DFCC Garusaru Hybrid Personal Loan ஓய்வு பெறும் வயதை அண்மிக்கின்ற அரச ஊழியர்களுக்கு மேம்பட்ட நிதியியல் நெகிழ்வை வழங்குகின்றது

35

நிதியியல் ரீதியாக அனைவரையும் உள்ளடக்கி, வலுவூட்டுவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்ற ஒரு வங்கியான DFCC வங்கி, “DFCC Garusaru Hybrid Personal Loan” என்ற புதுமையான புதியதொரு கலப்பு தனிநபர் கடன் வசதியொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அறிவித்துள்ளது. இந்த வகையிலான புத்தாக்கத்துடன், முதன்முதலாக அறிமுகமாக்கப்பட்டுள்ள இக்கடன் திட்டமானது ஓய்வு பெறும் வயதை அண்மிக்கின்ற அரச ஊழியர்களுக்கான விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் முக்கிய தேவைகளுக்கான ஒரு தீர்வாகவும் காணப்படுகின்றது. வழக்கமான கடன் திட்டங்கள் போல் அல்லாது, DFCC Garusaru Hybrid Personal Loan தனிநபர் கடன் திட்டமானது கடனைப் பெற்றுக்கொள்கின்றவர்கள் பணியாற்றும் போதும் மற்றும் ஓய்வு பெற்ற பின்னரும் கடனை மீளச் செலுத்தும் வகையில் தனித்துவமான சிறப்பம்சத்தை வழங்குவதுடன், வங்கித்துறையில் குறிப்பிடத்தக்கதொரு சாதனையாகவும் மாறியுள்ளது.     

இன்னும் 6 ஆண்டுகளுக்குள் ஓய்வு பெறும் வயதை அண்மிக்கின்ற அரச ஊழியர்களின் நிதியியல் தேவைகளை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள DFCC Garusaru Hybrid Personal Loan ஆனது பொதுவான சவாலுக்கு நெகிழ்வானதொரு தீர்வாக அமைந்துள்ளது. அந்த வகையில் அதிகபட்சமாக ரூபா 5,000,000/- வரையான கணிசமான நிதியை அணுகுவதற்கு இத்தீர்வு அரச ஊழியர்களுக்கு வலுவூட்டுகிறது. குறைந்தபட்ச மாதாந்த சம்பளமாக ரூபா 30,000/- உடன் நிரந்தர சேவையிலுள்ள அனைத்து அரச ஊழியர்களும் இதற்கு தகமை உடையவர்கள். கடனைப் பெறுகின்றவர்கள் 75 வயதை எட்டுவதற்கு முன்பதாக கடன் பெற்ற தொகை முழுவதையும் மீளச் செலுத்தும் வகையில், இக்கடன் 20 ஆண்டுகள் வரையான தவணைக்காலத்தையும் கொண்டுள்ளது.   

இப்புதிய கடன் திட்டம் தொடர்பில் DFCC வங்கியின் தனிநபர் வங்கிச்சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிப் பிரிவுக்கான சிரேஷ்ட உப தலைவர் ஆசிரி இத்தமல்கொட அவர்கள் கருத்து வெளியிடுகையில், “ஓய்வுபெறும் வயதை அண்மிக்கின்ற அரச ஊழியர்களின் தனித்துவமான தேவைகளுக்கு தீர்வை வழங்குகின்ற இந்த முன்னோடி திட்டத்தை சந்தையில் அறிமுகப்படுத்துவதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம். அரச சேவையிலுள்ள சிரேஷ்ட பிரஜைகளை நிதியியல் ரீதியாக வலுவூட்டுவதில் இது முக்கியமானதொரு சாதனையாகும். சேவையில் உள்ள போதும், ஓய்வுபெற்ற பின்னரும் கடனை மீளச் செலுத்துவதற்கான ஆற்றல், ஒப்பற்ற நெகிழ்வினை வழங்குவதுடன், தனிநபர்கள் தமது எதிர்காலத்தை திட்டமிடும் அதேசமயம், கணிசமான நிதியியல் உதவிக்கான அணுகலுக்கும் அவர்களுக்கு வலுவூட்டுகிறது. கலப்பு மீள்கொடுப்பனவுக் கட்டமைப்பானது அதிகபட்ச நெகிழ்வுக்கு இடமளித்து, சிரேஷ்ட அரச ஊழியர்கள் தமது பிற்காலத்தை மகிழ்வுடன் போக்குவதற்கு இடமளிக்கின்றது,” என்று குறிப்பிட்டார்.    

சேவையில் உள்ள போது ஆரம்பித்து, ஓய்வுபெற்ற பின்னரும் தொடரும் வகையில் கடன் பெற்றவரின் வாழ்வுடன் ஒத்திசைகின்ற மீள்கொடுப்பனவுக் கட்டமைப்பானது DFCC Garusaru Hybrid Personal Loan திட்டத்தின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாகும். கடன் பெற்றவர்கள் சேவையில் உள்ள போது வட்டி மற்றும் முதல் ஆகிய இரண்டையும் மாதாந்தம் மீளச் செலுத்துவதால், நிர்வகிக்கக்கூடிய மீள்கொடுப்பனவு நடைமுறையை உறுதி செய்கின்றது. ஓய்வுபெற்றவுடன் இக்கடன் சம தொகை மீள்கொடுப்பனவைக் கொண்ட கடனான மாற்றம் பெறுவதுடன், ஓய்வுபெற்ற காலத்தில் நிதியியல் சுமையை இலகுபடுத்துகின்றது. மேலும், இவ்வாறு மாற்றம் பெறுகின்ற போது 6 மாதங்களுக்கான சலுகைக்காலம் வழங்கப்பட்டு, கடன் பெற்றவர்கள் தமது வங்கிக் கணக்கிற்கு ஓய்வூதியம் வரவு வைக்கப்படும் வரை அவர்களுக்கு நெகிழ்வை வழங்குகின்றது.   

வாடிக்கையாளர் திருப்தி மற்றும் நிதியியல் உள்ளடக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தியுள்ள DFCC வங்கி, அரச ஊழியர்களின் வங்கிச்சேவை அனுபவத்தில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் உள்ளது. DFCC Garusaru Hybrid Personal Loan திட்டமானது DFCC வங்கியின் தீர்வுகள் மற்றும் சேவைகளின் வரிசையை மேலும் வலுப்படுத்துவதுடன், புத்தாக்கமான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட நிதியியல் தீர்வுகளை வழங்கி, பரந்துபட்ட வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு சேவைகளை கிடைக்கச்செய்வதில் அதன் அர்ப்பணிப்பையும் மீள உறுதிப்படுத்துகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here