DFCC வங்கி, 1வது இணை-வர்த்தகநாமமிடப்பட்ட எரிபொருள் மாஸ்டர்காட் கடனட்டையை ஏராளமான சேமிப்புக்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது!

21

DFCC வங்கி இலங்கையில் முதல்முறையாக இணை-வர்த்தகநாமமிடப்பட்ட நுகர்வோர் எரிபொருள் மாஸ்டர்காட் கடனட்டையை லங்கா ஐஓசி (Lanka IOC – LIOC) உடனான பிரத்தியேக கூட்டாண்மையுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.   இந்த தனித்துவமான கூட்டாண்மை உங்களுக்கு புதிய மற்றும் வியப்பூட்டும் தயாரிப்பொன்றைக் கொண்டு வருவதுடன், செலவு செய்யும் ஒவ்வொரு முறையும் பணமீளளிப்பு சலுகைகள் (Cashback), இலகு தவணைக் கொடுப்பனவுத் திட்டங்கள் (Easy Payment Plans) மற்றும் பல சலுகைகளை மகத்தான சேமிப்பு வடிவங்களில் அட்டைதாரர்களுக்கு வழங்குகின்றது. 

இதற்கு அமைவாக, அட்டைதாரர்கள் தமது அட்டையின் கணக்குக்கூற்றின் ஒவ்வொரு  சுழற்சியின் போதும் அதிகபட்சமாக ரூபா 2,000/- தொகை கிடைக்கும் வகையில், இலங்கையிலுள்ள எந்தவொரு LIOC எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் கொள்வனவு செய்கின்ற எரிபொருள், மசகு எண்ணெய் மற்றும் ஏனைய தயாரிப்புக்களுக்கு 5% பணமீளளிப்பு சலுகையைப் பெற்றுக்கொள்வதற்கு உரித்துடையவர்கள். மட்டுப்படுத்தப்பட்ட காலத்திற்கு கிடைக்கப்பெறும் இந்த விசேட சலுகை 2024 செப்டெம்பர் 30 வரை கிடைக்கப்பெறுவதுடன், அதன் பின்னர் அட்டையின் செல்லுபடிக் காலம் வரை கணக்குக்கூற்றின் ஒவ்வொரு சுழற்சியின் போதும் ரூபா 1,500/- என்ற அதிகபட்ச தொகையுடன், 3% பணமீளளிப்பு சலுகையை அட்டைதாரர்கள் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கிடையில், அட்டையின் மூலமாக மேற்கொள்ளப்படுகின்ற எரிபொருள் அல்லாத ஏனைய அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் 1% பணமீளளிப்பு வழங்கப்படும். மீளளிப்பு செய்யப்படுகின்ற இந்த பணத்தொகையை DFCC வங்கி சேமிப்புக் கணக்கொன்றுக்கோ, அட்டைதாரரின் நடைமுறைக் கணக்கிற்கோ அல்லது வங்கியில் பிரேரிக்கப்பட்டும் வேறு ஒரு கணக்கிற்கோ வரவு வைத்துக்கொள்ள முடியும். மேலும், பண மீளளிப்பு செய்யப்படுகின்ற தொகை DFCC சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும் போது வட்டியை ஈட்ட முடிவதுடன், இது ஒரு இரட்டை வெகுமதியாக மாற்றமடைகின்றது. கவர்ச்சிகரமான பண மீளளிப்புச் சலுகைகளுக்கு புறம்பாக, மோட்டார் வாகன காப்புறுதிக் கட்டணம் மற்றும் மோட்டார் வாகனம் தொடர்புபட்ட ஏனைய பரிவர்த்தனைகளுக்கு 6 மாதங்கள் வரையான வட்டியின்றிய இலகு தவணைக் கொடுப்பனவுத் திட்டங்களும் அட்டைதாரர்களுக்கு கிடைக்கப்பெறுகின்றன. 

இலங்கையில் இந்த வகையில் முதல்முறையாக அறிமுகமாகின்ற அட்டை குறித்து கருத்து வெளியிட்ட DFCC வங்கியின் உப தலைவரும்/அட்டை மையத்தின் தலைவருமான டென்வர் லூயிஸ் அவர்கள், “எரிபொருள் என்பது  அன்றாட செயல்பாடுகளின் போது மிகவும் அவசியமான பண்டங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. எமது அட்டைதாரர்களை பூரிப்பில் ஆழ்த்தி அவர்களுக்கு வெகுமதியளிப்பதற்காக, LIOC இன் கூட்டாண்மையுடன், முதன்முறையாக இணை-வர்த்தகநாமமிடப்பட்ட எரிபொருள் அட்டையொன்றை நாம் வடிவமைத்துள்ளோம். எரிபொருள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட கொள்வனவுகளின் போது கூடுதல் சதவீதத்துடன் பணமீளளிப்புக்களை அனுபவிப்பதற்கு இது அட்டைதாரர்களுக்கு இடமளிக்கின்றது. பரந்த அளவிலான மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு தனித்துவமான வேறுபாட்டைக் கொண்ட சலுகைகளை வழங்கும் வகையில் இது மிகவும் கவனமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. எமது கடனட்டைகள் அனைத்தும் ஏதோ ஒரு வடிவத்தில் தனித்துவமான பணமீளளிப்பு சலுகைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், அவை செலவு செய்கின்ற மற்றும் சேமிப்புக்களை மேற்கொள்கின்ற அட்டைகளாக மாறியுள்ளன. இப்புதிய தயாரிப்பு குறித்து நாம் மிகுந்த ஆவலுடன் உள்ளதுடன், இது ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும் அட்டைதாரர்களின் வாழ்வில் நற்பயனை ஏற்படுத்துமென நாம் நம்புகின்றோம்,” என்று குறிப்பிட்டார்.

LIOC இன் முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ் அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “வங்கி மற்றும் நிதிச் சேவைகள், நிலைபேணத்தகு அபிவிருத்தி ஆகியவற்றில் மிகவும் நன்மதிப்புப் பெற்ற ஒரு வலுமையமாகத் திகழ்ந்து வருகின்ற DFCC வங்கியுடன் கூட்டுச்சேர்வது உண்மையில் எமக்கு கௌரவமளிக்கின்றது.  எமது வாடிக்கையாளர்களின் வாழ்வுகளில் மதிப்பைச் சேர்ப்பிப்பதற்கு இக்கூட்டாண்மை எமக்கு இடமளிப்பதுடன், ஏனைய பல வரப்பிரசாதங்களுடன் இணைந்து, அன்றாட அத்தியாவசிய செலவுகளில் ஒன்றாகக் காணப்படுகின்ற எரிபொருள் தொடர்புபட்ட அர்த்தமுள்ள சேமிப்புக்களை அனுபவிப்பதற்கு அவர்களுக்கு உதவுகின்றது,” என்று குறிப்பிட்டார்.

புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர்களின் வாழ்வில் மதிப்பைச் சேர்ப்பிப்பதற்கு தனித்துவமான வழிமுறைகளை கண்டறிதல் ஆகியவற்றில் அர்ப்பணிப்புடன் உள்ளதுடன், DFCC வங்கியிடமிருந்து கிடைக்கும் இப்புதிய தயாரிப்பு, நிதியியல் ரீதியான வலுவூட்டல் மற்றும் ஒப்பற்ற வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குதல் ஆகியவற்றின் மீது அது கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் அடிக்கோடிட்டுக் காண்பிக்கின்றது. இலங்கையில் அட்டைகளை விநியோகிப்பதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று என்ற ரீதியில், நாடெங்கிலும் பல்வகைப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான மதிப்பு முன்மொழிவுகளை வழங்குவதற்காக பல்வகைப்பட்ட பாரிய மற்றும் சிறிய ஸ்தாபனங்களுடன் DFCC வங்கி தொடர்ந்தும் கைகோர்த்து வருகின்றது.

உங்கள் சொந்த DFCC LIOC இணை-வர்த்தகநாமமிடப்பட்ட எரிபொருள் கடனட்டையுடன் சேமிக்க ஆரம்பிப்பதற்கு தயாராகிவிட்டீர்களா? இதற்கு விண்ணப்பிப்பது மிகவும் இலகு – இன்றே 011 2350000 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துங்கள் அல்லது DFCC வங்கிக் கிளையொன்றுக்கு வருகை தாருங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here