FACETS Sri Lanka 2025 – ஆசியாவின் முன்னணி இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியை ஆரம்பித்து வைத்த SLGJA

5

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையுடன் (NGJA) இணைந்து, ஆசியாவின் முன்னணி இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண கண்காட்சியான FACETS Sri Lanka நிகழ்வின் 31ஆவது பதிப்பு, 2025 ஜனவரி 04ஆம் திகதி கொழும்பு Cinnamon Grand Hotel இல் இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தினால் (SLGJA) ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனவரி 04 முதல் 06 வரை இடம்பெறும் இந்த 3 நாள் நிகழ்வு, இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் புத்திசாலித்தனத்தையும் பன்முகத்தன்மையையும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்துவதை உறுதியளிக்கிறது.

FACETS Sri Lanka 2025 கண்காட்சியை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி அதிமேதகு அநுர குமார திசாநாயக்க கண்காட்சியை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், தொழில்துறையில் உள்ள தலைவர்கள் மற்றும் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் உள்ள சர்வதேச புகழ்பெற்ற பிரதிநிதிகள் அவருடன் இந்நிகழ்வில் இணைந்து கொண்டனர். இந்த நிகழ்வு, உலகப் புகழ்பெற்ற இரத்தினக்கல் மற்றும் ஆபரண நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் வரவேற்ற்றது. இவர்களில் பெரும்பாலானோர் முதன்முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FACETS Sri Lanka 2025 கண்காட்சியானது, இரத்தினபுரி, பேருவளை, காலி, எஹலியகொட, கொழும்பு போன்ற மாணிக்கக்கற்கள் உற்பத்தி செய்யும் முக்கிய பிரதேசங்களைச் சேர்ந்த இலங்கையின் உள்ளூர் இரத்தினக்கல் தொழில்முயற்சியாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது. அவர்களின் ஒப்பிட முடியாத கைவினைத்திறன் மற்றும் நேர்த்தியான படைப்புகள் யாவும் இந்து சமுத்திரத்திண நகைப் பெட்டகம் எனும் இலங்கையின் நற்பெயரை எடுத்துக் காட்டுகிறது. இந்த தளத்தின் மூலம், இந்த கைவினைஞர்கள் சர்வதேச வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள், முதலீட்டாளர்களுடன் தொடர்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், ஏற்றுமதியில் 1 பில்லியன் டொலர் வருமானத்தை அடைவதற்கான தொழில்துறையின் இலட்சிய நோக்கத்தை மேலும் மேம்படுத்துகிறது.

FACETS Sri Lanka 2025 கண்காட்சியானது, ஒப்பிட முடியாத இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்களின் காட்சிப் பொருளாக இருப்பதற்கு அப்பால், நாட்டின் வளமான பாரம்பரியத்தின் கொண்டாட்டமாகவும், தொழில்துறை புத்தாக்கத்திற்கான ஊக்கியாகவும் உள்ளது. இவ்வருட இக்கண்காட்சியானது, பின்வரும் பிரத்தியேக நிகழ்வுகளைக் கொண்டிருக்கும்:

• Sapphire Night நிகழ்வு, தொழில்துறையின் சாதனைகளை வெளிப்படுத்தும் கொண்டாட்டமாகும்.

• Gems of Influence Power Breakfast⁠ நிகழ்வு, இத்தொழில்துறையில் உள்ள பெண்களுக்கான பிரத்தியேக மன்றமாகும்.

• Mining Tour நிகழ்வு, இலங்கையின் இரத்தினச் சுரங்க நடைமுறைகளின் முதன் முறை பெறும் அனுபவத்தை வழங்கும்.

• Port City Colombo பிரத்தியேக விஜயமானது, தேசத்தின் நவீன உட்கட்டமைப்பைக் காண்பிக்கும்

• சிறப்பு வாய்ந்த VIP Golf Tournament நிகழ்வு, பிரத்தியேகத்தன்மை மற்றும் நேர்த்தியை சேர்க்கிறது.

இந்நிகழ்வு பற்றி கருத்து வெளியிட்ட, FACETS Sri Lanka 2025 கண்காட்சியின் தலைவர் ஆர்மில் சம்மூன், “FACETS Sri Lanka 2025 என்பது ஒரு கண்காட்சிக்கு அப்பாற்பட்டதாகும். இது எமது வளமான பாரம்பரியம் உலகளாவிய அபிலாஷைகளை இணைக்கும் ஒரு தளமாகும். ஒவ்வொரு இரத்தினமும் இலங்கையின் கலைத்திறன் மற்றும் நெகிழ்ச்சியின் கதையைச் சொல்கிறது. இந்த நிகழ்வின் மூலம் இந்த கதைகளை உலகத்துக்கு சொல்லும் அதே வேளையில், எமது தொழில்துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கின்ற புத்தாக்கம் மற்றும் ஒத்துழைப்புக்கான பாதைகளை உருவாக்குகிறோம்.” என்றார்.

FACETS Sri Lanka கண்காட்சியானது, இலங்கையின் உள்ளூர் மற்றும் உலகளாவிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண கைத்தொழில் நாட்காட்டியில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் வருடாந்த நிகழ்வாகத் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இது இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் இணையற்ற அழகு, நிலைபேறான தன்மை மற்றும் பன்முகத்தன்மைக்கு ஒரு சாளரத்தை வழங்குவதோடு, உலகம் முழுவதிலுமிருந்து இரத்தினக்கல் கொள்வனவாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்க்கிறது.

இவ்வருட FACETS Sri Lanka 2025 கண்காட்சியானது, தொழில்துறையின் நெகிழ்ச்சி, புத்தாக்கம், உலகளாவிய ஈர்ப்பு ஆகியவற்றிற்கு ஒரு சான்றாக உள்ளது. இந்நிகழ்வின் ஆரம்பத்தை தொடர்ந்து, இது நீடித்த தாக்கங்களை உருவாக்குவதற்கும், அர்த்தமுள்ள கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கும், இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகத்தில் இலங்கையை உலகளாவிய முன்னணி நிலையில் நிலைநிறுத்துவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்துகின்றது.

மேலதிக தகவலுக்கு பார்வையிடுக,  [website or contact details]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here