INSEE Cement நிறுவனம், வணிகக் கூட்டாளர் விருதுகள் 2023 நிகழ்வில் மிகச் சிறந்த வணிகக் கூட்டாளர்களை கௌரவித்துள்ளது    

27

இலங்கையின் முதற்தர சீமெந்து வர்த்தகநாமமான INSEE Cement,  அண்மையில் கொழும்பிலுள்ள Courtyard by Marriott ஹோட்டலில் நடாத்திய வருடாந்த வணிகக் கூட்டாளர் விருதுகள் 2023 நிகழ்வில் தனது வணிகக் கூட்டாளர்களின் மிகச் சிறந்த சாதனைகளை பெருமையுடன் போற்றிக் கௌரவித்துள்ளது.  

“Unbreakable bonds, Unstoppable journey, Our strength, INSEE” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த ஆண்டு நிகழ்வில் கடந்த ஆண்டில் கட்டுமான துறை முகம்கொடுத்த மிகக் கடுமையான சவால்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இத்தொனிப்பொருள் அமைந்தது. தரமான உற்பத்திகள் மற்றும் சேவைகள், குறித்த காலத்தில் இடம்பெறும் விநியோகம், பொறுப்புக் கூறும் வகையிலான உதவி சேவை ஆகியவற்றினூடாக எமது வாடிக்கையாளர்களுக்கு பெறுமதியை வழங்கி, INSEE Cement நிறுவனம் தொடர்ச்சியாக தனது சேவையை வழங்குவதற்கு உதவிய எமது வணிக கூட்டாளர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

2023 வணிக கூட்டாளர் விருதுகள் நிகழ்வில் பணிப்பாளர் சபை தலைவர் சந்தன ஏக்கநாயக்க பிரதம நிறைவேற்று அதிகாரி ஜான் குனிக் நிறைவேற்றுச் சபை, முகாமைத்துவம் மற்றும் வர்த்தக அணியின் அங்கத்தவர்கள், அத்துடன் நிகழ்வுக்காக அழைக்கப்பட்ட எமது பிராந்திய மற்றும் தேசிய வணிக கூட்டாளர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

INSEE Cement நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜான் குனிக் அவர்கள் நிறுவனத்தின் தொடர்ச்சியான வாடிக்கையாளர்களை மையப்படுத்திய அணுகுமுறைக்கு வணிக கூட்டாளர்கள் ஆற்றியுள்ள முக்கியமான வகிபாகம் குறித்து நிகழ்வில் கருத்து வெளியிடுகையில் “கூட்டாளர்களின் வலுவான ஆதரவு, கடந்த ஆண்டில் காணப்பட்ட சவால்களை முறியடித்து,இ தலைசிறந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகள் ஊடாக எமது வழங்கலை விரிவுபடுத்துவதற்கு INSEE Cement நிறுவனம் ஆற்றலைப் பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது,” என்று குறிப்பிட்டார்

கடந்த ஆண்டில் INSEE Sanstha Paint மற்றும் INSEE Sanstha PVC ஆகிய தயாரிப்புகளை INSEE Cement நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியது. “எமது தயாரிப்பு வழங்கலை நாம் விரிவுபடுத்தும் நிலையில் எமது ஒட்டுமொத்த உற்பத்தி வரிசையின் மத்தியில் அதி உச்ச தரத்தை வழங்குவதற்காக ஆற்றலை INSEE Cement நிறுவனம் பெற்றுக்கொள்வதற்கு எமது வணிக கூட்டாளர்கள் பங்களித்துள்ளனர் புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றில் எமது கூட்டு அர்ப்பணிப்பிற்கு இது ஒரு சான்றாகும் என்பதை என்னால் பெருமையுடன் கூற முடியும்,” என்று தொடர்ந்தும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் உச்ச செயல்திறனை வெளிப்படுத்திய வணிக கூட்டாளர்களுக்கு ஒட்டுமொத்தமாக 34 விருதுகள் வழங்கப்பட்டதுடன், அவற்றுள் 11 தேசிய விருதுகளும் 20 பிராந்திய விருதுகளும் உள்ளடங்கியிருந்தன முதல் தடவையாக இந்த நிகழ்வில் கட்டட மூலப்பொருட்கள் பிரிவிலும் வணிக கூட்டாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டின் மிகச்சிறந்த வணிக கூட்டாளராக லியனகே என்டர்பிரைசஸ் நிறுவனம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், அது மிகச்சிறந்த மகத்துவத்தையும் அர்ப்பணிப்பையும் காண்பித்திருந்தது தேசிய மட்டத்தில் ஆகக்கூடுதலான விற்பனை அளவுக்காக லஹிரு எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்துக்கு விசேட விருது வழங்கப்பட்டதுடன், பிளாட்டினம் வெற்றியாளர் என்ற விருதை நியூ சென்ட்ரல் ஹாட்வெயார் நிறுவனம் பெற்றுக்கொண்டது.

இலங்கையின் முன்னணி மட்டும் ஒரேயொரு ஒருங்கிணைக்கப்பட்ட சீமெந்து உற்பத்தி நிறுவனமான INSEE Cement மிகவும் கேள்வி மிக்க INSEE Sanstha மற்றும் INSEE Mahaweli Marine Plus வர்த்தகநாமங்கள் அடங்கலாக இலங்கையில் கட்டுமான தீர்வுகளின் முழுமையான வரிசையை வழங்கி வருகின்றது. அது தனது தயாரிப்பு வரிசைக்காக சுற்றுச்சூழல் தயாரிப்பு பிரகடனங்களை (Environmental Product Declarations) பெற்றுக்கொண்ட இலங்கையின் முதல் நிறுவனம் என்ற பெருமையை அண்மையில் பெற்று சாதனை படைத்ததுடன், அது கட்டுமான தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமல்லாது கணிசமான அளவில் காபன் உமிழ்வை குறைத்து, பொறுப்பான வழியில் இயற்கை வளங்களை உபயோகிப்பதை ஊக்குவிப்பதற்கும் காண்பிக்கும் அர்ப்பணிப்பின் அடையாளமாக இந்த பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here