DMASL Digital Summit 2024 மீண்டும் இடம்பெறவுள்ளதுடன், வோட்டர்ஸ் எட்ஜில் 2 தினங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

23
Seated from Left : Arjun Jeger, Project Chair, Digital Marketing Summit Sri Lanka 2024, Chaminda Samarakoon, Head of Media and Activation - Unilever Sri Lanka , Umair Wolid, President, Digital Marketing Association of Sri Lanka , Mr. Dhanushka Ramanayake, Director General (Media), President's Office , Mr. Madhushanka Dissanayake, Director General Telecommunications Regulatory Commission

அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த DMASL Digital Summit 2024 நிகழ்வு, பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜில் 2024 ஜுலை 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் பிரமாண்டமாக இடம்பெறவுள்ளதுடன், இலங்கையின் டிஜிட்டல் சந்தைப் பரப்பில் பெரும் கவனத்தை ஈர்க்கவுள்ளது. கடந்த ஆண்டு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட இந்நிகழ்வு மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றிருந்த நிலையில், டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையில் ஒரு முன்னணி நிகழ்வாக விரைவாக வளர்ச்சிகண்டு, இந்த ஆண்டு உச்சி மாநாடானது கடந்த ஆண்டை விடவும் வலுவானதாகவும், ஈடுபாடுகளை வளர்ப்பதாகவும் அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இம்முறை இரு தினங்களுக்கு இந்நிகழ்வு நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், தொழிற்துறையில் இதன் முக்கியத்துவம் மற்றும் ஈடுபாட்டின் அதிகரிப்பை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. அறிவூட்டல், தொடர்புகளை வளர்த்தல் மற்றும் இதற்காக வாதிடுதல் மூலமாக இலங்கையில் டிஜிட்டல் துறையின் வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்துள்ள முன்னணி தொழில்சார் அமைப்பான இலங்கை டிஜிட்டல் சந்தைப்படுத்துபவர்கள் சங்கத்தால் (Digital Marketers Association of Sri Lanka – DMASL) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு நிகழ்வாக DMASL Digital Summit 2024 இடம்பெறுகின்றது.   

டிஜிட்டல் சந்தைப்படுத்தல் வல்லுனர்கள், விளம்பர முகவர் நிறுவனங்கள், வர்த்தகத்துறை தலைவர்கள், மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் அடங்கலாக பல்வகைப்பட்ட தொழில் வல்லுனர்கள் பிரிவுகளை ஒன்று திரட்டி, கற்றுக்கொள்வதையும், தமக்கிடையில் தொடர்புகளை வளர்ப்பதையும் மற்றும் ஒத்துழைப்பதையும் ஊக்குவிக்கும் நோக்குடன் “Charting the Uncharted”  என்ற தொனிப்பொருளில் DMASL Digital Summit 2024 நிகழ்வு இடம்பெறவுள்ளது. டிஜிட்டல் சந்தைப்படுத்தலில் சமீபத்தைய போக்குகள் மற்றும் புத்தாக்கங்கள் தொடர்பில் ஊக்கமளித்து, அறிவூட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதான உரைகள், குழுநிலை கலந்துரையாடல்கள், செயலமர்வுகள் மற்றும் தொடர்புகளை வளர்த்துக்கொள்ளும் அமர்வுகள் என பலதரப்பட்ட நிகழ்வுகளை இதில் கலந்துகொள்ளவுள்ளவர்கள் எதிர்பார்க்க முடியும். DMASL Digital Summit 2024 நிகழ்வில் 15 க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள், 20 க்கும் மேற்பட்ட கூட்டாளர்கள், 3 விரிவான செயலமர்வுகளுடன் மற்றும் 1,000 க்கும் மேற்பட்டவர்கள் பங்குபற்றுவர் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.          

நாட்டில் இந்த அளவுக்கு பிரமாண்டமாக இடம்பெறுகின்ற ஒரு நிகழ்வு என்ற வகையில், இதில் பங்குபற்றவுள்ளவர்கள் தொழிற்துறை தலைவர்களிடமிருந்து ஆழமான அறிவைப் பெற்றுக்கொள்ளவும், மற்றும் தொழிற்துறையிலுள்ள சகாக்களுடன் தொடர்புகளை உருவாக்கிக் கொள்ளவும் ஒப்பற்ற வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர். தொழிற்துறையில் உச்சத்தில் திகழும் வல்லுனர்களிடமிருந்து பெறுமதிமிக்க அறிவைப் பெற்று, அதிநவீன டிஜிட்டல் சந்தைப்படுத்தல் கருவிகள் மற்றும் மூலோபாயங்களை அறிந்துகொள்வதற்கான தனித்துவமான வாய்ப்பும் இந்நிகழ்வில் பங்குபற்றுபவர்களுக்கு கிட்டவுள்ளது. புத்தாக்கம் மற்றும் ஒத்துழைப்பு மீதான இந்த உச்சி மாநாட்டின் முக்கிய இலக்கின் காரணமாக, விரைவாக மாற்றம் கண்டு வருகின்ற டிஜிட்டல் சந்தைப்படுத்தல் உலகில் அறிவை வளர்த்துக்கொள்ள விரும்புகின்ற அனைவரும் தவறாது பங்குபற்ற வேண்டிய ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது.  

DMASL Digital Summit தலைவர் உமைர் வொலிட் அவர்கள் இது தொடர்பில் ஆர்வத்துடன் கருத்து வெளியிடுகையில், “இலங்கையில் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் சமூகத்திற்கான மிக முக்கியமானதொரு நிகழ்வாக DMASL Digital Summit 2024 அமைந்துள்ளது. இலங்கையில் டிஜிட்டல் சந்தைப்படுத்தலை மேம்படுத்தும் எமது பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகவும் இது காணப்படுகின்றது. இந்த ஆண்டு இரு தினங்களுக்கு நீட்டிக்கப்பட்டு, பிரபலமான பேச்சாளர்கள் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், கற்றுக்கொள்வதற்கும், தொடர்புகளை உருவாக்கிக் கொள்வதற்கும் ஒப்பற்ற வாய்ப்புக்களை இந்நிகழ்வு வழங்கும். இதில் பங்குபற்றுகின்றவர்களுக்கு டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பரப்பில் அதிநவீன நுண்ணறிவுகள் மற்றும் புத்தாக்கங்களை உள்வாங்கும் வாய்ப்பையிட்டு நாம் பெரும் ஆர்வத்துடன் உள்ளோம். எதிர்வரும் காலங்களில் இடைச்செயற்பாட்டு அமர்வுகளில் கவனம் செலுத்தி, ஈடுபாட்டின் மதிப்பை மேலும் மேம்படுத்தி, சர்வதேச மட்டத்தை எட்டுவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.        

செயற்திட்ட தலைவரான அர்ஜுன் ஜெகர் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “தமது அறிவையும், அனுபவத்தையும் பகிர்ந்து கொள்வதற்கு இத்தகைய பரந்த மற்றும் திறமைசாலிகள் கொண்ட குழுவை ஒன்றுதிரட்டுவதையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த ஆண்டு இரு தினங்களாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கற்றுக்கொள்வதற்கும், தொடர்புகளை உருவாக்கிக் கொள்வதற்கும் இது மேலும் பெறுமதிமிக்க வாய்ப்புக்களை வழங்கும் என நாம் திடமாக நம்புகின்றோம். இந்த ஆண்டு நிகழ்வின் மூலமாக, இந்நிகழ்வின் அடைவுமட்டம், ஈடுபாடு மற்றும் விளைவு ஆகியவற்றை தொடர்ந்தும் விஸ்தரிப்பதற்கான எமது உறுதிமொழியையும் நாம் நிறைவேற்றியுள்ளோம். டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறை சார்ந்த எவரும் கண்டிப்பாக பங்குபற்ற வேண்டிய ஒரு நிகழ்வாக இது அமைந்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.   

யூனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தனிப்பட்ட நல, அழகு மற்றும் நல்வாழ்வு சார்ந்த தயாரிப்புக்களுக்கான சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷமாரா சில்வா அவர்கள் கருத்து வெளியிடுகையில், “Digital Summit 2024 நிகழ்வின் தலைமை அனுசரணையாளராக DMASL உடன் கைகோர்ப்பதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். திறமைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை காணப்படுகின்ற ஒரு இக்கட்டான நிலைமையில், எமது திறமைசாலிகளின் திறன்களை மேம்படுத்தி, அவர்களது தகுதிகளை உயர்த்துவதில் யூனிலீவர் அர்ப்பணிப்புடன் உள்ளது. இதன் பின்னணியில், உள்நாட்டு திறமைசாலிகளுக்கு சர்வதேச அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும் மேடைகளை உருவாக்குகின்ற DMASL போன்ற அமைப்புக்களுக்கு உதவ வேண்டியது மிகவும் அத்தியாவசியம் என நாம் எண்ணுகின்றோம். டிஜிட்டல் சந்தைப்படுத்தலில் புத்தாக்கமான சிந்தனைகளையும், மிகச் சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்து, இப்பிராந்தியத்தில் டிஜிட்டல் சந்தைப்படுத்தலின் எதிர்காலம் சிறக்க பங்களிப்பதற்கு மிகச் சிறந்த மேடையாக இந்த உச்சிமாநாடு அமையுமென நாம் நம்புகின்றோம்,” என்று குறிப்பிட்டார்.       

இந்த உச்சிமாநாடு தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் டிக்கட்டுக்களை பெற்றுக்கொள்வதற்கு https://dmaslsummit.com/ என்ற தளத்தைப் பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here