#GetHUTCHed – தொலைபேசி இணைப்பிற்கு ஹட்ச் ஸ்ரீலங்கா வழங்கும் புரட்சிகரமான அணுகுமுறை  

23

தொலைபேசி இணைப்புக்களை மக்கள் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளில் ஒரு புதுமையான மாற்றத்தை அறிமுகப்படுத்தி, டிஜிட்டல் யுகத்தில் ஒப்பற்ற அறிவுக்கூர்மை மற்றும் முற்போக்கான சிந்தனை ஆகியவற்றைக் காண்பித்து, தேச மட்டத்திலான தனது #GetHUTCHed QR Codes பொது விரைவுக் குறியீடுகளை ஹட்ச் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்துறையை முற்றிலும் மாற்றியமைக்கும் வல்லமை படைத்த இம்முயற்சியானது மிக இலகுவாக QR குறியீட்டை ஸ்கான் செய்து ஹட்ச் வலையமைப்பில் எவ்விதமான சிரமங்களுமின்றி இணைந்து கொள்வதற்கு இலங்கை மக்களுக்கு இடமளிக்கின்றது. சௌகரியத்திற்கு புதிய வரைவிலக்கணம் வகுத்து, இந்த QR பொது விரைவுக் குறியீடுகள், நாடெங்கிலும் வீதிகள் மற்றும் மக்கள் எந்நேரமும் ஒன்றுகூடும் புகையிரத நிலையங்கள் என கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.            

சாதுரியம் என்பது அதன் எளிமையிலேயே தங்கியுள்ளது. ஒருவர் இதனை விரைவாக ஸ்கான் செய்து, ஒரு எளிமையான டிஜிட்டல்மயமாக்கப்பட்ட நடைமுறை மூலமாக ஹட்ச் இணைப்பொன்றுக்கு விண்ணப்பிக்க முடியும். ஒரு சில நிமிடங்களில் தொலைபேசிகளுக்கான இணைப்பிற்கான பதிவிறக்கம் செய்யப்படக்கூடிய eSIM ஆக இருந்தாலும் சரி அல்லது உங்களுடைய வீடுகளுக்கே நேரடியாக விநியோகம் செய்யப்படுகின்ற ஒரு SIM அட்டையாக இருந்தாலும் சரி, அனைவரும் இதனை தாம் விரும்பியவாறு முன்னெடுக்கும் தெரிவு உள்ளது.      

ஹட்ச் நிறுவனம் சமீப காலங்களில் டிஜிட்டலை முன்னிலைப்படுத்தும் பல்வேறு முயற்சிகளில் முன்னேடியாகச் செயல்பட்டு வந்துள்ளதுடன், மொபைல் தொலைதொடர்பாடல்கள் துறையில் வளர்ச்சியையும் முன்னின்று கொண்டு செல்கின்றது. எடிசலாட் லங்கா நிறுவனத்தைக் கையகப்படுத்திய நாள் முதற்கொண்டும், அதனைத் தொடர்ந்து நாடளவியரீதியில் புரோட்பான்ட் உட்கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதற்காக மேற்கொண்ட 125 மில்லியன் அமெரிக்க டொலர் தொகைக்கும் மேலான முதலீட்டுடனும், இலங்கையின் சனத்தொகையில் 95% க்கும் மேற்பட்டவர்களை எட்டும் வண்ணம் தனது வலையமைப்பு உள்ளடக்கத்தை ஹட்ச் முன்னெடுத்துச் சென்றுள்ளது. 1.8Gbps க்கும் மேலான பாரிய பதிவிறக்க வேகத்தைப் பதிவாக்கிய அதன் 5G பரீட்சார்த்த முயற்சியின் பூர்த்தியும் இதில் அடங்கியுள்ளது.      

ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி ஹம்தி ஹசன் அவர்கள் இம்முயற்சி குறித்து கருத்து வெளியிடுகையில், “மக்களுக்கு யதார்த்த உலகின் சௌகரியங்களைக் கொண்டு வருவதில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்ற ஒரு எதிர்காலத்தின் மீது நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். இந்த டிஜிட்டல் யுகத்தில் எமது புத்தாக்கமானது வாடிக்கையாளர்கள் எமது வலையமைப்பில் இணைப்பைப் பெற்றுக்கொள்வதற்கு சேவை மையமொன்றுக்கு செல்ல வேண்டிய சிரமத்தைப் போக்க இடமளிக்கின்றது. நீங்கள் ஹட்ச் நிறுவனத்தின் பொது விரைவுக் குறியீட்டைக் காணும் இடங்களில் எல்லாம், இலகுவாக GetHUTCHED இணைப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்,” என்று குறிப்பிட்டார்.   

இணைப்பொன்றை பெற்றுக்கொள்வதில் எதிர்காலத்தை கருத்தில் கொண்ட மற்றும் விநோதமான அணுகுமுறையின் தர ஒப்பீட்டு நியமத்தை நிலைநாட்டி, தங்குதடையின்றி இணைப்பை வழங்குவதில் ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இம்முயற்சி அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.  

Fortune Global 500 நிறுவனங்களில் ஒன்றான, CK Hutchison Holdings Limited என்ற பல்தேசிய கூட்டு நிறுவனங்கள் குழுமத்தின் உறுப்பு நிறுவனமே ஹட்ச் ஸ்ரீலங்கா. CK Hutchison Holdings இன் தொலைதொடர்பாடல் பிரிவானது ‘3’ என்ற பிரபலமான வர்த்தகநாமத்தின் கீழ் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் 11 நாடுகளில் இயங்கி வருகின்ற ஒரு பாரிய சர்வதேச நிறுவனமாகத் திகழ்ந்து வருவதுடன், 175 மில்லியனுக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. இக்குழுமம், 5G  சேவைகளில் சர்வதேச அளவில் முன்னிலை வகிப்பதுடன், 7 நாடுகளில் வர்த்தகரீதியிலான 5G  வலையமைப்புக்களை ஏற்கனவே இயக்கி வருவதுடன், இலங்கை மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த புத்தாக்கங்கள் கிடைக்கப்பெறுவதற்கு இடமளித்து வருகின்றது.            

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here