DFCC Affinity கடனட்டைகள், பல்வகைப்பட்ட வாடிக்கையாளர்கள் பிரிவுகளுக்கு தனித்துவமான கடனட்டை முன்மொழிவுகளைக் கொண்டுசெல்கின்றன

51

பல்வகைப்பட்ட வாடிக்கையாளர் பிரிவுகள் மற்றும் குழுக்களை ஈர்க்கும் வகையில், சங்கங்கள் தமது அங்கத்தவர்களுக்கு புதிய வாய்ப்புக்களைத் தோற்றுவிப்பதற்கான ஒரு மிகச் சிறந்த கருவியாக DFCC Affinity கடனட்டைகள் காணப்படுகின்றன. Affinity கடனட்டைகள் பாதுகாப்பான, மிகவும் பிரத்தியேகமயப்படுத்தப்பட்ட கொடுப்பனவு மற்றும் வாழ்க்கைமுறைத் தீர்வுகள், சலுகைகளில் நெகிழ்வுடனான மீளப்பெற்று அனுபவிக்கும் தெரிவுகள், மற்றும் அட்டைதாரர், Affinity கூட்டாளர் என இரு தரப்பினருக்கும் முக்கியமான மதிப்பு முன்மொழிவுகள் ஆகியவற்றை Affinity கடனட்டைகள் வழங்குகின்றன.            

DFCC வங்கியின் Affinity கடனட்டைகளின் மதிப்பு குறித்து விளக்கிய டென்வர் லூயிஸ் – உப தலைவர் – அட்டை மையத்தின் தலைமை அதிகாரி அவர்கள், “அனைவருக்கும் ஏற்ற வங்கி என்ற வகையில், பல்வகைப்பட்ட வாடிக்கையாளர்கள் பிரிவுகளுக்கு மதிப்பைச் சேர்ப்பிப்பதற்காக தயாரிப்பு மற்றும் சேவைகளை வழங்கும் முயற்சிகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். பல்வகைப்பட்ட ஸ்தாபனங்கள் மற்றும் அவற்றின் அங்கத்தவர்கள் பகிரப்பட்ட நோக்கமொன்றுக்காக ஒன்றுபட்டு, அவர்களுக்கு இடையில் காணப்படும் இடைவெளியை நிரப்பும் அதேசமயம், இந்த வாடிக்கையாளர்கள் பிரிவுகளுக்கு ஒப்பற்ற மதிப்பைத் தோற்றுவிக்கும் விசேட நன்மைகளை வழங்கும் வகையில் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டு அவை வழங்கப்படுவதற்கு எமது Affinity கடனட்டைகள் உதவுகின்றன,” என்று குறிப்பிட்டார்.       

அட்டைதாரர் அட்டையை உபயோகித்து மேற்கொள்கின்ற கொடுப்பனவுத் தொகைகளின் அடிப்படையில் Affinity கூட்டாளர்களுக்கு விகிதாசார பண நன்மைகளும் DFCC வங்கியின் Affinity அட்டைகள் வழங்கும் நன்மைகளில் அடங்கியுள்ளதுடன், அந்த வகையில், புதிய வருமான மார்க்கங்களைத் தோற்றுவித்து, இன்னும் கூடுதலான அளவில் கவருகின்ற நம்பிக்கை அங்கத்துவ முன்மொழிவுகளை வழங்குவதற்கு ஏனைய கூட்டாளர்களுடன் ஒத்துழைப்பதற்கான மிகச் சிறந்த வழியையும் வழங்குகின்றன.

மாற்றத்திற்கு வித்திடுகின்ற சிந்தனைகள் மற்றும் முயற்சிகளுக்கு வலுவூட்டுகின்ற வகையில், பகிரப்பட்ட நோக்கங்களை ஸ்தாபிப்பதற்காக மூலோபாய கூட்டாண்மைகளை ஏற்படுத்துவதற்கும் Affinity கடனட்டைகள் இடமளிக்கின்றன. பல்வேறு பழைய மாணவர் சங்கங்களின் அங்கத்தவர்களுக்கு DFCC Affinity கடனட்டைகள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளன. DFCC வங்கியினூடாக Affinity கடனட்டையை விநியோகிக்க விரும்புகின்ற எந்தவொரு ஸ்தாபனமும் அல்லது சங்கமும் இதன் பயனைப் பெற்றுக்கொள்ள முன்வருமாறு அழைக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here