“DFCC Junior” சிறுவர்களுக்கு முதன்முதலாக மின்-வவுச்சர்கள், ரோபோட்டிக்ஸ் மற்றும் குறிமுறையேற்ற (coding) கருவிகளை வழங்குகின்றது

25

அனைவருக்கும் ஏற்ற வங்கியான DFCC வங்கி, சிறு வயதிலேயே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டமான அதன் DFCC Junior சேமிப்புக் கணக்குகளுக்கு மேம்படுத்தப்பட்ட தொடர் நன்மைகளை வழங்குவது தொடர்பில் அண்மையில் அறிவித்துள்ளது. இதன் பிரகாரம், இலங்கையில் முதல்முறையாக தற்போது DFCC Junior கணக்கு வாடிக்கையாளர்கள் சிறுவர்களுக்கான மின்-அன்பளிப்பு வவுச்சர்கள், ஈடுபாடுகளுடனான ரோபோட்டிக்ஸ் மற்றும் குறிமுறையேற்ற (coding) கற்றல் சாதனங்களைப் பெற்றுக்கொள்கின்றனர். DFCC Junior மின்-வவுச்சர்கள் நாடளாவியரீதியில் 110 வர்த்தக ஸ்தாபனங்களை உள்ளடக்குவதுடன், விநோதமும், அறிவுபூர்வமும் கொண்ட வியப்பூட்டும் வெகுமதிகளை அனுபவிக்கும் அதேசமயம், சேமிப்பதற்கு சிறுவர்கள், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களை ஊக்குவிக்கின்றது.

கற்றலின் மூலமான புத்தாக்கத்தின் மீது அர்ப்பணிப்புடன் உள்ள DFCC வங்கி, STEM (விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) கல்வி வழங்குநர்களுடன் கைகோர்த்துள்ளதுடன், DFCC Junior கணக்கு வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறுவர்கள் தமது கல்வி இலக்குகளை அடையப்பெற உதவும் அதேசமயம், சேமிப்பை இது இன்னும் வெகுமதி கொண்டதாக மாற்றுகின்றது. நீண்ட கால அடிப்படையில் நிலைபேற்றியல் கொண்ட பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு திறன்மிக்க, நிதியியல் அறிவு கொண்ட சனத்தொகையை வளர்க்க வேண்டும் என்ற DFCC வங்கியின் நிலைபேற்றியல் மூலோபாயத்துடன் இது ஒன்றியுள்ளது.

சேமிப்பதன் முக்கியத்துவம் குறித்து DFCC வங்கியின் தனிநபர் வங்கிச்சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான சிரேஷ்ட துணைத் தலைவரான ஆசிரி இத்தமல்கொட அவர்கள் கருத்து வெளியிடுகையில், “ஒரு நிதியியல் நிறுவனம் என்ற ரீதியில், சுபீட்சமான எதிர்காலத்திற்கு தேவையான அத்திவாரத்தை இட்டுக்கொள்ள வழிகோலுவதால், சேமிப்புப் பழக்கத்தை சிறு வயதிலேயே பெற்றோர், பாதுகாவலர் மற்றும் சிறுவர் மத்தியில் ஊக்குவிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் இனங்கண்டுள்ளோம். எமது மேம்படுத்தப்பட்ட DFCC Junior கணக்குகள் மற்றும் அவற்றின் மூலமான வியப்பூட்டும் நன்மைகள் மூலமாக, தமது பிள்ளைகளின் நிதியியல் மற்றும் கல்வித்துறை வெற்றிகளுக்கு வழிகோலுவதற்கு பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு வலுவூட்டுவதே எமது நோக்கம். அடுத்த தலைமுறையின் அபிலாஷைகளை வளர்த்து, அறிவுபூர்வமான வழியில் அவர்கள் விநோதாம்ச செயல்பாட்டில் ஈடுபட்டு, அவர்களுடைய திறமைகளை வெளிக்கொணர்ந்து, அவற்றை மேம்படுத்துவதை ஊக்குவிக்கச் செய்வதை எமது வெகுமதித் திட்டங்கள் பிரதிபலிக்கின்றன,” என்று குறிப்பிட்டார்.

இளம் சேமிப்பாளர்கள் மீது DFCC வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்பு, அதன் விரிவான Junior வெகுமதிகள் திட்டத்தின் மூலமாக நிரூபணமாகின்றது. இத்திட்டமானது, தரம் 5 புலமைப்பரிசில் வெகுமதி, கபொத சா/த பரீட்சை வெகுமதி மற்றும் 18 ஆவது பிறந்த தின வெகுமதி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இந்த தனித்துவமான வெகுமதிகள் வாழ்க்கையில் முக்கிய சாதனை இலக்குகள் மற்றும் கல்விச் சாதனைகளைக் கொண்டாடி, வாழ்வில் சாதித்து விட்டோம் என்ற உணர்வை வளர்த்து, சிறுவர்கள் வாழ்வில் மகத்தான சாதனைகளைப் படைக்க ஊக்குவிக்கின்றது.     

DFCC வங்கி தனது DFCC Junior திட்டத்தை முழுமையாக மெருகேற்றியுள்ளமை, இலங்கை மக்கள் அனைவரையும் வலுவூட்டுவதில் அர்ப்பணிப்புடைய, எதிர்காலத்திற்கு சிறப்பாக முகங்கொடுக்கின்ற நிதியியல் நிறுவனம் என்ற அதன் ஸ்தானத்தை மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது. சிறு வயதிலேயே சேமிப்பு மற்றும் நிதித் திட்டமிடல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை ஊக்குவித்து, இலங்கை எங்கிலும் சிறுவர் மற்றும் குடும்பங்களுக்கு பிரகாசமான எதிர்காலத்திற்கு DFCC காத்திரமான பங்களிப்பை வழங்கி வருகின்றது.

DFCC Junior கணக்குகள் மற்றும் அவை வழங்கும் மேம்பட்ட அனுகூலங்கள் தொடர்பில் மேலும் விபரங்களை அறிந்து கொள்ள, அல்லது கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கு தயவு செய்து www.dfcc.lk/products/dfcc-junior-account/ என்ற இணையப்பக்கத்தை பாருங்கள், எந்தவொரு DFCC கிளைக்கும் வருகை தாருங்கள் அல்லது 011-2-350000 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துங்கள்.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here