இலங்கையின் டயர் மற்றும் இறப்பர் சார்ந்த உற்பத்தித் துறையின் முன்னோடியாக திகழும் புகழ்மிக்க நிறுவனமாக பல தசாப்தங்களாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெரிதும் வென்றுள்ள டயர் உலகின் முன்னோடியான DSI Tyres நிறுவனம் உள்ளிட்ட அதன் பல்வேறு இணை நிறுவனங்கள் SLIM Brand Excellence, Dragons of Asia மற்றும் NCE உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளன. இலங்கையில் நடாத்தப்படுகின்ற உயரிய அங்கீகாரத்துடன் கூடிய போட்டித்தன்மை மிக்கதும் கோலாகலமானதுமான வர்த்தக நாம விருது விழாவாக கருதப்படும் SLIM Brand Excellence 2024 விருது விழாவில் DSI Tyres, ‘Agile Brand of the Year’ எனும் உயர் விருதை வென்றுள்ளது. துரிதமாக மாறி வரும் உலகில் சந்தை மற்றும் சமூக மாற்றங்களுக்குட்பட்டு வெற்றிகரமான தொழில்முயற்சி முறைகள் மற்றும் உத்திகளை சந்தர்ப்பத்துக்கேற்ற முறையில் பின்பற்றியமையே மேற்படி விருதை அளித்தமைக்கான காரணமாகும். DSI Tyres செயற்படுத்திய சந்தைப்படுத்தல் தொடர்பாடல் ஊக்குவிப்பு திட்டத்துக்கு 24 ஆவது Dragons of Asia’ விருது விழாவில் ‘Best Brand Building or Awareness Campaign இற்கு Black Dragon விருதை பெற்றதன் மூலம் DSI Tyres முதலாவது சர்வதேச விருதை வென்று சாதனை படைத்துள்ளது. மேலும், Dragons of Sri Lanka விருது விழாவில் DSI Tyres வெள்ளிப் பதக்க விருதையும் வென்றுள்ளது.தேசிய ஏற்றுமதி சபை (NCE) ஏற்பாடு செய்த 2024 ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி உயர் விருது விழாவில் சேம்சன் இறப்பர் இன்டரீஸ் நிறுவனம் இறப்பர் டயர் மற்றும் அது சார்ந்த துணைப்பாகங்கள் பிரிவின் பாரியளவிலான பிரிவின் வெள்ளிப் பதக்க விருதையும், SRG ஹோல்டிங்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்யப்பட்ட விவசாயப் பயிர் பிரிவின் சிறிய அளவிலான பிரிவின் வெள்ளிப் பதக்க விருதையும், சேம்சன் பைக்ஸ் நிறுவனம் இயந்திரங்கள் மற்றும் இலகு பொறியியல் உற்பத்திகள் பிரிவின் பாரியளவிலான பிரிவின் வெங்கலப் பதக்க விருதையும், சேம்சன் ரீக்லேம் இறப்பர் நிறுவனம் இறப்பர் மற்றும் அது சார்ந்த உறபத்திகள் பிரிவின் வெங்கலப் பதக்க விருதையும் வென்றுள்ளன. சர்வதேச நம்பிக்கையை திடமாக உறுதிப்படுத்தி 85 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு DSI Tyres தமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்கிறது. உலகின் முன்னணி சந்தைப்படுத்தல் வலையமைப்புகள் பலவற்றின் மூலம் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்தி வரும் DSI Tyres இதற்கு முன்னரும் தொடர்ச்சியாக பல்வேறு விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Popular
தெங்குச் செய்கையில் அதிக விளைச்சலுக்காக DIMO Agribusinesses இடமிருந்து வெற்றிகரமான தீர்வுகள்
உள்ளூர் சந்தையில் தேங்காய் விலை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம், நாட்டின் கேள்வியை பூர்த்தி செய்யும் அளவுக்கு சந்தையில் தேங்காய் விநியோகம் இல்லாததால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை என்பது தெளிவாகிறது. இதற்குத் தீர்வாக, தென்னங் காணிகளின்...
அதிநவீன Gastroenterology & Endoscopy சேவையை அறிமுகப்படுத்தும் நைன்வெல்ஸ் மருத்துவமனை
பெண்கள் மற்றும் சிறுவர்களின் சுகாதாரப் பராமரிப்பில் இலங்கையின் முன்னணி நிறுவனமாக புகழ்பெற்று விளங்கும் நைன்வெல்ஸ் மருத்துவமனை, அதிநவீன எண்டோஸ்கோபி வசதியுடனான சமிபாட்டுத்தொகுதி பிரச்சினைகள் தொடர்பான gastroenterology & endoscopy சேவையை அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறது....
AESL ~ $3 பில்லியன் மின்பரிமாற்றத் திட்டத்தை வென்றது;
இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய திட்ட வெற்றி
Editor’s Synopsis
இந்த திட்டம் 6 GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வெளியேற்றும்
AESL இன் orderbook இப்போது ~$6.5 பில்லியனாக உள்ளது
AESL இந்த திட்டத்தை 4.5 ஆண்டுகளில் BOOT...
Richwin Investment and Credit நிறுவனத்துக்கு Pinnacle Sri Lanka மற்றும் People’s Excellency இரட்டை விருதுகள்
Richwin Investment and Credit நிறுவனம் Pinnacle Sri Lanka 2024 விருது விழாவில் நிதிச் சேவை உயர் விருதை வென்றுள்ளது. கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற மேற்படி விருது விழாவில்...
Datatech Lanka நிறுவனத்துக்கு இரண்டு தேசிய மட்டத்திலான உயர் விருதுகள்
இலங்கையின் ஜப்பான் மொழி பாடசாலைகளில் முதன்மை நிறுவனமான Datatech Lanka குழுமத்துக்குச் சொந்தமான Institute of Datatech Lanka தனியார் நிறுவனத்துக்கு இலங்கை இளம் தொழில்முயற்சியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த 2024 ஆம்...