INSEE Cement நிறுவனம் தனது தயாரிப்பு வரிசைக்கு சூழலியல் தயாரிப்பு உறுதிப்படுத்தலை (Environmental Product Declaration – EPD) பெற்ற முதல் இலங்கை நிறுவனமாக மாறியுள்ளது  

34

சீமெந்து மற்றும் சீமெந்து தொடர்புபட்ட தயாரிப்புக்களைப் பொறுத்தவரையில் முன்னணி உற்பத்தியாளரான INSEE Cement, அதன் முழுமையான தயாரிப்பு வரிசைக்கு சூழலியல் தயாரிப்பு உறுதிப்படுத்தலை (Environmental Product Declaration -EPD) பெற்றுள்ள இலங்கையின் முதலாவது நிறுவனமாக மாறி, வரலாறு படைத்துள்ளது.    

EPD என்பது தயாரிப்புக்களின் ஆயுட்காலத்தில் அவற்றின் சுற்றுச்சூழல் செயல்திறன் தொடர்பில் விரிவான, தரப்படுத்தப்பட்ட மற்றும் மூன்றாம் தரப்பு சரிபார்ப்பு தகவலை வழங்குகின்ற, சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு தரப்படுத்தலாகும். INSEE Cement நிறுவனத்தின் பல்வகைப்பட்ட சீமெந்து மற்றும் சீமெந்து தொடர்புபட்ட தயாரிப்புக்கள் கடுமையான மதிப்பாய்வு, சரிபார்ப்பிற்கு உட்படுத்தப்பட்டு, அதியுயர் மட்டத்தில் நிலைபேற்றியல் தயாரிப்பு தராதரங்களுக்கு இணக்கப்பாடு கொண்டவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.          

“கட்டுமானம் என்பது சூழலுடன் எப்போதும் தங்குதடையின்றி இணங்கிப்போகும் வகையிலான ஒரு எதிர்காலத்தையே INSEE நிறுவனம் எதிர்பார்க்கின்றது. எமக்கு EPD சான்று அங்கீகாரம் கிடைத்துள்ளமை அந்த எதிர்பார்ப்பில் முக்கியமான ஒரு படியாக அமைந்துள்ளது,” என்று INSEE Cement நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜான் குனிக் அவர்கள் குறிப்பிட்டார். “எமது வாடிக்கையாளர்களுக்கு உயர் தரம் கொண்ட, சூழல் நேயம்மிக்க கட்டுமானப் பொருட்களை தொடர்ச்சியாக வழங்க வேண்டும் என்பதே எமது இலக்காக உள்ளதுடன், நிலைபேணத்தகு நடைமுறைகளில் எமது புத்தாக்கம் மற்றும் முதலீடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்போம்,” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.              

தயாரிப்பு ஒன்றால் சூழலுக்கும், மனித ஆரோக்கியத்திற்கும் ஏற்படும் விளைவு தொடர்பான தகவல் விபரங்களை வெளிப்படுத்தும் தரப்படுத்தல் ஆவணமொன்றே EPD ஆகும். இது ISO 1402 தரம் மற்றும் விஞ்ஞானரீதியான அடிச்சுவட்டு முறைமையான வாழ்க்கைச் சுழற்சி மதிப்பீடு (Life Cycle Assessment – LCA) அடிப்படையிலானது. தயாரிப்பொன்றினால் சூழலுக்கு ஏற்படும் விளைவை, தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்துவதே EPD இன் நோக்கமாகும்.         

தனது தயாரிப்புக்களால் சூழலுக்கு ஏற்படுகின்ற தாக்கம் தொடர்பில் வெளிப்படையான, விரிவான தகவல் விபரங்களை வழங்குவதன் மூலமாக, சூழல்நேயமான, கூடுதலான அளவில் நிலைபேணத்தகு எதிர்காலத்திற்கு பங்களிக்கும் வகையில், அறிவுபூர்வமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு கட்டடக் கலைஞர்கள், பொறியியலாளர்கள் மற்றும் நிர்மாணிப்பாளர்களுக்கு INSEE Cement வலுவூட்டுகின்றது.  

சுவீடனில் பதிவு செய்யப்பட்ட ஒரு வரையறுக்கப்பட்ட நிறுவனமான EPD International AB, சர்வதேச EPD கட்டமைப்பின் நிகழ்ச்சித்திட்ட தொழிற்பாட்டாளராக விளங்குவதுடன், அதன் நிர்வாகம் மற்றும் தொழிற்பாடுகளுக்கு ஒட்டுமொத்தமாக பொறுப்பாகும். INSEE Cement ஈட்டியுள்ள சாதனை குறித்து EPD International AB இன் பிரதம நிறைவேற்று அதிகாரி செபஸ்தியன் ஸ்டில்லர் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “பொதுவாக நிறுவனங்கள் தமது தயாரிப்புக்களால் சூழலுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து வெளிப்படையாக அறிவிக்கும் வகையில் அவை EPD க்களை நடைமுறைப்படுத்துகின்றன. பசுமையான சமுதாயத்திற்கு தமது அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புக்களை இதன் மூலமாக வெளிக்காண்பிக்கின்றன. எமது EPD க்களைப் பெற்றுக்கொண்ட முதலாவது இலங்கை நிறுவனம் INSEE என்ற வகையில், நிறுவனமும், நாடும் இதையிட்டு மிகவும் பெருமைப்பட வேண்டிய ஒரு சாதனையாகும்,” என்று குறிப்பிட்டார்.         

தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் கட்டுமானத் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமல்லாது, காபன் உமிழ்வைக் கணிசமான அளவில் குறைத்து, இயற்கை வளங்களை பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், அதிநவீன, நிலைபேணத்தகு கட்டுமான தீர்வுகளை வழங்கும் ஒரு சிறப்பான ஸ்தானத்தில் INSEE Cement தற்போது சிறப்பாக நிலைபெற்றுள்ளது.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here