INSEE Ecocycle மற்றும் Fonterra Brands Lanka ஆகியன இலங்கையின் பால் பொருட்கள் உற்பத்தித் துறையில் நிலைபேண்தகு கழிவு நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக கைகோர்த்துள்ளன

27

நிலைபேண்தகு கழிவு முகாமைத்துவத்தில் இலங்கையின் முன்னோடியான INSEE Ecocycle ஆனது, நாட்டின் மிகப்பெரிய நுகர்வோர் பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான Fonterra Brands Lanka (Pvt) Ltd உடன் இணைந்து நிலைபேண்தகு கழிவு முகாமைத்துவ நடைமுறைகள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதை மேம்படுத்தும் முயற்சியை முன்னெடுப்பதை பெருமையுடன் அறிவித்துள்ளது.

இது நிலைபேண்தகு அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கான இலங்கையின் தேசிய நிகழ்ச்சி நிரலுடன் இணைந்த ஒரு கூட்டாண்மையாகும். Fonterra Brands (Pvt) Ltd நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் நுகர்வுக்குப் பின்னரான பொதியிடல் கழிவுகளை நிர்வகிக்கும் பொறுப்பை INSEE Ecocycle ஏற்கும். நாடு முழுவதும் உள்ள உள்ளூர் அரசாட்சி சபைகள் மற்றும் பிற அரச நிறுவனங்களுடன் இணைந்து, INSEE Ecocycle ஆனது நகராட்சி திண்மக்கழிவு மார்க்கங்களில் காணப்படும் பால் பொருட்கள் தொடர்பான மீள்சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்திக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை திறன்மிக்க வழியில் சேகரித்து, முறையாக அகற்றுவதை உறுதி செய்யும்.

“நகராட்சி திண்மக்கழிவு என்பது நிச்சயமாக ஒரு தேசியரீதியிலான அக்கறை என்பதுடன், தூய்மையான மற்றும் ஆரோக்கியமான இலங்கைக்கான பாதையை அமைப்பதில் நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உண்டு என நாம் நம்புகிறோம்,” என INSEE Ecocycle Sri Lanka இன் பொது முகாமையாளரான சுஜித் குணவர்தன அவர்கள் குறிப்பிட்டார். “Fonterra Brands உடனான எமது ஒத்துழைப்பு பால் பொருட்கள் உற்பத்தித் துறையில் ஒரு புதிய முயற்சியைக் குறித்து நிற்கிறது. எமது பரஸ்பர சுற்றுச்சூழல் இலக்குகளுடன் இணைந்த புத்தாக்கமான கழிவு முகாமைத்துவத் தீர்வுகளை செயல்படுத்துவதற்கான உண்மையான வாய்ப்பை இதனூடாக நாம் காண்கிறோம்,” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.

கழிவு முகாமைத்துவ சேவைகளுக்கு மேலதிகமாக, Fonterra இன் துணையுடன், பிளாஸ்திக் மற்றும் பொலித்தீன்களை முறையான தரம்பிரித்தல் மற்றும் அப்புறப்படுத்துதல் பற்றிய விழிப்புணர்வை உள்ளூராட்சி மன்ற ஊழியர்களிடையே INSEE Ecocycle முன்னெடுக்கும்.

சுழற்சிப் பொருளாதார கட்டமைப்பைத் தழுவி, கழிவுகளை மதிப்புமிக்க வளங்களாக மாற்றும் அர்ப்பணிப்பின் மூலம் கழிவு அகற்றல் மற்றும் முகாமைத்துவத் தீர்வுகளுக்கு அப்பாற்பட்டு INSEE Ecocycle செயல்படும். INSEE Ecocycle இன் அணுகுமுறையின் விசேடம் என்னவென்றால், சீமெந்து சூளைகளுக்குள் மேற்கொள்ளப்படும் அதன் தனித்துவமான இணை-செயலாக்க முறைமையாகும்.

அதன் தாய் நிறுவனமான INSEE Cement உடன் இணைந்து சீமெந்து உற்பத்தி செயல்முறைக்கு இணையாக, தீங்கு விளைவிக்கும் உமிழ்வுகள் இல்லாமல் கழிவுகள் அழிக்கப்பட்டு, முழுமையாக சிதைக்கப்படுகின்றன. வழக்கமாக நிலப்பரப்பில் தேக்கப்படுதல் அல்லது எரிக்கும் முறைகளுக்கு முற்றிலும் மாறாக, சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைத்து, சாத்தியமான வளங்களை மீட்டெடுக்கும் போது கழிவுகள் அகற்றப்படுவதை இணை செயலாக்க நடைமுறை உறுதி செய்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here