HUTCH 2X ஹோம் புரோட்பான்ட் மற்றும் மொபைல் டேட்டா கட்டணப் பட்டியல்களுக்கு 60% வரை வியத்தகு சேமிப்புக்கள்

19

இலங்கையில் முதல்முறையாக, ஹோம் புரோட்பான்ட் மற்றும் மொபைல் டேட்டா ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து, தனித்த மற்றும் சௌகரியமான திட்டமாக அமையும், புத்தாக்கமான 2-in-1 திட்டத்தை HUTCH 2X அறிவித்துள்ளது. சிக்கனமான வழியில் இணையத்தை அணுகுவதற்கு தனித்தனியாக ஹோம் புரோட்பான்ட் இணைப்பு மற்றும் ரவுட்டருக்கான முதலீடு ஆகியவற்றுக்கான தேவையைப் போக்கி, புதிய தரஒப்பீட்டு நியமமாக இந்த புத்தாக்கமான தீர்வு அமைந்துள்ளது.      

HUTCH 2X சந்தாதாரர்கள் எவ்விதமான சிரமங்களுமின்றி, தமது ஸ்மார்ட்போன்களை புரோட்பான்ட் தீர்வாகப் பயன்படுத்தி, வீட்டில் hotspot ஊடாக Wi-Fi இணைப்பு மற்றும் எங்கிருந்தும் மொபைல் டேட்டா இணைப்பு ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த அணுகுமுறை, இணைப்புத்திறனை இலகுபடுத்துவது மட்டுமல்லாது, தாராளமான டேட்டா சலுகையையும் வழங்கி, வீட்டிலும், வீட்டிற்கு வெளியிலும் தங்குதடையற்ற, நம்பகமான இணைய அணுகலுக்கான பொருத்தமான தெரிவாக அதனை மாற்றியுள்ளது.          

HUTCH 2X ஆனது மிகச் சிறந்த மதிப்புடன், அதியுயர் தர டேட்டா அனுபவத்தை ஒன்றிணைக்கின்றது. 50GB க்கு ரூபா 1,099/- என்ற மிகக் குறைந்த கட்டணத் திட்டம் முதல் அனைத்து வரிகளும் உள்ளடங்கலாக வரையறையின்றிய இணைய திட்டமான ரூபா 4,999/- வரையில் பல வகைப்பட்ட திட்டங்கள் கிடைக்கப்பெறுகின்றன.

ஹட்ச் நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரியான ஹம்தி ஹசன் அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “பாரம்பரியான ஹோம் புரோட்பான்ட் தீர்வுகளின் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான அணுகல் மற்றும் இணைப்பொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான ஆரம்ப செலவுகள் காரணமாக இலங்கையில் இன்னமும் 50% வீடுகள் மாத்திரமே Wifi இணைப்பைக் கொண்டுள்ளன. வேலை, கல்வி அல்லது தமது வாழ்க்கைமுறைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களை தாம் இருக்கும் இடத்திலிருந்தே இணைப்பதற்கு wifi வசதி தேவைப்படுகின்றவர்களாக பலரும் காணப்படும் நிலையில், தமது தொலைபேசி சாதனங்கள் மூலமாக hotspot இனை உபயோகிப்பதற்கு வழக்கமான மொபைல் டேட்டா கட்டணங்களை செலுத்த வேண்டி ஏற்படுகின்றது. இந்த சவால்களை தீர்த்து, டிஜிட்டல் உள்ளடக்கம் என்ற எமது இலக்குடன் ஒன்றியதாக வீடுகளுக்கு அடுத்த கட்ட புரோட்பான்ட் தகவமைப்பை வெளிக்கொண்டு வந்து, வீடு மற்றும் மொபைல் டேட்டா Wifi தேவைகளுக்கு மிகவும் சிக்கனமான ஒரே திட்டத்துடன் மிகவும் முக்கியமான தேவைகளைக் கொண்ட நபர்களுக்கு எளிமையான இணைப்புத்திறனுக்கு HUTCH 2X திட்டங்கள் இடமளிக்கின்றன.             

முன்னிலை வகிக்கும் தொலைதொடர்பாடல் சேவை வழங்குனர் என்ற வகையில், வளமான இலங்கையின் மேம்பாட்டுக்கு வீடுகளுக்கும், நபர்களுக்கும் வலுவூட்டுகின்ற தங்குதடையின்றிய மற்றும் சிக்கனமான தீர்வுகளை வழங்கும் தனது அர்ப்பணிப்பை வலியுறுத்தும் வகையில் HUTCH 2X மூலமாக ஹட்ச் தனது புத்தாக்கத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here