DFCC வங்கி, BestWeb.LK 2024 விருதுகள் நிகழ்வில் உச்ச விருதுகளை தனதாக்கியுள்ளது

12

டிஜிட்டல் புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட வங்கிச்சேவை தீர்வுகள் ஆகியவற்றில் முன்னோடியான DFCC வங்கி, LK Domain Registry ஆல் நடத்தப்பட்ட 14வது BestWeb.LK Awards 2024 விருதுகள் நிகழ்வில் வெற்றியீட்டியுள்ளது. மிகச் சிறந்த வங்கிச்சேவை இணையத்தளத்திற்கான (Best Banking Website) பெருமதிப்பிற்குரிய தங்க விருது மற்றும் வங்கிச்சேவைப் பிரிவில் மிகச் சிறந்த மொபைல் பயனர் அனுபவத்திற்கான (Best Mobile User Experience in the Banking Category) சிறப்பு விருது ஆகியவற்றை வென்று இவ்வங்கி வரலாறு படைத்துள்ளது. மேலும், இந்த வெற்றிகளுடன், BestWeb.LK Awards 2024 நிகழ்வில் 22 பிரிவுகள் மத்தியில் ஒட்டுமொத்த வெள்ளி விருதிற்கான கௌரவமும் DFCC வங்கிக்கு கிடைத்துள்ளதுடன், இலங்கையில் மிகவும் டிஜிட்டல் வழிமுறை கொண்ட மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய வங்கிகளுள் ஒன்று என்ற தனது ஸ்தானத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.         

இவ்விருதுகள் மற்றும் வங்கியின் டிஜிட்டல் பரிமாண மாற்றம் குறித்து கருத்து வெளியிட்ட DFCC வங்கியின் உப தலைவரும், டிஜிட்டல் சந்தைப்படுத்தலுக்கான தலைமை அதிகாரியுமான தினேஷ் ஜெபமணி அவர்கள், “BestWeb.LK 2024 விருதுகள் நிகழ்வில் பெருமதிப்பிற்குரிய இவ்விருதுகளை வென்றுள்ளமை DFCC வங்கிக்கு மிகவும் பெருமைமிக்க சாதனையாக மாறியுள்ளதுடன், இவ்விருதுகள் நிகழ்வில் கடந்த காலங்களில் நாம் ஈட்டியுள்ள வெற்றிகளை அத்திவாரமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இவை எமது முயற்சிகளுக்கான வெகுமதியாக அமைந்துள்ளதுடன், எமது வாடிக்கையாளர்களின் பரிமாண மாற்றம் கண்டு வருகின்ற தேவைகளை நிறைவேற்றுவதில், ஒப்பற்ற டிஜிட்டல் அனுபவங்களை வழங்குவதில் எமது அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கின்றன. நாம் தொடர்ந்தும் புத்தாக்கத்தை முன்னெடுக்கும் சமயத்தில், வாடிக்கையாளர்களின் திருப்தியை மேம்படுத்தி, அனைத்து பிரிவுகள் மத்தியிலும் டிஜிட்டல் வழிமுறைகளை உள்வாங்குவதை முன்னெடுப்பதில் கவனம் செலுத்துவோம்,” என்று குறிப்பிட்டார்.   

BestWeb.LK Awards 2024 நிகழ்வில் முதல்முறையாக இந்த விருது அங்கீகாரங்களைப் பெற்றுள்ளமை தலைசிறந்த டிஜிட்டல் அனுபவங்களை வழங்குவதில் DFCC வங்கி மகத்துவத்தின் மீது இடைவிடாத நாட்டம் கொண்டுள்ளதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. மிகச் சிறந்த வங்கிச்சேவை இணையத்தளத்திற்கான தங்க விருதை வென்றுள்ளமை, பயனர் ஈடுபாட்டை மேம்படுத்தி, நிதியியல் சேவைகளுக்கு எளிமையான அணுகலை வழங்கும் நவீன, பயனர்நேய இடைமுகத்தைத் தோற்றுவிப்பதில் வங்கியின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றது. மிகச் சிறந்த மொபைல் பயனர் அனுபவத்திற்கான சிறப்பு விருது ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மொபைல் அனுபவத்தின் உச்சத்தை வழங்கி, தங்குதடையின்றிய மேம்படுத்தப்பட்ட அணுகலை வழங்குவதில் அதன் முயற்சிகளுக்கான அங்கீகாரமாகக் காணப்படுகின்றது.    

DFCC வங்கியின் விருதை வென்றுள்ள இணையத்தளம் டிஜிட்டல் இடமளிப்பு மூலமாக நிதியியல் அரவணைப்பு உள்ளடக்கத்திற்கு ஆதரவளிப்பதில் அதன் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியுள்ளது. பயனர் அனுபவம் மற்றும் பயன்பாடு ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட பல்வேறு புத்தாக்க அம்சங்களை இந்த இணையத்தளம் வழங்குகின்றது. புதிய வாடிக்கையாளர்கள் அடங்கலாக, பயனர்கள் தங்குதடையின்றி கணக்குகளை திறந்து, நிர்வகிப்பதற்கு இடமளிக்கின்ற இடைச்செயற்பாட்டு இணைய மற்றும் தீர்வு விசாரணைப் படிவங்களும் இவற்றுள் அடங்கியுள்ளன. இந்த இணையத்தளம் முழுமையாக மும்மொழி வசதிகளைக் கொண்டுள்ளதுடன், பயனர்கள் தமது தாய் மொழியில் இலகுவாக பயன்படுத்துவதை முன்னெடுப்பதை உறுதி செய்வதற்கு சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் அனைத்தும் கிடைக்கப்பெறுவதுடன், அதன் மூலமாக இலங்கையில் அனைவரையும் அரவணைத்து உள்ளடக்கும் வகையில் அணுகல் கிடைக்கப்பெறுவது ஊக்குவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு அல்லது உரிய ஆராய்வுகள் தொடர்பில் எவ்விதமான பாதிப்புக்களுமின்றி, ஆனால் கிளைக்கு நேரடியாக செல்ல வேண்டிய தேவையைப் போக்கி, புதிய கணக்குகளை திறப்பதற்கு இடமளிக்கின்ற DFCC வங்கியின் eKYC நெறிமுறைகள் மேலும் வலுச் சேர்ப்பிப்பதற்காக அமைந்துள்ளது.        

இணையத்தளத்திற்கு வருகை தருகின்றவர்கள் அறிவுபூர்வமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு வழிகாட்டும் வகையில், பயன்மிக்க நிதியியல் கணிப்பொறிகளையும் இது பயனர்களுக்கு வழங்குகின்றது. DFCC முதலீட்டு திட்டமிடல் கணிப்பொறி, வருமான வரி கணிப்பொறி, வீட்டுக் கடன் கணிப்பொறி, குத்தகை கணிப்பொறி, நிலையான வைப்பு கணிப்பொறி, தனிநபர் கடன் கணிப்பொறி மற்றும் பண மீளளிப்பு சலுகை கணிப்பொறி போன்ற கருவிகள் பயனர்கள் தமது நிதியை தன்னம்பிக்கையுடன் திட்டமிடுவதற்கு வலுவூட்டுகின்றது. மேலும், தீர்வு விபரங்கள் குறித்த இலகுவான வழிகாட்டல், சமூக ஊடக ஒன்றிப்புடன் தகவல் விபர வலைப்பதிவுகள், மற்றும் கடனட்டை தீர்வுகளை ஒப்பீடு செய்வதற்கான கருவிகள் போன்ற அம்சங்களும் இந்த இணையத்தளத்தில் உள்ளதுடன், இடைச்செயற்பாடுகளை ஊக்குவித்து, அறிவுபூர்வமான இணைய அனுபவத்தை வழங்குவதில் இவை அனைத்தும் பங்களிக்கின்றன.

BestWeb.LK Awards 2024 இந்த ஆண்டு நிகழ்வில் கிடைத்துள்ள அங்கீகாரம், டிஜிட்டல் வங்கிச்சேவை மகத்துவத்தின் எல்லைகளை தொடர்ச்சியாக விரிவுபடுத்தி, வங்கிச்சேவை துறையில் முன்னோடி என்ற DFCC வங்கியின் ஸ்தானத்தை மீள உறுதிப்படுத்தியுள்ளது. பயனர் அனுபவம், டிஜிட்டல்ரீதியாக வாடிக்கையாளர்களை உள்வாங்குதல், மற்றும் அரவணைப்பு உள்ளடகத்துடனான வடிவமைப்பு ஆகியவற்றின் மீது தெளிவான கவனத்துடன், அனைவருக்கும் ஏற்ற வங்கி என்ற தனது நன்மதிப்பை மேலும் வலுப்படுத்தி, தனது வாடிக்கையாளர்களின் பல்வேறுபட்ட தேவைகளை நிறைவேற்றும் வகையில் அதிநவீன டிஜிட்டல் தீர்வுகளை வழங்குவதில் DFCC வங்கி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது.    நீங்களும் DFCC வங்கியின் இணையத்தள அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள www.dfcc.lk என்ற தளத்தைப் பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here