INSEE சங்ஸ்தா தொடர்ந்து 13வது தடவையாகவும், SLIM Kantar இன் இவ்வருடத்திற்கான மக்கள் அபிமானத்தை வென்ற வீடமைப்பு மற்றும் கட்டுமான வர்த்தகநாமமாக பெயரிடப்பட்டுள்ளது

24

INSEE சங்ஸ்தா, 2024 ஆம் ஆண்டிற்கான மக்கள் அபிமானத்தை வென்ற வீடமைப்பு மற்றும் கட்டுமான வர்த்தகநாமமாக மீண்டும் ஒரு தடவை SLIM Kantar ஆல் பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெருமதிப்புமிக்க பிரிவில் தொடர்ச்சியாக 13வது தடவையாக இந்த வெற்றியை ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை சந்தைப்படுத்தல் கற்கை நிலையத்தால் (The Sri Lanka Institute of Marketing – SLIM) வழங்கப்படுகின்ற இவ்விருது, இவ்வர்த்தகநாமத்தின் மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள விசுவாசம் மற்றும் நம்பிக்கையை பிரதிபலிப்பதுடன், இலங்கையின் #1 சீமெந்து வர்த்தகநாமம் என்ற INSEE சங்ஸ்தாவின் பாரம்பரியத்தையும் பறைசாற்றுகின்றது.      

INSEE Cement நிறுவனத்தின் வர்த்தகப் பணிப்பாளர் சஃபீகான் சித்தீக் அவர்கள், இலங்கையின் கட்டுமான தொழிற்துறைக்கு சவால்மிக்க காலங்களிலும் கூட, வர்த்தகநாமத்தின் மீது INSEE வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் தொடர்ச்சியாக வழங்கி வருகின்ற ஆதரவுக்காக அவர்களுக்கு நன்றிக்கடனைத் தெரிவித்தார். “எமது செயற்பாடுகள் அனைத்திலும் மகத்துவத்தை வெளிக்கொண்டு வருவதில் INSEE Cement நிறுவனம் ஆழமான அர்ப்பணிப்புடன் உள்ளது. கடந்த ஐந்து தசாப்தங்களாக, நாம் தொடர்ச்சியாக அதியுயர் தரத்துடன், மிகச் சிறந்த தயாரிப்புக்கள் மற்றும் தீர்வுகளை வழங்கி வந்துள்ளோம். மகத்துவத்தை மேலும் மேம்படுத்தி, எமது பாரம்பரியத்தை வலுப்படுத்துவதற்கு இந்த விருது எமக்கு ஒரு உந்துசக்தியாக மாறியுள்ளது,” என்று குறிப்பிட்டார்.        

2007 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட SLIM Kantar மக்கள் அபிமான விருதுகள் நிகழ்வு, வர்த்தகத்துறையின் நாட்காட்டியில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்ற நிகழ்வுகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த ஆண்டுக்கான விருதுகள் வைபவமானது மார்ச் 18, திங்கட்கிழமையன்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுர, கோட்டை மொனார்க் இம்பீரியல் மண்டபத்தில் இடம்பெற்றதுடன், வர்த்தகநாமங்கள் மற்றும் விளம்பர முகவர் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிரேஷ்ட சந்தைப்படுத்தல் அதிகாரிகள் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.  

நடுவர் குழாத்தின் பரிசீலனை அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதை விடுத்து, விரிவான ஆய்வொன்றினூடாக நுகர்வோரின் கருத்துக்களையும், விருப்பங்களையும் அறிந்து கொண்டு, தனித்துவமான அடிப்படையில் இவ்விருதுகள் தீர்மானிக்கப்படுவது இதனை ஏனைய விருதுகளை விடவும் தனித்துவமான ஒன்றாக ஆக்கியுள்ளது. வருடத்திற்கான மக்கள் அபிமானத்தை வென்ற வீடமைப்பு மற்றும் கட்டுமான வர்த்தகநாமம் என்ற பெருமதிப்பு மிக்க அங்கீகாரம் அடங்கலாக, பல்வேறுபட்ட பிரிவுகளில் வெற்றியாளர்களைத் தெரிவு செய்யும் நடைமுறை தொடர்பான விரிவான தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு செயல்பாட்டை SLIM இன் சார்பில் Kantar முன்னெடுத்து வருகின்றது.       

இலங்கையில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட போர்ட்லன்ட் கலப்பு சீமெந்து என்ற பெருமையை INSEE சங்ஸ்தா சீமெந்து கொண்டுள்ளதுடன், ஒருங்கிணைக்கப்பட்ட சீமெந்து உற்பத்தி ஆலையைக் கொண்டுள்ள ஒரேயொரு சீமெந்து உற்பத்தியாளராகவும் திகழ்கின்றது. தனது விரிவான தயாரிப்பு வரிசைக்காக சூழலியல் தயாரிப்பு பிரகடனங்களை (Environmental Product Declarations – EPD) பெற்றுக்கொண்ட இலங்கையின் முதல் நிறுவனம் என்ற பெருமையை INSEE Cement கொண்டுள்ளதுடன், சூழல் மீதான அடிச்சுவட்டைக் குறைத்து, நிலைபேணத்தகு கட்டுமான நடைமுறைகளை ஊக்குவிப்பதில் தனது அர்ப்பணிப்பையும் இதன் மூலமாக வெளிப்படுத்தியுள்ளது. Green Building Council of Sri Lanka இடமிருந்து பெருமதிப்புமிக்க Green Certificate அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற இலங்கையின் முதல் சீமெந்து வர்த்தகநாமம் என்ற பெருமையும் INSEE சங்ஸ்தா போர்ட்லன்ட் கலப்பு சீமெந்தையே சாரும். 2023 ஆம் ஆண்டில் Ceylon Institute of Builders இடமிருந்து தங்க தரச்சான்று அங்கீகாரத்தையும் INSEE சங்ஸ்தா பெற்றுள்ளது.        

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here