DFCC வங்கி, 2023 ஆம் ஆண்டுக்கான தனது ஆண்டறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளதுடன், பலத்த சவால்கள் மற்றும் ஆர்வமூட்டுகின்ற வாய்ப்புக்கள் மத்தியில் மகத்தான பெறுபேறுகளை அது காண்பித்துள்ளது. சவால்மிக்க மற்றும் வலுவான பொருளாதார சூழலில் எதிர்நீச்சல் போட்டு, சாதனைகள் படைத்த ஒரு நிதியியல் ஆண்டை DFCC வங்கி பதிவாக்கியுள்ளது. 2030 ஆம் ஆண்டளவில் காபன் சமநிலை கொண்ட வங்கியாக மாறுகின்ற அதன் முயற்சிகளுடன், நிலைபேண்தகமை சார்ந்த பல்வேறு முன்னெடுப்புக்களின் துணையுடன் இந்த சாதனைகள் அனைத்தும் அதன் ஆண்டறிக்கையில் பிரதிபலிக்கின்றன.
வெளிப்படை அறிக்கையிடல் தொடர்பில் வங்கி கொண்டுள்ள தீவிரமான தராதரங்களுக்கு அமைவாக, ஒருங்கிணைந்த அறிக்கையிடல் வடிவத்தை DFCC வங்கியின் ஆண்டறிக்கை உள்வாங்கியுள்ளது. நிலைபேணத்தகு அபிவிருத்தி மீது வங்கியின் ஓயாத அர்ப்பணிப்பை இது ஆழமாக நிரூபிப்பதுடன், அதன் முழுமையான சூழலியல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு அணுகுமுறையை வலியுறுத்துகின்றது. வெளிப்படையான செயல்பாடு மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் வங்கியின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காண்பித்தவாறு, நிதியியல் இலக்குகளுக்கெதிரான அச்சுறுத்தல் தொடர்பான ஆபத்துக்கள், வாய்ப்புக்கள் மற்றும் விளைவுகளுக்கு இந்த அறிக்கை கவனமாக தீர்வு காண்கின்றது.
DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திமால் பெரேரா அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “2023 ஆம் ஆண்டுக்கான எமது ஆண்டறிக்கையை வெளியிடுவதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன், அதனை எமது பங்குதாரர்கள் தற்போது இணையத்தின் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும். காகித பயன்பாடற்ற வங்கிச்சேவையை வரவேற்கின்ற ஒரு யுகத்தின் மீது நாம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்ற நிலையில், டிஜிட்டல் முறையில் சுற்றனுப்பல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல் விபரங்கள் கிடைக்கச் செய்வதில் நாம் மீண்டும் கவனம் செலுத்தியுள்ளோம். எமது எட்டு தனித்துவமான தலைப்புக்களை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட, எமது புத்தாக்கமான மதிப்புச்சங்கிலி கட்டமைப்பின் ஆழமான பகுப்பாய்வு தொடர்பான மேலோட்டத்தை இந்த அறிக்கை வெளிப்படுத்துகின்றது. இந்த மூலோபாய வேலைத்திட்டமானது முக்கியமான நிதியியல் குறிகாட்டிகள் மத்தியில் மகத்தான பெறுபேறுகளை ஈட்டுவதற்கு எமக்கு வலுவூட்டியுள்ளதுடன், நிலைபேணத்தகு அபிவிருத்தியை முன்னெடுத்து, எமது சமூகங்கள் மற்றும் சூழல் மத்தியில் நேர்மறையான மாற்றத்தைத் தோற்றுவிக்கும் எமது முயற்சிகளுக்கும் உதவியுள்ளது. 2023 ஆம் ஆண்டிற்கான எமது ஆண்டறிக்கையை பார்க்குமாறு எமது பங்குதாரர்கள் அனைவருக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.
வலுவான நிதியியல் பெறுபேறுகள் மற்றும் நிலைபேணத்தகு நடைமுறைகள் ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு சுமூகமான சமநிலையை எட்டும் DFCC வங்கியின் ஆற்றல், தொழில்துறையில் உண்மையில் எதிலும் முன்னோடி என்ற தனித்துவமான அந்தஸ்தை அதற்கு வழங்குகின்றது. 2023 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் இது வரையான அதன் பயணம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் https://dfcc2023.annualreports.lk/index.html என்ற இணைப்பின் மூலமாக அதனை பார்க்க முடியும்.
நிதியியல் இலக்குகள் மற்றும் அவற்றை மிகுந்த அவதானத்துடன் முன்னெடுக்கும் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடுகளின் வழிகாட்டுதலுடன், சிக்கலான பொருளாதார மற்றும் வணிகச் சூழலில் விவேகம் மற்றும் தொலைநோக்குடன் DFCC வங்கி முன்னோக்கி நடைபோட்டுள்ளது. நிதியியல் பலத்துடன் இணைந்ததாக நிலைபேண்தகைமைக்கு முன்னுரிமையளித்து, நீண்டகால இலக்குகளை நோக்கி சீராக முன்னேறுவதில், எந்த சூழ்நிலையிலிருந்து மீண்டெழுகின்ற ஒப்பற்ற திறனை வங்கி எட்டியுள்ளதுடன், தன்னுடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் நீடித்து நிலைக்கின்ற மதிப்பையும் தோற்றுவித்துள்ளது.