விவசாயப் பெருமக்களை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட கமத்தொழில் சார் இணைய வழி தீர்வான govi.ai, SLASSCOM ஏற்பாடு செய்த Ingenuity Awards 2024 விருது விழாவில் சிறந்த புத்தாக்க உற்பத்திகள்/கமத்தொழில் தொழில்நுட்ப கருத்திட்ட பிரிவின் தேசிய மட்டத்தின் மூன்றாவது இடத்தை வென்றுள்ளது. விவசாயிகளிடையே Internet of Things (IoT) மற்றும் Cloud Analytics போன்ற தொழில்நுட்பம் தொடர்பான அறிவை வளர்ப்பதன் மூலம் பயிர்ச்செய்கை மற்றும் அறுவடை தொடர்பான தரவுகளின் அடிப்படையில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு தேவையான சூழலை உருவாக்குவதே இந்த உள்ளீட்டின் நோக்கமாகும். இதற்கு தேவையான மென்பொருள் மற்றும் வன்பொருள் அனைத்துமே மேற்படி நிறுவனத்தின் சொந்த உற்பத்தி என்பது குறிப்பிடத்தக்கது. சிறியதொரு காணியை கொண்டுள்ள விவசாயி தொடக்கம் ஆராய்ச்சி மற்றும் வணிக மட்டத்திலான விவசாயிகள் வரை பரந்தளவிலான சமூகமொன்றுக்கு இந்த உள்ளீட்டின் மூலம் அனுகூலங்கள் கிடைக்கின்றன. காலநிலை மாற்றங்களின் தாக்கங்களை குறைத்தல், நீர் மற்றும் உர வழங்களை சிறந்த மட்டத்துக்கு கொண்டு வருதல், செலவை குறைத்தல் மற்றும் நிலைபேறான பழக்கங்களை மேம்படுத்தல் அவற்றின் சிலவாகும்.govi.ai உள்ளீட்டிலுள்ள IoT உணர்கருவியின் மூலம் ஈரப்பதன் உள்ளிட்ட மண்ணின் தரத்துடன் தொடர்புடைய pH, EC மற்றும் போசாக்கு பெறுமதிகளுக்கு ஏற்புடைய தகவல்களை பெற முடியும். அதன் மூலம் வீண்விரயத்தை குறைத்தல், வினைத்திறனை மேம்படுத்தல் மற்றும் ஆக்கம் மற்றும் தரத்தை மேம்படுத்தல் போன்ற பல்வேறு நன்மைகளை பெற முடியும். govi.ai உள்ளீட்டின் நீர்ப்பாசனம் மற்றும் பசளையிடலுடன் தொடர்புடைய செயற்பாடுகள் விவசாயிகளுக்கு குழப்பமற்ற மனதுடன் நிலைபேறான முறையில் நிலத்தை முகாமைத்துவம் செய்வதற்கு வழியேற்படுத்துகின்றன. அதனுடன் தொடர்புடைய தரவுப் பலகை பயிரின் ஆரோக்கியம், வளப் பயன்பாடு மற்றும் மேலும் பல விடயங்கள் தொடர்பான முன்னைய மற்றும் தற்போதைய தரவுகளை கொண்டுள்ளது. உள்ளீட்டில் காணப்படுகின்ற உணர்கருவிகள் மூலம் தொலைவிலிருந்தும் தானியங்கி முறையிலும் பயிர் நிலங்களை கண்காணிக்கவும் நீர் வழங்கல், வளி, பசளையிடல் போன்ற தர முகாமைத்துவம் செய்யவும் முடியும். “இலங்கையின் கமத்தொழில் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு govi.ai கொண்டுள்ள அர்ப்பணிப்பு மேலும் உறுதிப்படுத்தப்பட்டதொரு சந்தர்ப்பமாக இதனை குறிப்பிட முடியும். நாம் எப்பொழுதும் புத்தாக்க தீர்வுகள் மூலம் விவசாயிகளை மேம்பட்ட விழிப்புணர்வுடைய சமூகமாக மாற்றவும், நிலைபேறான பயன்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளவும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். கமத்தொழில் தொடர்பாக இலங்கையர்கள் வசமுள்ள அறிவுடன் தொழில்நுட்பத்தை இணைத்து இவ்வாறான புத்தாக்க தீர்வுகள் மூலம் மேம்பட்ட சுபீட்சமானதும் நிலைபேறான கமத்தொழில் வளர்ச்சிக்குமான வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும்.” என Azend Technologies தலைமை நிறைவேற்று அதிகாரி திரு ரஜீவ் சில்வா தெரிவித்தார்.
Popular
தெங்குச் செய்கையில் அதிக விளைச்சலுக்காக DIMO Agribusinesses இடமிருந்து வெற்றிகரமான தீர்வுகள்
உள்ளூர் சந்தையில் தேங்காய் விலை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம், நாட்டின் கேள்வியை பூர்த்தி செய்யும் அளவுக்கு சந்தையில் தேங்காய் விநியோகம் இல்லாததால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை என்பது தெளிவாகிறது. இதற்குத் தீர்வாக, தென்னங் காணிகளின்...
அதிநவீன Gastroenterology & Endoscopy சேவையை அறிமுகப்படுத்தும் நைன்வெல்ஸ் மருத்துவமனை
பெண்கள் மற்றும் சிறுவர்களின் சுகாதாரப் பராமரிப்பில் இலங்கையின் முன்னணி நிறுவனமாக புகழ்பெற்று விளங்கும் நைன்வெல்ஸ் மருத்துவமனை, அதிநவீன எண்டோஸ்கோபி வசதியுடனான சமிபாட்டுத்தொகுதி பிரச்சினைகள் தொடர்பான gastroenterology & endoscopy சேவையை அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறது....
AESL ~ $3 பில்லியன் மின்பரிமாற்றத் திட்டத்தை வென்றது;
இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய திட்ட வெற்றி
Editor’s Synopsis
இந்த திட்டம் 6 GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வெளியேற்றும்
AESL இன் orderbook இப்போது ~$6.5 பில்லியனாக உள்ளது
AESL இந்த திட்டத்தை 4.5 ஆண்டுகளில் BOOT...
Richwin Investment and Credit நிறுவனத்துக்கு Pinnacle Sri Lanka மற்றும் People’s Excellency இரட்டை விருதுகள்
Richwin Investment and Credit நிறுவனம் Pinnacle Sri Lanka 2024 விருது விழாவில் நிதிச் சேவை உயர் விருதை வென்றுள்ளது. கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற மேற்படி விருது விழாவில்...
Datatech Lanka நிறுவனத்துக்கு இரண்டு தேசிய மட்டத்திலான உயர் விருதுகள்
இலங்கையின் ஜப்பான் மொழி பாடசாலைகளில் முதன்மை நிறுவனமான Datatech Lanka குழுமத்துக்குச் சொந்தமான Institute of Datatech Lanka தனியார் நிறுவனத்துக்கு இலங்கை இளம் தொழில்முயற்சியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த 2024 ஆம்...