DFCC Savings Goal – கனவுகளை இலகுவாகவும், நெகிழ்வாகவும் அடைவதற்காக கட்டமைக்கப்பட்ட ஒரு வழி

39

DFCC Savings Goals மூலமாக 2024 ஏப்ரல் 30 வரை 7% வட்டியை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்  

உங்களுடைய நிதியியல் கனவுகளை எளிதாக, நெகிழ்வுடன் அடைவதற்கு உங்களுக்கு உதவுகின்ற அதேசமயம், நன்கு கட்டமைக்கப்பட்ட சேமிப்புத் திட்டத்தை DFCC வங்கி தற்போது உங்களுக்கு வழங்குகின்றது. குறுகிய காலத்தில் கூடுதலான வட்டியை ஈட்டித்தருகின்ற சேமிப்புத் திட்டங்களுடன் வாடிக்கையாளர்களை வலுவூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள DFCC Savings Goal திட்டமானது ஆண்டுக்கு 7% என்ற கவர்ச்சிகரமான வட்டி வீதத்துடன், நெகிழ்வுப்போக்குடன் இணைத்து, தனிப்பயனாக்கப்பட்ட சேமிப்பு அனுபவத்திற்கு உத்தரவாதமளிக்கின்றது. போட்டித்திறன்மிக்க இந்த வட்டி வீதமானது 2024 ஏப்ரல் இறுதி வரை பிரத்தியேகமாக DFCC இணைய வங்கிச்சேவை மூலமாகக் கிடைக்கப்பெறுவதுடன், சந்தையில் மிகவும் அனுகூலம் நிறைந்த திட்டங்களில் ஒன்றாக தனித்துவம் பெற்றுள்ளது. சந்தையில் வட்டி வீதங்கள் தற்சமயம் வீழ்ச்சியடைந்து வருகின்ற போதிலும், 2 வருடங்கள் வரை ஆண்டுக்கு 7% என்ற வட்டி நன்மையை வாடிக்கையாளர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்பதுடன், வட்டி வீதங்களின் ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியில் ஸ்திரமான வட்டி வீதத்தை அவர்களுக்கு வழங்குகின்றது. அத்துடன், வாடிக்கையாளர்கள் தீர்மானிக்கும் அணுகுமுறையின் கீழ் கட்டமைக்கப்பட்ட வகையில், உங்களுடைய நிதி இலக்குகளை வேகமாக அடையப்பெற உங்களுக்கு உதவுவதுடன், எவ்விதமான தண்ட கட்டணங்களின்றி இதனை அனுபவிக்கும் நெகிழ்வையும் வாடிக்கையாளர்கள் கொண்டுள்ளனர்.         

வாடிக்கையாளர்கள் தமது சேமிப்புப் பயணத்தை தாமே தீர்மானிப்பதற்கு இப்புத்தாக்கமான தளமேடை அவர்களுக்கு வலுவூட்டுவதுடன், அவர்கள் தமது தனித்துவமான நிதியியல் அபிலாஷைகளுக்கேற்றவாறு தமது இலக்குகளை வடிவமைத்துக்கொள்ள இடமளிக்கின்றது. ரூபா 10,000 முதல் ரூபா 10,000,000 தொகை வரை தமது தொகை இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ளும் நெகிழ்வுடன், நாளாந்தம், வாராந்தம் அல்லது மாதாந்தம் சேமிப்புப் பங்களிப்புக்களுடன் கணக்கை ஆரம்பித்து ஒரு மாதத்திற்குள் வாடிக்கையாளர்கள் தமது சேமிப்பு முயற்சியை ஆரம்பிக்க முடியும். மேலும், ஆரம்பித்த நாளிலிருந்து 30 தினங்கள் அல்லது 2 ஆண்டுகள் வரை இத்திட்டம் முடிவடையும் திகதியை நிர்ணயிக்கும் தெரிவும் அவர்களுக்கு உள்ளதுடன், எவ்விதமான தண்டமும் இன்றி இக்காலப்பகுதியை நீட்டிக்கவோ அல்லது நிர்ணயித்த காலத்திற்கு முன்பதாகவே முடிவுக்கு கொண்டு வரவோ முடியும் என்பதால், அவர்களுடைய தேவைகள் மாற்றமடைகின்ற போது அதற்கு இசைவாக இதனை முன்னெடுக்கும் நெகிழ்வையும் உறுதி செய்கின்றது.

DFCC வங்கியின் தனிநபர் வங்கிச்சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிப் பிரிவின் சிரேஷ்ட உப தலைவர் ஆசிரி இத்தமல்கொட அவர்கள் கருத்து வெளியிடுகையில், “உங்களுடைய கனவுகளை நனவாக்கிக் கொள்வது என்பது வெறுமனே பணத்தைச் சேமிப்பது என்பதற்கு அப்பாற்பட்ட ஒன்று என்பதை நாம் நன்கு அறிவோம். அதற்கு தெளிவான கட்டமைப்பும், அபிலாஷைகளை அடைந்துகொள்வதற்கான தெளிவான பயணத்திட்டமும், வளர்ச்சியை விரைவுபடுத்தி, சேமிப்புக்களை உச்சமாக்குவதற்கு உச்சபட்ச வட்டி வீதங்களும் தேவைப்படுகின்றன. இதனாலேயே, பெறுமதிமிக்க எமது வாடிக்கையாளர்கள் தமது இலக்குகளை அடையப்பெறுவதற்கு தேவையான நெகிழ்வு, கட்டுப்பாடு மற்றும் உதவியுடன் அவர்களை வலுவூட்டுகின்ற DFCC Savings Goal என்ற தனித்துவமான திட்டத்தை நாம் தோற்றுவித்துள்ளோம். குறிப்பாக DFCC Savings Goal திட்டத்திற்கான வட்டி வீதங்கள் ஏப்ரல் நிறைவடைந்த பின்னர் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளமையால், தமது திட்டங்களுக்கு ஆண்டுக்கு 7% வட்டி வீதத்தை உறுதிப்படுத்தி, DFCC Savings Goal என்ற மாற்றத்திற்கு வித்திடும் சேமிப்புப் பயணத்தை ஆரம்பிக்குமாறு இலங்கை மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுகின்றோம்,” என்று குறிப்பிட்டார்.       

DFCC தனிநபர் இணைய வங்கிச்சேவை மூலமாக எந்நேரமும் ஆரம்பிக்கப்படக்கூடிய DFCC Savings Goal உடன் ஒப்பற்ற நெகிழ்வை அனுபவியுங்கள். வாடிக்கையாளர்கள் தமது சௌகரியத்திற்கேற்றவாறு நிதியை சேர்த்துக்கொள்ளும் சுதந்திரத்தையும் கொண்டுள்ளதுடன், எதிர்கால பங்களிப்புக்களுக்கான நிலையான கட்டளைகள் அதற்கமைவாக மாற்றம் செய்யப்பட முடியும். எவ்விதமான கூடுதல் கட்டணத்திற்கும் முகங்கொடுக்காது, தேவைப்படும் நேரங்களில் பணத்தை மீளப்பெறும் சுதந்திரத்தையும் அனுபவியுங்கள். தங்குதடையின்றிய சேமிப்பு அனுபவத்தை உறுதிப்படுத்துவதற்காக, பணத்தை மீளப்பெறும் சமயங்களில் எதிர்கால வைப்புக்களை அதற்கேற்றவாறு இயல்பாகவே திருத்தம் செய்து உங்களுடைய இலக்கினை தொடர்ந்தும் முன்னெடுங்கள். திட்டமிடப்பட்ட வைப்பொன்றினை நீங்கள் தவற விடும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் கூட, எவ்விதமான தண்டங்களும் விதிக்கப்படாது என்ற உத்தரவாதம் உங்களுக்கு உள்ளதுடன், உங்கள் இலக்கில் நீங்கள் தொடர்ந்தும் பயணிப்பதற்கு, நிதி கிடைக்கப்பெறும் வேளையில் இணைய வங்கிச்சேவை தளமேடையானது தானாகவே இந்த விடுபாட்டை சீர்செய்து கொள்ளும். உங்களுடைய இலக்கினை அடையப்பெற்ற பின்னர் அல்லது இடையில் DFCC Savings Goal இனை நீங்கள் மூட விரும்பினால், குறித்த காலத்திற்குரிய வட்டித் தொகை அடங்கலாக, மொத்த தொகையை நீங்கள் பெற்றுக்கொள்வதுடன், எவ்விதமான தண்டமுமின்றி அதனைப் பெறும் சௌகரியமும் உங்களுக்கு உள்ளது.

புதிய DFCC Savings Goal திட்டத்தை இன்றே ஆரம்பியுங்கள். உடனடியாக உங்களுடைய DFCC தனிநபர் இணைய வங்கிச்சேவையினுள் உள்நுழையுங்கள். மேலதிக தகவல் விபரங்களுக்கு 0112350000 என்ற இலக்கத்திற்கு அழைப்பின ஏற்படுத்துங்கள் அல்லது எந்தவொரு ஈரேஅடிநச, வங்கிக் கிளைக்கும் செல்லுங்கள்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here