DFCC ONE மூலமாக டிஜிட்டல் வங்கிச்சேவை மகத்துவத்திற்கு DFCC வங்கிமீள்வரைவிலக்கணம் வகுக்கின்றது

12

டிஜிட்டல் வங்கிச்சேவையில் புத்தாக்கத்திற்கான தர ஒப்பீட்டு நியமமொன்றை நிலைநாட்டும் வகையில், DFCC ONE என்ற புதுமையான மொபைல் வங்கிச்சேவை செயலியொன்றை DFCC வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைகளைத் தீர்த்து வைத்து, சௌகரியம், பாதுகாப்பு மற்றும் புத்தாக்கத்திற்கு மீள்வரைவிலக்கணம் வகுப்பதில் வங்கியின் இடைவிடாத அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த பாரிய நகர்வு அமையப்பெற்றுள்ளது. இலங்கையில் டிஜிட்டல் வங்கிச்சேவையின் முன்னோடிகளில் ஒன்று என்ற வகையில், பரிமாண மாற்றம் கண்டு வருகின்ற இன்றைய தேவைகளை நிறைவேற்றவும், எதிர்காலத்தில் வரவுள்ள சாத்தியங்களை உள்வாங்கவும் ஏதுவாக வடிவமைக்கப்பட்ட தளத்துடன், தனது மொபைல் வங்கிச்சேவை அனுபவத்திற்கு DFCC வங்கி மீள்வரைவிலக்கணம் வகுத்துள்ளது. ஒப்பற்ற பயனர் அனுபவத்துடன், வங்கிச்சேவை மற்றும் வாழ்க்கைமுறைச் செயற்பாடுகளை இணைக்கின்ற வகையில், தனித்த ‘super app’ ஒன்றை வடிவமைப்பதை நோக்கிய வங்கியின் பயணத்தில் ஒரு சாதனை மைல்கல்லாக DFCC ONE ன் அறிமுகம் மாறியுள்ளது.         

நிகழ்நேரத்தில் கணக்குகளுக்கான அணுகல், இடைவிடாத நிதிப் பரிமாற்றங்கள், மற்றும் CEFTS வலையமைப்பினூடாக மூன்றாம் தரப்பு கணக்குகளுக்கு உடனடி கொடுப்பனவுகள் உள்ளிட்ட விரிவான, பல்வேறு சிறப்பம்சங்களை DFCC ONE வழங்குகின்றது. பயனர்கள், DFCC கடனட்டைகள் அல்லது வங்கிக் கணக்குகளை பயன்படுத்தி மிக இலகுவாக கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகளை மேற்கொள்ளவும், கடனட்டைப் பட்டியலுக்கான கொடுப்பனவுகளை செலுத்தவும், ஒப்பற்ற வகையில் மிகவும் இலகுவாக தாம் விரும்புகின்ற பரிவர்த்தனைகளை நிர்வகிப்பதற்கு தமது வங்கிச்சேவை அனுபவத்தை தமக்கு வேண்டியவாறு தனிப்பயனாக்கிக் கொள்ளவும் இது இடமளிக்கின்றது. வாடிக்கையாளர்களின் சௌகரியத்தை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டு, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு அம்சமாக DFCC கடனட்டைகளை உபயோகித்து, கட்டணப் பட்டியல்களுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்பு DFCC Virtual Wallet இல் நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்குகள் மூலமாக மாத்திரமே கட்டணப் பட்டியல்களுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளக்கூடியதாக காணப்பட்ட நிலையில், அது குறித்த கணிசமான மேம்பாடாக இப்புதிய அம்சம் மாறியுள்ளது.          

வாடிக்கையாளர்களின் பின்னூட்ட கருத்துக்கள் மற்றும் தொழிற்துறையின் போக்குகள் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள, உள்ளுணர்வுக்கு உத்வேகமளிக்கின்ற, நவீன இடைமுகத்தினூடாக டிஜிட்டல் வங்கிச்சேவையை மேம்படுத்தும் வகையில் DFCC ONE வடிவமைக்கப்பட்டுள்ளது. தனது முன்னோரான DFCC Virtual Wallet ன் வலுவான தொழிற்பாடுகளை தொடர்ந்தும் தக்கவைத்தவாறு, தற்போதைய பயனர்களுக்கு சீரான மாற்றத்தை உறுதி செய்கின்றது. புதிதாக பயனர்களாக இணைந்து கொள்ள விரும்புகின்றவர்களுக்கும் கிளையொன்றுக்கு செல்ல வேண்டிய தேவையைப் போக்கி, DFCC டெபிட்/கடன் அட்டைகள் அல்லது வங்கிக் கணக்கு இலக்கங்களினூடாக தங்குதடையின்றி இதற்கான பதிவை மேற்கொள்ளும் தெரிவுகளுடன், மேம்பட்ட, எதிர்காலத்திற்கு ஏற்ற வங்கிச்சேவை அனுபவத்தை இச்செயலி வழங்குகின்றது.            

அது கொண்டுள்ள தனித்துவமான சிறப்பம்சங்கள் பலவற்றில் அடங்கியுள்ள ‘Peek Balance’ தொழிற்பாடானது, பயனர்கள் உள்நுழைய வேண்டிய தேவையின்றி உடனடியாக கணக்கு மீதிகளை சரிபார்ப்பதற்கு இடமளிப்பதுடன், எங்கிருந்தும் கணக்குக்கூற்றுக்களை அணுகுவதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட ePassbook தொழிற்பாடு உதவுகின்றது. சௌகரியம் மற்றும் தனிப்பயனாக்கம் ஆகியவற்றுடன் வடிவமைக்கப்பட்டுள்ள DFCC ONE ஆனது, Pinnacle, Prestige, Salary Plus, மற்றும் Salary Partner போன்ற பயனர்களுடைய கணக்கு வகைகளை காண்பிக்கின்ற தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட dashboard தகவல் விபர திரையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.          

DFCC ONE ன் வடிவமைப்பில் பாதுகாப்பிற்கு முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளதுடன், மிக இலகுவாகவும், பாதுகாப்பாகவும் அணுகுவதற்கு விரல் அடையாளம் அல்லது முக அடையாளம் ஆகியவற்றினூடான அங்க அடையாள உறுதிப்படுத்தல் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. வலுவான இரு வழி உறுதிப்படுத்தல் அங்கீகாரத்தை (Two-Factor Authentication – 2FA) உறுதி செய்வதற்காக, பரிவர்த்தனைகள் அனைத்தும் One-Time Passwords (OTPs) மூலம் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன. செயலியில் நேரடியாகவே தாம் விரும்பும் நிதிப் பரிமாற்ற உச்ச எல்லைகளை நிர்ணயிக்கும் அல்லது மாற்றும் திறனைக் கொண்டுள்ளதால், நிதிப் பரிமாற்றங்களை மகத்தான அளவில் கட்டுப்படுத்தும் வழிமுறையையும் பயனர்கள் கொண்டுள்ளனர்.       

DFCC வங்கியின் பிரதம டிஜிட்டல் அதிகாரி ஒமார் சஹிப் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “2025ம் ஆண்டளவில் மிகவும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய மற்றும் டிஜிட்டல்ரீதியாக இடமளிக்கின்ற வங்கியாகத் திகழ வேண்டுமென்பதே எமது மூலோபாய இலக்காகக் காணப்படுகின்றது. DFCC ONE அந்த அர்ப்பணிப்புக்குச் சான்றாக உள்ளதுடன், வங்கிச்சேவை மற்றும் வாழ்க்கைமுறை தேவைகளுக்கு மிகவும் உகந்த செயலியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. வாடிக்கையாளர் பின்னூட்டம் குறித்த ஆழமான கருத்துக்களின் வழிகாட்டலுடன், DFCC Virtual Wallet இலிருந்து DFCC ONE க்கான மாற்றமானது வெறும் ஆரம்பம் மாத்திரமே. பல வியப்பூட்டும் மேம்பாடுகளைக் கொண்டுள்ள நிலையில், டிஜிட்டல் வங்கிச்சேவை அனுபவத்திற்கு மீள்வரைவிலக்கணம் வகுப்பதற்கு எம்முடன் கைகோர்க்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.       

இலங்கையில் பல்வகைப்பட்ட வாடிக்கையாளர் தளத்திற்கும் சேவைகளை வழங்கும் வகையில் மும்மொழி ஆதரவுடன், அனைவரையும் உள்ளடக்கும் மற்றும் தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட அனுபவத்தை DFCC ONE வழங்குகின்றது. பயனர்கள் தாம் விரும்புகின்ற மொழியில் இடைத்தொடர்பாடி, Dark Mode தனிப்பயனாக்க மேம்பாடு போன்ற கூடுதல் சிறப்பம்சங்களையும் அனுபவிக்க முடியும். கூடுதல் சௌகரியத்திற்காக, DFCC Virtual Wallet ல் கொண்டுள்ள விருப்பத்திற்குரிய அம்சங்களை DFCC ONE க்கு இறக்குமதி செய்ய முடிவதால், சீரான புதுப்பித்தல் நடைமுறை உறுதி செய்யப்படுகின்றது.       

DFCC ONE ஆனது டிஜிட்டல் வங்கிச்சேவையை புதிய யுகத்திற்கு வழிநடத்திச் செல்லும் நிலையில், இந்த செயலியானது ஒரு கருவிக்கும் மேலானது என்பதுடன், வாடிக்கையாளர்கள் தமது நிதியை மிக இலகுவாகவும், பாதுகாப்பாகவும் நிர்வகிப்பதற்கு அவர்களுக்கு வலுவூட்டுகின்ற ஒரு கூட்டாளராகும். இந்த மாற்றத்தை DFCC வங்கி முன்னெடுத்துச் செல்லும் நிலையில், டிஜிட்டல் வங்கிச்சேவையின் எதிர்காலம் நம்முன்னேயே உள்ளதுடன், ஒரு தடவையில் ஒரு தரம் தொடுவதன் மூலமாக வாய்ப்புக்களுக்கு மீள்வரைவிலக்கணம் வகுக்கின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here