DFCC வங்கி, பிராந்திய பணியாளர்களுக்கு இடையிலான வினாவிடைப் போட்டி இரவு நிகழ்வு மற்றும் பல்வேறு நிகழ்வுகளுடன் சர்வதேச வாடிக்கையாளர் சேவை வாரம் 2023 ஐக் கொண்டாடியுள்ளது  

46

தனித்துவமான வழியில், அதிசிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்கும் நன்மதிப்பைச் சம்பாதித்துள்ள ஒரு வங்கியான, DFCC வங்கி, ‘அணிச் சேவை’ (Team Service) என்ற இந்த ஆண்டு கருப்பொருளை எதிரொலிக்கும் வகையில், சர்வதேச வாடிக்கையாளர் சேவை வாரம் 2023 இனைக் குறிக்கும் வகையில் பல்வேறு தொடர் நிகழ்வுகளை பெருமையுடன் ஏற்பாடு செய்துள்ளது. தலைசிறந்த வாடிக்கையாளர் சேவை, ஒன்றுபட்டு உழைக்கும் உணர்வு மற்றும் நாட்டில் மிகவும் வாடிக்கையாளரை-மையப்படுத்திய வங்கியாக மாறுவதற்கான இடைவிடாத முயற்சி ஆகியவற்றின் மீது DFCC வங்கி கொண்டுள்ள ஓயாத அர்ப்பணிப்பினை வருடாந்தம் இடம்பெறும் இக்கொண்டாட்டம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நிகழ்வின் பிரதான அம்சமாக அமையப்பெற்ற DFCC வங்கி பணியாளர்களுக்கிடையிலான வினாவிடைப் போட்டி அடங்கலாக, இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் பல்வேறுபட்ட உள்ளக மற்றும் வெளிப்புற தொடர் நிகழ்வுகள் மற்றும் செயற்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், ஒன்றுபட்ட உழைப்பின் மகத்துவத்தை ஊக்குவிக்கும் முயற்சியாக, உத்வேகமளிக்கும் அறிவுரைகள், வலையொளிகள் மற்றும் ஏனைய முயற்சிகள் அடங்கலாக பல்வேறுபட்ட உள்ளக தொடர்பாடல்கள் மற்றும் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.     

பிரதம நிறைவேற்று அதிகாரி திமால் பெரேரா மற்றும் தனிநபர் வங்கிச்சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான சிரேஷ்ட துணைத் தலைவரான ஆசிரி இத்தமல்கொட ஆகியோரின் உத்வேகம் மற்றும் அர்ப்பணிப்பை ஊக்குவிக்கும் இதயபூர்வமான செய்திகளுடன் இவ்வாரம் ஆரம்பமானது. சிந்தனையைத் தூண்டும் அவர்களது ஆழமான செய்திகள் தலைசிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவதில் அணியின் ஒன்றுபட்ட உழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தின. தம்மால் முடிந்தவரை மிகச் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதில் அணியின் கடின உழைப்பு மற்றும் தியாகத்தையும் இச்சந்தர்ப்பத்தில் அவர்கள் போற்றினர்.  

நாடளாவியரீதியிலுள்ள வங்கியின் விசாலமான கிளை வலையமைப்பின் மத்தியில் பணியாளர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி, அனைவருக்கும் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்த DFCC பணியாளர்களுக்கிடையிலான வினாவிடைப் போட்டி இவ்வாரத்தின் முக்கிய அம்சமாக அமைந்தது என்பதில் எவ்விதமான ஐயமும் கிடையாது. ஒன்பது கிளைப் பிராந்தியங்கள் மற்றும் பணிப் பிரிவுகள் ஒவ்வொன்றையும் பிரதிநிதித்துவப்படுத்தி, 22 அணிகள் விறுவிறுப்பான மற்றும் அறிவாற்றலைத் தூண்டும் போட்டியில் பங்குபற்றின. இந்நிகழ்வு சினமன் லேக்சைட் ஹோட்டலில் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து நட்பு பாராட்டும் மற்றும் கூட்டுறவை ஊக்குவிக்கும் மாலைப் பொழுதாக இந்நிகழ்வு மாறியது. சர்வதேச வாடிக்கையாளர் சேவை வாரத்தைக் குறிக்கும் முகமாக வங்கியின் பரந்துபட்ட அணிகள் அனைத்தும் ஒரே இடத்தில் ஒன்றுகூடியமை மிகவும் அரிதான ஒரு தருணமாக அமைந்தது.  

DFCC பணியாளர்களுக்கிடையிலான வினாவிடைப் போட்டியானது கடும் போட்டி நிலவிய ஒன்றாக மாறியதுடன், சமநிலையுடன் உச்ச இடத்தைப் பெற்ற இரு அணிகளில் யார் வெற்றியாளர் என்பதைத் தீர்மானிக்க வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் அடிப்படையில் மோதிக்கொண்டன. பிராந்தியம் 3 ஐப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ‘R03 Super Kings’ அணி, வெற்றி வாகை சூடியதுடன், ரூபா 50,000/- பெறுமதி கொண்ட மதிப்புமிக்க தங்கப் பரிசை வென்றது. ஒட்டுமொத்தமாக ஐந்து சுற்றுக்களிலும் 50 க்கு 41 என்ற மெச்சத்தக்க புள்ளிகளை ஈட்டிய அவர்களது மிகச் சிறந்த சாதனை, அவர்களின் அறிவாற்றல் மற்றும் குறிப்பிடத்தக்க வகையில் ஒன்றுபட்ட உழைப்பினைச் சுட்டிக்காட்டுகின்றன. தலைமை அலுவலகத்தின் ‘Mind Benders’ மற்றும் பிராந்தியம் 5 இன் ‘Central Quiz Masters’ அணிகள் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பரிசுகளை வென்றுள்ளன.     

‘R03 Super Kings’ அணிக்கு மஹரகம கிளை முகாமையாளரான சந்தேஷ் திசாநாயக்க அவர்கள் தலைமை தாங்கியதுடன், நுகேகொடை கிளை முகாமையாளர் நிரஞ்சலி விஜேசிங்க, கொட்டாவை கிளை முகாமையாளர் உதேஷ் கூரகொடகே, நாவல கிளையைச் சேர்ந்த ஜனித் கூரகம மற்றும் கடுவெலை கிளையைச் சேர்ந்த அயேஷா வீரசிங்க ஆகியோர் அணியில் இடம்பெற்றனர்.

வாடிக்கையாளர் சேவை வாரம் மற்றும் DFCC பணியாளர்களுக்கு இடையிலான வினாவிடைப் போட்டி ஆகியன தொடர்பில் பிரதம நிறைவேற்று அதிகாரி திமால் பெரேரா அவர்கள் கருத்து வெளியிடுகையில், “இந்த ஆண்டின் கருப்பொருளான ‘அணிச் சேவை’ (Team Service) என்பது தலைசிறந்த வாடிக்கையாளர் அனுபவங்களை வழங்குவதற்காக ஒன்றுபட்ட உழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஒரே அணியாக ஒன்றுபட்டு உழைப்பதன் மூலமாக மாத்திரமே எமது வாடிக்கையாளர்களை நாம் பூரிப்பில் ஆழ்த்தலாம். பணியாளர்களுக்கிடையிலான வினாவிடைப் போட்டியில் ஆச்சரியப்படும் வகையில் ஒற்றுமை உணர்வு வெளிப்பட்டுள்ளதுடன், வெற்றிபெற்ற அணிக்கு இச்சந்தர்ப்பத்தில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, இதில் பங்குபற்றிய அனைத்து அணிகளையும், மற்றும் DFCC வங்கியில் வாடிக்கையாளர்கள் சேவையை உறுதி செய்வதில் ஆற்றுகின்ற விலைமதிப்பற்ற பங்களிப்புக்களுக்காக அனைவரையும் போற்றுகின்றேன். தலைசிறந்த வாடிக்கையாளர் சேவையின் பெறுமதியை சுட்டிக்காட்டுவதற்கு சர்வதேச வாடிக்கையாளர் சேவை வாரத்தை சிறப்பாக உபயோகப்படுத்தியுள்ளதை மகிழ்ச்சியுடன் குறிப்பிடுவதுடன், DFCC வங்கியில் அதனை தினந்தோறும் நிலைநாட்டுகின்ற அனைவரையும் போற்றுகின்றேன்,” என்று குறிப்பிட்டார்.   

இலங்கையில் மிகவும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய வங்கி என்ற தனது பயணத்தை நோக்கி DFCC வங்கி சிறப்பாக முன்னேறி வருவதுடன், சர்வதேச வாடிக்கையாளர் சேவை வாரம் போன்ற நிகழ்வுகள் ஒன்றுபட்ட உழைப்பை வளர்த்து, வாடிக்கையாளர்களின் அனுபவங்களை மேம்படுத்தி, அனைவருக்கும் ஏற்ற வங்கி என்ற தனது ஸ்தானத்தை வலுப்படுத்துவதில் வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்பையும், ஈடுபாட்டையும் காண்பிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here