DFCC வங்கி மற்றும் IIHS கூட்டாண்மையுடன் சுகாதாரத்துறை மாணவர்களுக்கான பிரத்தியேக கல்விக் கடன் திட்டம் அறிமுகம்  

25
அன்டன் ஆறுமுகம், சிரேஷ்ட துணைத் தலைவர் - பணம் அனுப்புதல், கடல்கடந்த வங்கிச்சேவை மற்றும் வணிக மேம்பாட்டு நடவடிக்கைகள், DFCC வங்கி பிஎல்சி மற்றும் கலாநிதி கித்சிறி எதிரிசிங்க - இணை ஸ்தாபகர்/பிரதம நிறைவேற்று அதிகாரி - IIHS Multiversity ஆகியோருக்கிடையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறப்பட்டது. இடமிருந்து வலப்புறமாக- துஷான் வீரகோன், துணைத் தலைவர் - தனிநபர் நிதிச் சேவைகள் - DFCC வங்கி பிஎல்சி, அன்டன் ஆறுமுகம் - சிரேஷ்ட துணைத் தலைவர் - பணம் அனுப்புதல், கடல்கடந்த வங்கிச்சேவை மற்றும் வணிக மேம்பாட்டு நடவடிக்கைகள் - DFCC வங்கி பிஎல்சி, கலாநிதி கித்சிறி எதிரிசிங்க - இணை ஸ்தாபகர்/பிரதம நிறைவேற்று அதிகாரி - IIHS, ஸ்டெஃபானி அந்தனி - நிர்வாகப் பணிப்பாளர் – IIHS.

அனைவருக்கும் ஏற்ற வங்கியான DFCC வங்கி, இலங்கையில் தாதியர் துறையில் நிபுணத்துவத்துடன், சுகாதாரக் கல்விக்கான முன்னணி நிறுவனமும், லண்டன் Coventry பல்கலைக்கழகத்துடன் இணைந்த நிறுவனமுமான International Institute of Health Sciences (IIHS) உடன் புதிய முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாண்மையை அறிவித்துள்ளது. இப்புதிய கூட்டாண்மையின் கீழ், DFCC வங்கி IIHS மாணவர்களுக்கு பல்வேறு தனித்துவமான சலுகைகளுடன் கல்விக் கடன்களை கவர்ச்சிகரமான வட்டி வீதத்துடன் வழங்கும்.

இந்த சலுகைகளில் 100% வரையிலான பாடநெறிக்கான கடன், 7 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட மீளச் செலுத்தும் காலம் மற்றும் அதிகபட்ச சௌகரியத்திற்காக நேரடியாக இருக்கும் இடத்திற்கே கிடைக்கப்பெறும் சேவை ஆகியவை அடங்கும். DFCC வங்கியின் இந்த கவர்ச்சிகரமான திட்டமானது, IIHS தனது பல்வேறு கற்கைநெறிகளுக்கு புதிதாக மாணவர்களை உள்வாங்குவதற்குத் தயாராகி வரும் நிலையில் பொருத்தமானதொரு தருணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தாதியியல் துறையில் இலங்கையில் நிறைவுசெய்யக்கூடிய உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட BSc (Hons) பட்டப்படிப்புக்களும் அவற்றுள் அடங்கியுள்ளன.

இந்த நிகழ்வைக் குறிக்கும் ஒரு விசேட நிகழ்வில் கலந்துகொண்ட இரு தரப்பின் பிரதிநிதிகளுடன் இந்த கூட்டாண்மைக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. DFCC வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தி, கடல்கடந்த வங்கிச்சேவை, பணம் அனுப்புதல் மற்றும் வணிக மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான சிரேஷ்ட துணைத் தலைவர் அன்டன் ஆறுமுகம் மற்றும் IIHS ஐ பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி/இணை ஸ்தாபகர் கலாநிதி கித்சிறி எதிரிசிங்க ஆகியோர் இதில் கலந்து சிறப்பித்தனர்.

மாணவர்களுக்கு இதன் மூலமாகக் கிட்டும் நன்மைகள் தொடர்பில் DFCC வங்கியின் கடல்கடந்த வங்கிச்சேவை, பணம் அனுப்புதல் மற்றும் வணிக மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான சிரேஷ்ட துணைத் தலைவர் அன்டன் ஆறுமுகம் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “இலங்கையில் சுகாதாரக் கல்வியில் ஒரு மாபெரும் நிறுவனமான IIHS உடன் கைகோர்ப்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம். அபிலாஷைகளைப் கொண்ட பல்வேறு இளைஞர்,யுவதிகள் இத்தொழிற்துறையில் ஸ்திரமானதொரு தொழிலை உருவாக்கிக் கொள்ள விரும்புகின்றனர். IIHS அவர்களுக்கு ஒரு சிறந்த மார்க்கம் என்பதுடன், இலங்கை மாணவர்களுக்கு இதுபோன்ற கவர்ச்சிகரமான கல்விக் கடன் திட்டத்தை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பை இலங்கையிலேயே பெற்றுக்கொள்ள முடியும் என்பதால், இதில் இணைந்து கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும்,” என்று குறிப்பிட்டார்.

IIHS இன் பிரதம நிறைவேற்று அதிகாரி/இணை ஸ்தாபகர் கலாநிதி கித்சிறி எதிரிசிங்க அவர்கள் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “DFCC வங்கியானது வங்கித்துறையில் மட்டுமன்றி சமூக மேம்பாடு மற்றும் கல்வியை ஊக்குவித்தல் ஆகியவற்றிலும் ஒரு உண்மையான வழிகாட்டியாக இருப்பதால், நாம் நம்பிக்கை வைத்து செயற்படக்கூடிய ஒரு கூட்டாளரை இது தோற்றுவித்துள்ளது. தகமை பெற்ற தாதியர் மற்றும் பிற சுகாதார துறை வல்லுனர்களுக்கு இலங்கையிலும் வெளிநாடுகளிலும் அதிக தேவை உள்ளது. இதனால், லண்டனில் உள்ள Coventry பல்கலைக்கழகத்துடன் இணைந்த எங்களது பட்டப்படிப்பு, குறிப்பாக தாதியர் துறையில் தொழிலில் ஈடுபட ஆர்வமுள்ளவர்களுக்கு மிகச் சிறந்த தெரிவாகும். குறிப்பாக இதனை நோக்கிய கடன் திட்டம் தங்கள் கல்விக்கு கடன் வசதியைத் தேடி தமது அபிலாஷைகளை அடைவதற்கு ஆவலாக உள்ள மாணவர்களுக்கு கவர்ச்சிகரமானதாகதொரு வாய்ப்பாக உள்ளது,” என்று குறிப்பிட்டார். 

அதற்கிணங்க, DFCC வங்கி மற்றும் IIHS ஆகியவற்றுக்கு இடையேயான இந்த ஒத்துழைப்பு இலங்கையில் உள்ள மாணவர்களுக்கு ஒரு புகழ்பெற்ற நிதி நிறுவனத்தின் ஆதரவுடன் சுகாதாரத் துறையில் தரமான கல்வியைத் தொடர ஒரு நம்பிக்கையூட்டக்கூடிய வாய்ப்பாகும். கவர்ச்சிகரமான கடன் விதிமுறைகள் மற்றும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பினை இங்கேயே இலங்கையில் பெறுவதற்கான வாய்ப்புகள், ஆர்வமுள்ள மருத்துவத் துறை நிபுணர்களுக்க்கு கிடைக்கப்பெறுகின்ற கல்வித் தெரிவுகளை மேம்படுத்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here