DFCC வங்கி வழங்கும் பெண்களை மையமாகக் கொண்ட வங்கிச்சேவையான DFCC Aloka, சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில், சுகாதாரத்துறையிலுள்ள பெண்களை கௌரவிப்பதற்காக தனித்துவமான நிகழ்வொன்றை அண்மையில் கண்டி பொது வைத்தியசாலையில் நடாத்தியுள்ளது. எமது சமூகங்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு உதவுவதில் பெண்களின் முக்கிய வகிபாகத்தைச் சுட்டிக்காட்டும் வகையில், ஆழமான அறிவைப் பகிரும் குழுநிலை கலந்துரையாடல் அடங்கலாக, பல்வேறு ஆர்வமூட்டும் செயல்பாடுகள் இந்நிகழ்வில் இடம்பெற்றன.
உப தலைவரும், Pinnacle திட்டமிடல் மற்றும் அமுலாக்கத்திற்கான தலைமை அதிகாரியுமான ஷேரா ஹசன் அவர்கள் கருத்து நிகழ்வில் பங்குபற்றியோர் மத்தியில் உரையாற்றும் போது தாதிய தொழில் என்பது தொழில் சந்தையில் மிகவும் நாடப்படுகின்ற ஒன்றாகக் காணப்படுகின்ற நிலையில், தாதியரின் மென்திறன்களை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள திறன் மேம்பாட்டு செயலமர்வுகள் மற்றும் பயிற்சி நிகழ்வுகளுக்கு DFCC Aloka ஆல் அனுசரணையளிக்க முடியும் என்பதை வலியுறுத்தினார். டிஜிட்டல் அறிவு, தலைமைத்துவ விருத்தி மற்றும் தொடர்பாடல் திறன்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை இச்செயலமர்வுகள் உள்ளடக்கியுள்ளதுடன், இவை அனைத்திற்கும் DFCC Aloka ஆதரவளிக்கின்றது. தனது வாடிக்கையாளர்களின் பல்வகைப்பட்ட நிதித் தேவைகளை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பரந்த வகையான தயாரிப்புக்கள் மற்றும் சேவைகளை வழங்குவதில் DFCC Aloka அர்ப்பணிப்புடன் உள்ளதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
ஒரு முழுமையான வங்கிச்சேவைத் தீர்வாகக் காணப்படுகின்ற DFCC Aloka ஆனது அனைத்து வருமான மட்டங்களையும், பிரிவுகளையும் சார்ந்த பெண்களுக்கு சேவைகளை வழங்கி வருவதுடன், வேறுபட்ட தேவைகள் மற்றும் பின்னணிகளை சார்ந்த பரந்தளவிலான பெண்களை அரவணைப்பதை உறுதி செய்கின்றது. மாணவர்கள், தொழில்வல்லுனர்கள், தொழில்முயற்சியாளர்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகள் அடங்கலாக, பெண்கள் முகங்கொடுக்கின்ற தனித்துவமான சவால்கள் குறித்து கருத்து வெளியிட்ட அவர், பெண்களின் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும், பல்வேறு வாழ்க்கைமுறை தேவைப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு உதவும் வகையில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட தீர்வுகளை DFCC Aloka அறிமுகப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.