JAT நிறுவனம் சர்வதேச பயிற்றுவிப்பாளர்களுடன் ஆரம்பித்துள்ள தீந்தை பூசுபவர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

20

மரப்பூச்சுக்கள், தூரிகைகள் மற்றும் றோலர்களுக்கு இலங்கையில் சந்தை முன்னோடியான JAT Holdings PLC, தனது நீண்ட கால அடிப்படையிலான JAT Pintharoo Abhiman வர்த்தக சமூக நலன்புரி முயற்சியின் கீழ் Harris® சர்வதேச தீந்தைபூசுபவர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் 2024 இனை ஆரம்பித்துள்ளது. தொழில்ரீதியாக தீந்தை பூசுபவர்களுக்கு, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தூரிகைகள் மற்றும் றோலர்களுக்கு சந்தை முன்னோடியாகத் திகழும் Orkla House Care UK இலிருந்து சர்வதேச வல்லுனர்களின் வழிகாட்டலுடன் விரிவான தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குவதன் ஊடாக, தொழிற்துறையின் தராதரத்தை மேம்படுத்துவதே இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.        

Harris® தீந்தைபூசுபவர் நிகழ்ச்சித்திட்டம் 2024 ஆனது உள்நாட்டில் உள்ள தீந்தைபூசுபவர்களுக்கு மேம்பட்ட திறன்கள் மற்றும் அறிவை வழங்கி, அவர்களுடைய வேலையின் தரத்தை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு வலுவூட்டுவதற்காக, நாடளாவில் தொடர் செயலமர்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண கட்டமானது JAT இன் தலைமை அலுவலகத்தில் 2024 ஜுன் 26 முதல் 28 வரை இடம்பெற்றதுடன், 3 தினங்களாக இடம்பெற்ற இந்நிகழ்வில் JAT பணியாளர்கள், அனுபவம்மிக்க தீந்தை பூசுபவர்கள் மற்றும் JAT முகவர் வலையமைப்பின் முக்கிய அங்கத்தவர்கள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.   

அங்குரார்ப்பண செயலமர்வில் Orkla House Care UK, L.G Harris & Co. Ltd சர்வதேச சந்தைப்படுத்தல் முகாமையாளர் மார்க் பார் மற்றும் John Green Décor, UK இன் பயிற்சி ஆலோசகரான ஜோன் கிறீன் ஆகிய சர்வதேச தொழில்துறை வல்லுனர்களால் நடாத்தப்பட்டமை விசேடமாக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வல்லுனர்களால் பயிற்றுவிக்கப்பட்ட JAT பணியாளர்கள் இந்த நிகழ்ச்சித்திட்டமானது இலங்கை எங்கிலும் வியாபிக்கும் வகையில் எதிர்கால அமர்வுகள் நடாத்தப்படவுள்ளன. பல ஆண்டுகால ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியின் துணையுடன் தொழில்ரீதியாக தீந்தை பூசுபவர்களுக்கு தயாரிப்புக்கள் மற்றும் தீர்வுகளை வடிவமைப்பதில் Orkla House UK கவனம் செலுத்தியுள்ளது. இது Harris® தயாரிப்பு வரிசை உலகெங்கிலும் தனது தரம் மற்றும் நீடித்த உழைப்பினை உறுதி செய்வதற்கு உதவியுள்ளது.         

தத்துவரீதியான மற்றும் செயல்முறை ரீதியான நுண்ணறிவுகள் மூலமாக, Harris® தூரிகைகள் மற்றும் றோலர்களை திறன்மிக்க வகையில் பயன்படுத்துவதன் மூலமாக, அதிசிறந்த தரத்தை வெளிக்கொண்டு வரும் அதேசமயம், தீந்தை பூசுபவர்களுக்கு நேரத்தையும், செலவையும் மீதப்படுத்துவதற்கு இவை எவ்வாறு உதவுகின்றன என்பது தொடர்பில் இச்செயலமர்வுகளில் பங்குபற்றுபவர்களுக்கு அறிவூட்டப்படுகின்றது. இச்செயலமர்வுகளில் பங்குபற்றுகின்ற அனைவரும் தயாரிப்பு தொடர்பான ஆழமான அறிவு, வினைதிறன் மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கான பயனுள்ள நுட்பங்கள் தொடர்பான ஆலோசனை, அறிமுகமாகவிருக்கும் தயாரிப்புக்கள் சந்தைக்கு வருவதற்கு முன்பதாக அவற்றின் இலவச மாதிரிகள் ஆகியவற்றுடன், பெறுமதிமிக்க சான்றிதழ் ஒன்றையும் பெற்றுக்கொள்வர். அங்குரார்ப்பண செயலமர்வில், தீந்தை பூசுபவர்கள் தரம் மற்றும் தமது வேலைப்பாட்டை மேம்படுத்திக் கொள்ள கணிசமாக உதவுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இரு புதிய தூரிகைகளையும் JAT அறிமுகப்படுத்தியுள்ளது.             

இம்முயற்சி குறித்து JAT Holdings PLC இன் பிரதம நிறைவேற்று அதிகாரியான நிஷால் பேர்டினாண்டோ அவர்கள் கருத்து வெளியிடுகையில், “Harris® தீந்தை பூசுபவர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் 2024 ஆனது உள்நாட்டில் தீந்தை பூசுபவர்களின் திறனை மேம்படுத்துவதில் JAT இன் உண்மையான நோக்கம் கொண்ட ஒரு முயற்சியாகும். Harris® தயாரிப்புக்களின் நன்மைகள் குறித்து எமது முகவர்களுக்கு சிறப்பாக அறிவூட்டுவதற்கும் இது உதவுகின்றது. தொழிற்துறையின் தராதரங்களை மேம்படுத்தி, JAT Pintharoo Abhiman நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், இலங்கையில் தீந்தை பூசுபவர்கள் மற்றும் மர சிற்ப வேலை கலைஞர்களின் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்கு பங்களிக்கும் எமது இலக்குடன் இந்த முயற்சி ஒன்றியுள்ளது. அதிநவீன தொழில்நுட்பம், நுட்பங்கள், அறிவு மற்றும் செயல்முறை திறன்களை பகிர்வை ஊக்குவிப்பதன் மூலமாக, எமது சமூகங்களை மேம்படுத்தி, புதிய வாய்ப்புக்களைத் தோற்றுவிக்க உதவும் மகத்துவம் மற்றும் புத்தாக்கம் மிக்க சூழலை நாம் வளர்க்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.           

Orkla House Care UK, L G Harris & Co Ltd இன் சர்வதேச சந்தைப்படுத்தல் முகாமையாளரான மார்க் பார் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “இலங்கையில் அர்ப்பணிப்புமிக்க மற்றும் தொழில் ஆர்வம் கொண்ட தீந்தை பூசுபவர்கள் குழுவொன்றை சந்தித்து, பயிற்சியளித்தமை உண்மையில் மறக்கமுடியாத ஒரு அனுபவம். எமது புதிய, இன்னமும் வெளிவராத தயாரிப்புக்கள் சிலவற்றை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களுடைய தீந்தை பூசும் தொழிலில் மிகச் சிறந்த பெறுபேறுகளை அடையப்பெறுவதற்கான அறிவு மற்றும் பயனுள்ள ஆலோசனைகளை வழங்க எம்மால் முடிந்துள்ளது. பணத்திற்கான மதிப்பைக் கருத்தில் கொண்டு, மிகச் சிறந்த முடிவு வேலைப்பாடு, வினைதிறன், சௌகரியம், மற்றும் நீடித்த உழைப்பு ஆகியவற்றுக்கான சரியான கருவிகளை உபயோகித்தளை இது உள்ளடக்கியுள்ளது. உலகெங்கிலும் தீந்தை பூசுபவர்கள் உற்பத்தித்திறனை மேம்படுத்திக்கொள்ளவும், தமது தொழிலை மகிழ்ச்சியாக முன்னெடுப்பதற்கும் உதவுவதே எமது குறிக்கோள். மிகவும் வளர்ச்சிவாய்ப்புக்கள் கொண்ட ஒரு நாடாக இலங்கை காணப்படும் நிலையில், இந்நாட்டில் தீந்தை பூசுபவர்களுக்கு ஆதரவளித்து, வலுவூட்டுவதற்காக JAT உடன் இன்னும் நெருக்கமாக இணைந்து பணியாற்ற நாம் ஆவலாக உள்ளோம்,” என்று குறிப்பிடடார்.    

இலங்கையில் Harris® வர்த்தகநாம தீந்தை பூசும் தூரிகைகள், றோலர்கள் மற்றும் துணைச்சாதனங்களின் பிரத்தியேக உற்பத்தியாளர், விநியோகஸ்தர் மற்றும் சந்தைப்படுத்துபவராக JAT Holdings PLC திகழ்கின்றது. 1928 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட L.G Harris & Co. ஆனது 1966 முதல் றோலர்கள் மற்றும் கருவிகளில் நிபுணத்துவம் மிக்க நிறுவனமாக, ஐக்கிய இராச்சியத்தில் 1வது ஸ்தானத்திலுள்ள தீந்தை பூசும் தூரிகைகளின் உற்பத்தியாளராக பெயர்பெற்றுள்ளது. இலங்கையில் சுமார் ஒரு நூற்றாண்டாக இத்தொழில் சார்ந்தவர்களால் விரும்பப்படும் ஒன்றாக Harris® தூரிகைகள் மற்றும் றோலர்கள் திகழ்ந்து வருவதுடன், சந்தை முன்னோடியாகவும் மாறியுள்ளன. தீந்தை பூசுவதை உற்பத்தித்திறன் கொண்டதாகவும், மகிழ்ச்சியுடன் மேற்கொள்ளும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here