DFCC வங்கி, Banking Awards Night நிகழ்வில் பணியாளர்களின் சிறந்த சாதனைகளைக் கொண்டாடியுள்ளது  

25

மகத்தான வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் தராதரம் மிக்க சேவை ஆகியவற்றுக்காக சிறப்பான அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ள ஒரு வங்கியான DFCC வங்கி, உச்ச பெறுபேறுகளை அடையப்பெற்ற பணியாளர்களைக் கௌரவிக்கும் முகமாக ஆண்டுதோறும் ஏற்பாடு செய்துவருகின்ற தனது DFCC Banking Awards 2023 விருதுகள் நிகழ்வை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. 2024 மார்ச் 23 அன்று BMICH மண்டபத்தில் நடைபெற்ற “The Shining Stars” நிகழ்வு, வெகு விமரிசையாக இடம்பெற்றதுடன், விருதுகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, நட்புறவையும், தோழமையையும் வளர்ப்பதற்கான சந்திப்பு மற்றும் விருந்து நிகழ்வுகளும் இடம்பெற்றன.      

2023 ஆம் ஆண்டில் வங்கியின் பெறுபேறுகளை மேம்படுத்துவதற்கு உதவி, மிகச் சிறந்த பெறுபேறுகளையும், தராதரங்களையும் அர்ப்பணிப்புடன் நிலைநாட்டிய DFCC வங்கியின் பணியாளர்களைக் கௌரவிப்பதே இவ்விருதுகள் நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது. 2023 நிதியாண்டின் போது நிதியியல், நிலைபேண்தகைமை மற்றும் வாடிக்கையாளர் சேவை அடங்கலாக, பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்த ஒரு ஆண்டை DFCC வங்கி பதிவு செய்துள்ளது. அந்த வகையில், வங்கியின் கிளை வலையமைப்பு மற்றும் அதன் விற்பனை அணிகள் மத்தியில் இச்சாதனைகளுக்கு பங்களித்து, சிறப்பாக செயல்பட்டுள்ள ஊழியர்கள் DFCC Banking Awards 2023 மேடையில் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.    

DFCC வங்கியின் தலைவர் ஜெகன் துரைரட்ணம், பிரதம நிறைவேற்று அதிகாரி திமால் பெரேரா உள்ளிட்ட பெருமதிப்பிற்குரிய உயர் அதிகாரிகள் அடங்கலாக வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள், ஏனைய பல சிரேஷ்ட முகாமைத்துவ அணிகளுடன், 400 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர். கண்ணைக்கவரும் பொழுதுபோக்கு நிகழ்வுகள் அடங்லாக மாலைப்பொழுதை மகிழ்விக்கும் வகையில் பல சிறப்பம்சங்கள் DFCC Banking Awards 2023 நிகழ்வில் இடம்பெற்றன.      

பிரதம நிறைவேற்று அதிகாரி திமால் பெரேரா அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “2023 ஆம் ஆண்டில் DFCC வங்கியின் வெற்றிக்காக தியாகங்கள் புரிந்த எமது நட்சத்திரங்களின் ஒப்பற்ற பங்களிப்புக்களை நாம் மிகுந்த மகிழ்ச்சியுடன் கௌரவித்துள்ளோம். எமது செயல்பாடுகளின் அனைத்து அம்சங்களிலும் மகத்துவத்தை நிலைநாட்டுவதில் அர்ப்பணிப்புடன் உள்ள ஒரு வங்கி என்ற வகையில், அதனை எமது ஊழியர்கள் மத்தியிலும் நாம் பேரார்வத்துடன் வளர்த்து வருகின்றோம். ஆகவே, DFCC Awards நிகழ்வானது மகத்துவத்திற்கான அங்கீகாரத்தை வழங்கும் ஒரு மேடையாகத் திகழ்வது மட்டுமல்லாது, பல்வகைப்பட்ட எமது அணிகள் மத்தியில் மகத்துவத்திற்கான ஒரு உந்துசக்தியாகவும் அமைந்துள்ளது. இந்த ஆண்டில் வெற்றியீட்டிய அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், எதிர்வரும் ஆண்டில் இந்த மகத்துவத்தை நிலைநாட்டுவதற்கு உழைக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்,” என்று குறிப்பிட்டார்.   

DFCC Banking Awards 2023 விருதுகள் நிகழ்வில் ஒட்டுமொத்தமாக 137 விருதுகள் வழங்கப்பட்டன. ஓட்டுமொத்த கிளை பெறுபேறு, தயாரிப்பு தொடர்புபட்ட சாதனைகள், வாடிக்கையாளர் சேவை, கணக்காய்வு தராதரங்கள், DFCC வங்கியின் பல்வேறுபட்ட தயாரிப்புக்கள் மத்தியில் மகத்தான பெறுபேறுகளை வெளிப்படுத்தியவர்களுக்கான விசேட விருதுகள் மற்றும் ஏனைய ஊக்குவிப்புக்கள் போன்ற பல்வேறுபட்ட அம்சங்களை உள்ளடக்கிய வண்ணம் இவ்விருதுகள் வழங்கப்பட்டன. மொத்தத்தில் DFCC Banking Awards 2023 நிகழ்வு மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றதுடன், அங்கீகாரத்திற்கான மேடையை வழங்கி, வங்கியின் பல்வேறுபட்ட அணிகளுக்கு அடையில் வலுவான பிணைப்பைக் கட்டியெழுப்புவதற்கு வழிகோலியுள்ளது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here