடற்கட்டழகினை வெளிக்காண்பிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதுடன், உடற்கட்டழகுக் கலைக்கு தேவையான ஓயாத ஒழுக்கம் மற்றும் மகத்துவமான திறமைகளுக்கான தணியாக தாகத்தையும் காண்பிக்கும்.       

2024 மார்ச் 12 அன்று Maco Polo – Excel World இல் இடம்பெற்ற விசேட பத்திரிகையாளர்கள் மாநாட்டில் MUSCLE MAX SRI LANKA நிகழ்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அடுத்த இரண்டு மாதங்களாக இது முன்னெடுக்கப்படவுள்ளதுடன், மாபெரும் இறுதிப்போட்டி நிகழ்வானது 2024 மே 26 அன்று களனி, கோணவல Clover Banquet Hall நிகழ்வு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. பல எண்ணிக்கையான சுற்றுப்போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன், வெற்றியாளர்களுக்கு பல்வேறுபட்ட பட்டங்களும் வழங்கப்படவுள்ளன.   

மாபெரும் இறுதிப்பட்டமான MR MUSCLE MAX என்பது அகில இலங்கை மட்டத்தில் பகிரங்க போட்டியின் அடிப்படையில் வழங்கப்படும். இலங்கையின் அனைத்து பாகங்களிலிருந்தும் விண்ணப்பிக்கின்றவர்களில் முதல் 10 ஸ்தானங்களைப் பிடிக்கின்ற உடற்கட்டழகு வீரர்கள் மேற்குறிப்பிட்ட மதிப்புமிக்க, பிரத்தியேக பட்டத்தை வெல்வதற்காக போட்டியிடவுள்ளதுடன், அவர்கள் மத்தியிலிருந்து ஒருவர் வெற்றியாளராக தெரிவு செய்யப்படுவார். இதை விட, மதிப்புமிக்க Muscle Max – Physique பட்டத்திற்கான வெற்றியாளரும் தெரிவு செய்யப்படுவார். அத்துடன், MR. KELANIYA 2024 என்ற பிரதான பட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ள பல்வேறு பிரிவுகளின் கீழ் முறையே 1ம், 2ம் மற்றும் 3ம் இடங்களுக்கான பட்டங்களும் வழங்கப்படவுள்ளன. இப்பிரிவுகளில் MR. KELANIYA Top 10 Bodybuilders, MR. KELANIYA – Physique, MR. KELANIYA – Handsome, மற்றும் MR. KELANIYA – Athletic ஆகிய பட்டங்கள் அடங்கியுள்ளன.         

Muscle Max Sri Lanka செயற்திட்டத்தின் தலைவர் சானக பீட்டர் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “ஆரோக்கியமான மற்றும் மனநிறைவான வாழ்க்கை முறைகளில் கவனத்தை செலுத்தச் செய்கின்ற இந்த நிகழ்வை ஆரம்பிக்கின்றமை எமக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது. தீங்கு விளைவிக்கும் பழக்கவழக்கங்களை விடுத்து, முழுமைக்கு வித்திடும் சமூகத்தைப் படைப்பதே எமது கனவு. அனுபவம்வாய்ந்த எமது வீரர்களின் சாதனை வரலாறுகளைக் கௌரவிக்க எம்முடன் இணைந்து, இளைஞர்கள் மத்தியில் ஆரோக்கிய உடற்கட்டழகு தொடர்பான பேரார்வத்தை ஊக்குவிப்போம். சிறந்த உடல் ஆரோக்கிய நடைமுறைகளில் கவனம் செலுத்தி, நிறைவளிக்கும் வாழ்க்கைமுறைகளைத் தோற்றுவிப்பதற்கு இலங்கையில் இளம் உடற்கட்டழகு வீரர்களுக்கு புதிய, தூய்மையான மேடையை MUSCLE MAX SRI LANKA நிகழ்வு வழங்கும். தனிப்பட்ட மகத்துவத்திற்கு ஒழுக்கம் மற்றும் உண்மையான அர்ப்பணிப்பு ஆகியவற்றை அத்திவாரமாகக் கொண்ட இந்த கலை மற்றும் விளையாட்டைக் கொண்டாடுவதற்கு எம்முடன் இணைந்து கொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.    

இச்சுற்றுப்போட்டிக்கான பணிப்பாளர் திரு. ஜொனி அவர்கள் கருத்து வெளியிடுகையில், “நியாயத்தன்மை மற்றும் வெளிப்படையான போட்டி என்ற அடிப்படையில், MUSCLE MAX SRI LANKA 2024 ஆனது முற்றிலும் புதியதொரு பரிமாணத்தை ஏற்படுத்தவுள்ளது. சீரான மற்றும் நியாயபூர்வமான விண்ணப்ப நடைமுறையை உறுதிப்படுத்துவதற்காக, ஆரம்ப அறிவிப்பு முதல் போட்டியாளர்களைத் தெரிவு செய்வது வரை அனைத்து செயல்பாடுகளிலும் நாம் மிகக் கவனமாக செயல்படுகின்றோம். வெளிப்படைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்து, விதிமுறைகளுக்கு இணங்கி, சாதிக்க வேண்டும் என்ற அபிலாஷை கொண்ட உடற்கட்டழகு வீரர்கள் அனைவருக்கும் சமவாய்ப்பளிக்கப்படுவதை ஊக்குவிக்கின்றோம். போட்டியாளர்கள் முறையே தத்தமது பிரிவுகளில் திறமைகளை நிலைநாட்டி, முடிவில் மாபெரும் அரங்கில் தமது சாதனைகளை காண்பிப்பதற்கு அவர்களுக்கு முழுமையான உதவி மற்றும் வழிகாட்டலை வழங்குவது எமது நோக்கமாகும். தூய்மையான உடற்கட்டழகில் ஆரோக்கியமான போட்டிகளுக்கு புதியதொரு தராதரத்தை நாம் அமைப்பதற்கு எம்முடன் இணைந்து, எமது போட்டியாளர்கள் முழுமையாக ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைத் தோற்றுவிப்பதற்கு ஊக்குவிப்பதற்கு முன்வருமாறு அழைப்பு விடுக்கின்றோம்,” என்று குறிப்பிட்டார். 

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பயிற்சி மற்றும் அபிவிருத்திக்கான பணிப்பாளர் திரு. ரசிந்த தெலபொல அவர்கள் கருத்து வெளியிடுகையில், “உடற்கட்டழகு அடங்கலாக, உடல் தகுதி மற்றும் ஆரோக்கியத்தில் ஈடுபடுவது இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துச் செல்லும் போக்கு காணப்படுகின்றது. அவர்களுடைய உடல் வலுவில் கவனம் செலுத்தி, சமூகத்தில் எழுகின்ற தீங்கான செல்வாக்குகளை போக்குவதற்கு இது உதவுவதால், இதை நாம் ஊக்குவித்தல் வேண்டும். அதேசமயம், உடற்பயிற்சிக்கூடத்தில் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் நாம் அவர்களுக்கு அறிவூட்டி, அவர்கள் தமது உடற்கட்டழகினைக் கட்டியெழுப்புவது மட்டுல்லாது, எதிர்மறை எண்ணங்களிவிருந்து விடுபட்டு, நெகிழ்வுத்திறன் கொண்டவர்களாக மாற நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். ஆகவே வாழ்வில் சிறந்த விடயங்களைக் கட்டியெழுப்ப உதவுகின்ற MUSCLE MAX SRI LANKA TOP 10 2024 போன்ற முயற்சிகளை இச்சந்தர்ப்பத்தில் நான் பாராட்ட விரும்புகின்றேன்,” என்று குறிப்பிட்டார்.   

இலங்கையில் ஆரோக்கியமான மற்றும் பொறுப்புணர்வுடனான உடற்கட்டழகிற்கான இப்புதிய மேடைக்கு ஆதரவளிக்க விரும்பும் கூட்டாளர்கள் மற்றும் அனுசரணையாளர்களை MUSCLE MAX SRI LANKA தற்போது எதிர்பார்த்துள்ளது. கூட்டாண்மைக்கான வாய்ப்புக்கள், போட்டியாளராக இணைந்து கொள்வதற்கு விண்ணப்பித்தல் மற்றும் டிக்கெட்டுக்கள் தொடர்பான கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ள செயற்திட்ட தலைவர் சானக பீட்டர் (0772793893) அல்லது சுற்றுப்போட்டியின் பணிப்பாளர் ஜொனி (0776677808) ஆகியோரை தயவு செய்து தொடர்பு கொள்ளவும்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here