2024 ஏப்ரல் 14 அன்று தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டைக் கொண்டாடும் புத்தாண்டு உற்சவ நிகழ்வொன்றை இத்தாலியில் நடாத்துவதற்காக DFCC Remittances ஆனது Mondial Boney Services உடன் கைகோர்த்துள்ளதுடன், மிகவும் விமரிசையாக இடம்பெற்ற பாரம்பரியமான நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளில் அங்கு வசிக்கும் பெரும் எண்ணிக்கையான இலங்கையர்கள் கலந்து கொண்டனர். இத்தாலியின் நேபிள்ஸ் இலுள்ள இலங்கையின் கௌரவ தூதர் ஏவீவீ கார்மைன் கபாசோ அவர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளதுடன், இத்தாலிய ஒழுங்குமுறை அதிகாரிகள், வணிகர்கள் மற்றும் DFCC Remittances இன் பணப் பரிவர்த்தனை கூட்டாளர்களும் பங்குபற்றினர். DFCC வங்கியின் கடல்கடந்த வங்கிச்சேவை, பணம் அனுப்பும் சேவை மற்றும் வணிக மேம்பாட்டுக்கான சிரேஷ்ட உப தலைவர் அன்டன் ஆறுமுகம் அவர்கள் இந்நிகழ்வின் கௌர அதிதியாக கலந்து சிறப்பித்துள்ளார்.
அன்டன் ஆறுமுகம் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “நேபிள்ஸ் இல் வசிக்கும் கடும் உழைப்பாளிகளான இலங்கை மக்களுடன் இணைந்து தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டைக் கொண்டாடியமை உண்மையில் ஒரு பெரும் பாக்கியமாகும். எமது வாடிக்கையாளர்கள் பணப் பரிவர்த்தனை கூட்டாளர்கள் மற்றும் இத்தாலிய ஒழுங்குமுறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்து, தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான மிகச் சிறந்த வாய்ப்பினை இந்நிகழ்வு எமக்கு வழங்கியுள்ளது,” என்று குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்கள், இலங்கையில் வசிக்கும் அவர்களுடைய குடும்பங்கள் ஆகியோருக்கு ஒப்பற்ற வசதிக்கு இடமளித்து, நன்மதிப்புடைய பணப் பரிவர்த்தனை நிறுவனங்களைக் கொண்ட உலகளாவில் வளர்ந்து வரும் வலையமைப்பொன்றை DFCC Remittances பேணி வருகின்றது. அந்த வகையில், DFCC வங்கியின் விசாலமான வலையமைப்பு மற்றும் டிஜிட்டல் வங்கிச்சேவைகள் ஊடாக, இலங்கை எங்கிலும் நிதியை தங்குதடையின்றி, விரைவாக, சிக்கனமாக மற்றும் சௌகரியமாக DFCC வங்கியின் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும். வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்கள் மற்றும் இலங்கையிலுள்ள அவர்களுடைய பயனாளிகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட கடன் வசதிகள் மற்றும் ஏனைய நிதித் தீர்வுகள் மற்றும் சேவைகளையும் அது வழங்கி வருகின்றது.