DFCC வங்கி, SLIM Brand Excellence Awards 2023 விருதுகள் நிகழ்வில் ஆண்டின் பசுமை வர்த்தகநாமத்திற்கான சிறப்புத்தகமை விருதை வென்றுள்ளது  

29

பசுமை பேண் முயற்சிகளுக்கான கடன்களை வழங்குவதில் இலங்கையில் முன்னோடியான DFCC வங்கி, பெருமதிப்புமிக்க SLIM Brand Excellence Awards 2023 விருதுகள் நிகழ்வில், ஆண்டின் மிகச் சிறந்த பசுமை வர்த்தகநாமத்திற்கான (Green Brand) சிறப்புத்தகமை (Merit Award) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. நிலைபேணத்தகு நடைமுறைகள் மீதான DFCC வங்கியின் ஓயாத அர்ப்பணிப்பு மற்றும் இலங்கையில் சூழல்நேயம்மிக்க பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதில் அதன் குறிப்பிடத்தக்க வகிபாகம் ஆகியவற்றை பெருமதிப்பிற்குரிய இந்த பாராட்டு அங்கீகாரம் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. சூழலைப் பேணும் முயற்சிகளை முன்னின்று மேற்கொள்ளல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றில் வங்கியின் மூன்று தசாப்தகால நீண்ட பயணத்திற்கான ஒரு அங்கீகாரமாகவும் இவ்விருது அமைந்துள்ளது.            

DFCC வங்கி பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திமால் பெரேரா அவர்கள் அண்மைய SLIM Brand Excellence Awards 2023 நிகழ்வில் வங்கியின் சாதனை குறித்து பெருமையுடன் கருத்து வெளியிடுகையில், “நிலைபேற்றியல் மற்றும் பொறுப்புணர்வுடனான வங்கிச்சேவை மீது எமது அயராத அர்ப்பணிப்பை இச்சாதனை பிரதிபலிக்கின்றது. சூழல் மற்றும் சமூகத்தின் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதில் எமது தீவிரமான உழைப்பினை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் ஆண்டின் மிகச் சிறந்த பசுமை வர்த்தகநாமம் என்ற விருதை வென்றுள்ளமை எமக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய கௌரவம். நிலைபேற்றியல் மூலோபாயம் 2023 என்ற கோட்பாட்டை நாம் முன்னெடுத்துச் செல்லும் நிலையில், கல்வி, தொழில்முயற்சியாண்மை, சூழல், அனர்த்த நிவாரணம், முதியோர் மீதான அக்கறை மற்றும் உடற்பயிற்சி போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கிய முக்கிய பெறுபேற்றுக் குறிகாட்டிகளுடன் (KPI) பெரும் வேட்கை கொண்ட இலக்குகளை எட்டுவதே எமது நோக்கம். பசுமை பேண் முயற்சிகளுக்கான கடன், நிலைபேணத்தகு தொழில்முயற்சியாண்மை மற்றும் டிஜிட்டல் செயல்படுத்தல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, நிலைபேற்றியலை நோக்கிய முன்னணி பங்களிப்பாளராக, பசுமை பேண் முயற்சிகளுக்கு கடன் வழங்கும் வங்கி என்ற நாமத்துடன், நெகிழ்திறன் கொண்ட வணிக கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவதே வங்கியின் இலட்சியம்,” என்று குறிப்பிட்டார்.

DFCC வங்கியின் முற்கூட்டிய எதிர்வுகூறலுடனான அணுகுமுறையானது 2023 ஜுலையில் Green Climate Fund (GCF) இடமிருந்து சான்று அங்கீகாரத்தைப் பெறுவதற்கு அதற்கு வழிகோலியுள்ளதுடன், காலநிலை சார்ந்த செயற்பாடுகள் மீது அர்ப்பணிப்புடன் உள்ள ஒரு முன்னணி நிறுவனம் என்ற அதன் ஸ்தானத்தை மேலும் வலுப்படுத்தி, இந்த சாதனையை முதன்முதலாகப் பெற்றுள்ள மற்றும் ஒரேயொரு இலங்கை நிறுவனம் என்ற சிறப்பினையும் சம்பாதித்துள்ளது. காலநிலை செயற்பாடுகள் சார்ந்த உலகின் மிகப் பெரிய நிதி வழங்கல் அமைப்பாக GCF திகழ்வதுடன், இலங்கையில் காலநிலை தணிவிப்பு மற்றும் அது சார்ந்த உள்வாங்கல்களுக்கான செயற்திட்டங்களுக்கு கடன் வசதியளிக்கும் போது செயற்திட்டமொன்றுக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர் வரையான செலவுகளுக்கு சலுகை அடிப்படையில் கடனை வழங்குவதற்கான அணுகலுக்கு மேற்குறிப்பிட்ட சான்று அங்கீகாரமானது DFCC வங்கிக்கு வலுவூட்டுகின்றது. மிகவும் கடுமையான நடைமுறையின் பின்னரே GCF சான்று அங்கீகாரத்தை DFCC வங்கி சம்பாதித்துள்ளதுடன், காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடி, நிலைபேணத்தகு எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் முன்னணியில் நின்று செயற்படுகின்ற உலகளாவிய பெருமதிப்புமிக்க நிறுவனங்கள் வரிசையில் வங்கியும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டங்களுக்கு கடன் வசதியளித்து, நிலைபேணத்தகு வழியில் சூழல்நேய மாற்றத்தை வழிநடாத்துவதில் DFCC வங்கி முன்னோடியாகத் திகழ்ந்து வருகின்றது. சூரிய மின்சக்தி PV கூட்டு ஆலைகள், நீர், காற்று, சூரிய, கரிம உயிர்ப்பொருட்கள் மற்றும் கழிவிலிருந்து எரிசக்தி போன்ற பல்வேறு மின்னுற்பத்தி செயற்திட்டங்களுக்கு 1988 முதல் வங்கி உதவி வந்துள்ளது. உலக வங்கி மற்றும் Global Environment Facility ஆகியவற்றின் ஆதரவுடன் இரு செயற்திட்டங்களை வங்கி நடைமுறைப்படுத்தியுள்ளதுடன், இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இச்செயற்திடடங்கள் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தி வங்கிக்கு பெரும் புகழை ஈட்டித்தந்துள்ளன.

மேலும், இந்த கடன் வழங்கல் செயற்பாடுகள் மூலமாக, தொழில் முயற்சியாளர்களும், வாடிக்கையாளர்களுக்கும் சூழல்நேயம்மிக்க தெரிவுகளை மேற்கொள்ள வங்கி நேர்மறையாக செல்வாக்குச் செலுத்துவதுடன், நிலைபேணத்தகு அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைமுறைகளையும் ஊக்கப்படுத்தி வருகின்றது.

வளங்களின் உச்சத்திறனை உபயோகிக்கும் தொழிற்பாடுகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் காகித படிவங்களின்றிய சூழலை வளர்த்தல் ஆகியவற்றின் மூலமாக காபன் நடுநிலை வகிக்கும் வங்கி என்ற அர்ப்பணிப்புடன் DFCC வங்கியின் சூழல் நேய நடைமுறைகளுடனான பயணம் முக்கிய சிறப்பம்சங்களுள் ஒன்றாகும். முக்கிய வணிக செயல்பாடுகளை முற்கூட்டிய எதிர்வுகூறலுடன் வங்கி மீள்வடிவமைப்புச் செய்துள்ளதுடன், அதன் சுற்றுச்சூழல் அடிச்சுவட்டைக் குறைப்பதற்கு இடமளித்து வருகின்றது. எரிசக்தியின் திறனை உச்சப்படுத்தும் மற்றும் காகித படிவங்களின்றிய தொழிற்பாடுகளை ஊக்குவித்தல், நிலைபேணத்தகு கொள்முதல் வழிகாட்டல்களை அறிமுகப்படுத்தல், தனது கட்டடங்களின் மேற்கூரையில் சூரிய மின்னுற்பத்தி கலங்களைப் பொருத்தல் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகள் அவற்றுள் அடங்கியுள்ளன. பல் ஊடக வாடிக்கையாளர் அனுபவத்துடன், சர்வதேச மட்டத்தில் அங்கீகாரம் பெற்ற டிஜிட்டல் வங்கிச்சேவைகளை வடிவமைத்து, முன்னெடுப்பதிலும் இது DFCC வங்கிக்கு பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது.

சூழலைப் பேணுவதில் DFCC வங்கியின் முயற்சிகள் அதன் உள்ளக செயல்பாடுகளுக்கு அப்பாலும் வியாபித்து, வெளிப்புற ஈடுபாடுகளிலும் விரிவான அணுகுமுறையொன்றை உள்ளடக்கியுள்ளது. சூழல்ரீதியாக நேயம்மிக்க பசுமை பேணல் நடைமுறைகளை உள்வாங்குமாறு தனது வாடிக்கையாளர்கள் மற்றும் வழங்குநர்களையும் வங்கி ஊக்குவித்து, தீவிரமாக ஆதரவளித்து வருகின்றது. பசுமை வைப்புக்கள் போன்ற பசுமை பேணல் தயாரிப்புக்கள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்துவது, தனது கட்டமைப்பினுள் நேர்மறையான சூழல் நடத்தையை உட்புகுத்துவதில் DFCC வங்கியின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.

இந்த வகையில், ஆண்டின் மிகச் சிறந்த பசுமை வர்த்தகநாமம் என DFCC வங்கி ஈட்டியுள்ள வெற்றியானது, அதன் வலுவான சூழல் மற்றும் சமூக விளைவுகளுக்கான முயற்சிகளை பிரதிபலிக்கின்றது. பசுமை பேணல் முயற்சிகளுக்கு கடன் வழங்க ஆரம்பித்து, காபன் நடுநிலை வகிக்கும் ஸ்தாபனமாக வளர்ச்சி கண்டுள்ள வங்கியின் நீண்ட பயணம், சூழல், சமூகம் மற்றும் பரந்த பொருளாதாரம் ஆகியவற்றில் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற வங்கியின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகின்றது. காலநிலை மாற்றத்திற்கு எதிராக போராட உதவுதல், நிதியியல் ரீதியாக அனைவரையும் உள்வாங்குவதை ஊக்குவித்தல் மற்றும் பசுமையான பொருளாதாரத்திற்கு பங்களித்தல் ஆகியவற்றில் அதன் முயற்சிகள் மூலமாக ஐநா நிலைபேணத்தகு அபிவிருத்தி இலக்குகள் மீது DFCC வங்கியின் அர்ப்பணிப்பானது தெளிவாக புலப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here