HSBC இலங்கை இலக்கிய மற்றும் கலை விழாவினை ஆரம்பித்து  வைப்பதில்  பெருமிதமடைகிறது

53

*இலங்கையின் இலக்கியம், கலைகள் மற்றும் கலாசார வளங்களுக்கு     தலை வணங்குகிறோம்   

*முதலாவது நிகழ்வு  கண்டி மற்றும் கொழும்பில் நடத்தப்படவுள்ளது  

இலங்கையின் கண்டி மற்றும் கொழும்பு ஆகிய  வரலாற்று, பாரம்பரியமிக்க  நகரங்களில் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இலங்கை இலக்கிய மற்றும் கலை விழாவை  நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த கால வரலாற்றைக் கொண்ட தீவான  இலங்கை , தொடர்ச்சியாக முகம் கொடுத்த பல்வேறு  சவால்களில் இருந்து படிப்படியாக மீண்டு வருகிறது. இந்த விழா நாட்டின் இலக்கியம் மற்றும் படைப்புத் துறைகளை மாற்றியமைத்து உயர்த்துவதற்கான ஒரு படியாகும்.   நாட்டின்  வளமான கலாசார ஐதீகம், அழகிய நிலத்தோற்றங்கள் போன்றவற்றை வெளிப்படுத்துவதுடன்  சுற்றுலாப் பயணிகள், முதலீட்டாளர்கள் மற்றும் புதிய பங்காளிகளுக்கு இலங்கையினை  முதன்மையான இடமாக  நிறுவுவதுமே இதன் நோக்கமாகும்.

“எமது பங்காண்மை  மூலம், நடக்கவிருக்கும் இலங்கை இலக்கியம் மற்றும் கலை விழாவில் எமது வாடிக்கையாளர்களுக்கு இலக்கியம், கலை மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் “உலகின் சிறந்ததை” கொண்டு சேர்ப்பதே எமதுஅபிலாஷையாகும். இதன் மூலம் இலங்கையின் முன்னணி சர்வதேச வங்கி என்ற வகையில், புகழ்பெற்ற சர்வதேச மற்றும் உள்நாட்டு எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் போன்ற  பல்வேறு தரப்பினருடன்  தொடர்புகொள்வதற்கான வாய்ப்பை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு  நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.இந்த விழாவில்   , இலங்கையில் உள்ள உள்நாட்டு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களின்   சிறந்த பணியினை வெளிப்படுத்துவதன் மூலம், “இலங்கையின் சிறந்ததை” உலகிற்கு காட்சிப்படுத்த  முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று HSBCயின்  இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் சேர்ஜினர்  தெரிவித்தார்.

இலங்கையைச் சேர்ந்த  மற்றும் சர்வதேச எழுத்தாளர்கள், கலைஞர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் பிற ஆக்கப்பூர்வ நிபுணர்களின் பரந்த அளவிலான திறமைகளை வெளிப்படுத்துவது இந்த விழாவின் இலக்காக உள்ளது. விழாவின் பிரதம கண்காணிப்பாளரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான அசோக் ஃபெர்ரி, தனது சர்வதேச அங்கீகாரத்துடன் இணைந்து இலங்கை இலக்கியம் மற்றும் கலாசாரம் பற்றிய விரிவான அறிவுடன்   விழாவின் இலக்கிய விளக்கக்காட்சிகளை மேற்பார்வையிடவுள்ளார்.

  “இலங்கை இலக்கிய விழா, உலகம் முழுவதும் உள்ள முன்னணி எழுத்தாளர்களின் பாரிய சந்திப்பாக அமையவுள்ளதுடன் இது இளைஞர்களின் வாசிப்பு மற்றும் கற்றல் மீதான ஆர்வத்தை வளர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.வளர்ந்து வரும் கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு ஒரு தளத்தை வழங்குவதற்கும், இளைய தலைமுறையினரிடையே இலக்கியம் மற்றும் கலைகள் மீதான நீடித்த ஆர்வத்தைத் தூண்டும் சூழலை வளர்ப்பதற்கும் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இலங்கை மற்றும் இங்கிலாந்தின் செல்வாக்கான இலக்கிய ஐதீகம்  பற்றிய ஆழமான புரிதலைத் தூண்டுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும் என இலங்கை பிரிட்டிஷ் கௌன்சிலின்  பணிப்பாளர் ஓர்லாண்டோ எட்வர்ட்ஸ் தெரிவித்தார்.

பிப்ரவரி 10 முதல் 12 ஆம் திகதி  வரை துடிப்பான தலைநகரான கொழும்பில் இடம்பெறுவதற்கு முன்பாக , பிப்ரவரி 8 ஆம் திகதி  முதல் 9 ஆம் திகதி வரை கண்டியில் இவ்விழா ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. இவ்விழாவானது  22 சர்வதேச மற்றும் 20 உள்நாட்டு  இலக்கியவாதிகள் உட்பட 42 எழுத்தாளர்களின்  ஈர்க்கக்கூடிய படைப்புகளை வெளிப்படுத்தவுள்ளது. கண்டியில், மொத்தம் 11 அமர்வுகளும்   கொழும்பில் 22 அமர்வுகளும் இடம்பெறவுள்ளன. கொழும்பில் பெப்ரவரி 10 மற்றும் 11 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள சிறுவர் நிகழ்வானது இவ்விழாவின்  சிறப்பம்சமாகும். இந்த பிரிவு ஆர்த்திகா பக்ஷி மற்றும் நெலுகா சில்வா ஆகியோரால் வழி நடத்தப்படவுள்ளதுடன் இது இளைய பார்வையாளர்களுக்கு ஈர்க்கக்கூடிய மற்றும் ஊக்கமளிக்கும் அனுபவங்கள்  வழங்கப்படுவதை உறுதியளிக்கிறது..பெப்ரவரி 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலக்கிய அமர்வுகளுக்கு மேலதிகமாக பிரத்தியேக எழுத்தாளர்களின் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

கலை ஆர்வலர்கள் கண்டி மற்றும் கொழும்பில் கலைநயமிக்க  நடைகள், கலைப் பேச்சுக்கள் மற்றும் பட்டறைகளை எதிர்பார்க்கலாம். இந்த விழாவில் “ஸ்ட்ரைட் லைன் கிரேஸி” மற்றும் “காசியஸ் எக்ஸ்” உள்ளிட்ட குறிப்பிடத்தக்க குறும்படங்களின் காட்சிகளும் இடம்பெறவுள்ளன.

இவ்விழாவின் நோக்கம் இலங்கையின் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்கும் ஊக்கப்படுத்துவதற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.இளம், வளர்ந்து வரும் கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், கலையின் மீதான ஆர்வத்தை இவ்விழா தூண்டும் என எதிர்பார்க்கலாம்.   பட்டறைகள், குழு விவாதங்கள் மற்றும் வழிகாட்டல் நிகழ்ச்சிகள் மூலம்அடுத்த தலைமுறை படைப்பாளிகளை  வளர்ப்பதன் ஊடாக  இது அடையப்படும்.

உள்ளடக்கிய மற்றும் அணுகக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள, இலங்கை இலக்கியம் மற்றும் கலை விழா பல்வேறு ஆர்வங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு பொருந்தக்கூடிய வகையில் பல்வேறு செயற்பாடுகளை  வழங்குகிறது. படைப்பாற்றலின் இந்த கொண்டாட்டம் உள்ளடக்கிய மற்றும் கலாசார பரிமாற்றத்தின் உணர்வை உள்ளடக்கிய வகையில் அனைவருக்கும் திறந்ததாக அமையவுள்ளது.

பங்குதாரர்களின் ஆதரவு இல்லையென்றால் இவ்விழா  சாத்தியமில்லை. எச்.எஸ்.பி.சி [HSBC ] எங்களின் பிரதான பங்காளராகும் , அதன் கலாசார மற்றும் கலை வளர்ச்சியை வளர்ப்பதற்கான அர்ப்பணிப்பு இலங்கை இலக்கிய மற்றும் கலை விழாவை உயிர்ப்பிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எங்கள் மற்ற பங்காளர்களான  மாஸ்டர் கார்ட் , பிரிட்டிஷ் கவுன்சில் , மற்றும் கோ த இன்ஸ்டிடியூட் ஆகிய நிறுவனங்களின்  விலைமதிப்பற்ற பங்களிப்பு மற்றும் இலக்கியம் ,கலைகளை ஊக்குவிப்பதில்வெளிப்படுத்தும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்காக  எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் Galle Face Hotel மற்றும் Suisse Hotel என்பன எமது விருந்தோம்பல் பங்காளர்களாக திகழ்வதுடன்  விதிவிலக்கான தங்குமிடங்கள் மற்றும் இடங்களை வழங்கவுள்ளமை இங்கு விசேடமாக குறிப்பிட்டு கூற வேண்டியதாகும். விழாவின் உத்தியோகபூர்வ இலங்கை  தேயிலையாக டில்மா   எங்களுடன் இணைகிறது. மேலும் இந்நிகழ்வில் அச்சு ஊடக  பங்காளராக விஜய நியூஸ் பேப்பரும் பொதுமக்கள் தொடர்பு பங்காளராக ஹார்ட்டோக்கும்[Hardtalk ] எம்முடன் இணைகிறது.    இந்நிகழ்வானது அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் வசதியான மற்றும் மறக்கமுடியாத அனுபவத்தை உறுதி செய்கிறது.  எங்கள் அதிகாரப்பூர்வ புத்தக விநியோகஸ்தரும் சில்லறை விற்பனையாளருமான சரசவி புத்தகசாலை, பலதரப்பட்ட இலக்கியப் படைப்புகளால் விழாவை வளப்படுத்தவுள்ளது.

இலங்கை இலக்கிய மற்றும் கலை விழா  உரையாடல், கலாசார பரிமாற்றம் மற்றும் கலை ஒத்துழைப்புக்கான ஒரு மாறும் தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இலங்கையின் கலாசாரம், இலக்கியம்,   பற்றி அறிந்துகொள்ள விரும்பும் உள்நாட்டு மற்றும் சர்வதேச சமூகத்துக்கான அழைப்பாகும்.இலக்கியம், கலைகள் மற்றும் கலாசாரத்தின் இந்த கொண்டாட்டத்தில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள், இலங்கையின் படைப்புத் தொழில்களின் அழகையும் உத்வேகத்தையும்  உலகிற்கு நாங்கள் வெளிப்படுத்துகிறோம்..

அனைத்து செயல்பாடுகள் மற்றும் அனுபவங்கள் பற்றிய விரிவான விபரங்களுடன் முழு நிகழ்ச்சி நிரல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும் .

மேலும் மேம்படுத்தல்கள் மற்றும் தகவல்களுக்கு, Instagram இல் @ceylonliteraryfestival இல் www.ceylonliteraryfestival.comor followus ஐப் பார்வையிடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here