Lanka Special Steels Limited நிறுவனத்திற்கு, தரம் மற்றும் உற்பத்தித்திறன் தொடர்பான தேசிய மாநாட்டில் பல வெற்றி விருதுகள்

40

கல்வனைஸ் செய்யப்பட்ட உருக்குக் கம்பிகளை உற்பத்தி செய்வதில் முன்னிலை வகித்து வருகின்ற Lanka Special Steels Limited (LSSL) நிறுவனம், தரம் மற்றும் உற்பத்தித்திறன் தொடர்பான தேசிய விருதுகள் மாநாடு 2023 (National Convention on Quality and Productivity – NCQP) நிகழ்வில் மகத்தான சாதனையை நிலைநாட்டியுள்ளமையை பெருமையுடன் அறிவித்துள்ளது. இலங்கை தரம் மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சங்கத்தினால் (Advancement of Quality and Productivity – SLAAQP) ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பெருமதிப்பிற்குரிய தங்க விருதுகள் நான்கினையும், வெண்கல விருதொன்றையும் LSSL வென்றுள்ளது.       

“புத்தாக்கமிக்க தரம் கொண்ட தீர்வுகள் மூலமாக நிலைபேணத்தகு அபிவிருத்தி” (Sustainable development through innovative quality solutions) என்ற கருப்பொருளில் இடம்பெற்ற NCQP விருதுகள் நிகழ்வு, உற்பத்தி மற்றும் சேவைகள் துறையில் தரம் மற்றும் உற்பத்தித்திறனின் சிறப்பினைப் போற்றியுள்ளது. மேம்பாட்டைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதில் LSSL இன் வெற்றியானது சிறந்த செயல்பாட்டில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை காண்பித்துள்ளதுடன், அதன் பல்வேறுபட்ட செயல்பாட்டு அணிகளே இந்த வெற்றிக்கு காரணமாகும். பல்வேறுபட்ட பிரிவுகளில், 400 க்கும் மேற்பட்ட அணிகளை விட சிறப்பாக செயல்பட்டு, 4 தங்க விருதுகள் மற்றும் 1 வெண்கல விருது ஆகியவற்றைத் தனதாக்கி, சிறப்பான வெற்றியை Lanka Special Steels Limited ஈட்டியுள்ளது. சிறந்த நடைமுறைகளை அறிமுகப்படுத்தல் மற்றும் நிலைபேணத்தகு மேம்பாடுகளை முன்னெடுத்தல் ஆகியவற்றில் Awanetha, Target, Shakthi, Titans, மற்றும் Verge அணிகளின் மகத்தான பங்களிப்புக்களை இந்த வெற்றிகள் காண்பிக்கின்றன.         

LSSL இன் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. பிரவின் டி சில்வா அவர்கள் இச்சாதனைகள் குறித்து பெருமையுடன் கருத்து வெளியிடுகையில், “இந்த மாநாட்டில் ஐந்து விருதுகளை வென்றுள்ளமை மிகவும் பாராட்டத்தக்கது என்பதுடன், பெருமைப்படவேண்டிய ஒரு சாதனையாகும். தரம் மற்றும் உற்பத்தித்திறனில் எமது அணிகளின் அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கின்றது. LSSL நிறுவனத்தில் அனைத்து பணி மட்டங்களிலும் தரம், புத்தாக்கம் மற்றும் மகத்துவத்தைக் கொண்டதொரு கலாச்சாரத்தை நாம் தோற்றுவித்துள்ளோம். இந்த விருதுகள் அந்த உணர்வுக்கான அங்கீகாரமாகக் காணப்படுவதுடன், இந்த விழுமியங்களைக் கட்டிக்காப்பதில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் மீள உறுதிப்படுத்துகின்றது,” என்று குறிப்பிட்டார்.

Titans அணியின் சார்பில் அகீலா நவாஃப், S. நிறஞ்சலா மற்றும் சமிதி ஆகியோரும், Awanetha அணியின் சார்பில் மதுசங்க, கோசல மற்றும் ஜி. ரி. மதுசங்க ஆகியோரும், Target அணியின் சார்பில் அகில, சுசந்த, துசித மற்றும் ஒஷான் ஆகியோரும், Shakthi அணியின் சார்பில் சாமர, மென்டிஸ் மற்றும் ஜெயரத்ன ஆகியோரும் முறையே தங்க விருதுகளை வென்ற அணிகளாகவும், வெண்கல விருதை வென்ற Verge அணியின் சார்பில் கிஹானி, ச(z)ஹரான், அச்சினிகா மற்றும் சச்சினி ஆகியோரும் LSSL நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். செலவுகளைக் குறைத்து திறனை அதிகரிக்கும் உற்பத்தி மற்றும் நிர்வாக நடைமுறைகளை உள்வாங்கி, தரம் மற்றும் உற்பத்தித்திறன் மீது தாம் கொண்டுள்ள ஓயாத அர்ப்பணிப்பை இவர்கள் நிகழ்வில் கூட்டாக வெளிப்படுத்தினர்.     

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here