DFCC வங்கி, பகுதி நேர தொழில் புரிபவர்களுக்கு நெகிழ்வுத்தன்மை கொண்ட பிரத்தியேக நிதியியல் தீர்வுகளை அறிமுகப்படுத்தியுள்ளது  

40

அனைவருக்கும் நிதியியல் சேவைகளை கிடைக்கப்பெறச் செய்யவேண்டும் என்ற ஒரு முயற்சியாக, பகுதி நேர தொழில் புரிகின்றவர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு முழுமையான நிதியியல் தீர்வான DFCC Freelancer என்பதை DFCC வங்கி பெருமையுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. பகுதி நேர தொழில் புரிகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையில், அவர்களின் வலுவான தேவைகளை குறிப்பாக நிறைவேற்றும் வகையில் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ள இப்புதுமையான தீர்வு, இத்தகைய தனித்துவமான ஒரு பிரிவினரின் நிதியியல் தேவைகளை நிறைவேற்றுவதில் ஏனைய வங்கிகளை விடவும் முன்னிலை வகிக்கின்ற வங்கியாக DFCC வங்கியை நிலைநிறுத்தியுள்ளது. அனேகமாக, வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு தமது நிபுணத்துவ சேவைகளை பதிவு செய்யப்பட்ட மற்றும் விசேட தளங்களினூடாக வழங்கும் நபர்களுக்கு முழுமையான வங்கிச்சேவை தீர்வை இது வழங்கும்.    

இப்புதிய தீர்வை அறிமுகப்படுத்துகின்றமை தொடர்பில் கருத்து வெளியிட்ட தனிநபர் வங்கிச்சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான சிரேஷ்ட உப தலைவரான ஆசிரி இத்தமல்கொட அவர்கள், “பகுதி நேர தொழில் புரிகின்றவர்கள் புத்தாக்கம் மற்றும் தொழில்முயற்சியாண்மையின் முதுகெலும்பின் அங்கம் என்பதை DFCC வங்கி தெளிவாக புரிந்துகொள்கின்றது. DFCC Freelancer மூலமாக, இந்த வலுவான சமூகத்திற்கு பிரத்தியேகமான நிதியியல் சேவைகளை வழங்கி அவர்களை வலுவூட்டுவதே எமது நோக்கமாக உள்ளதுடன், தனிப்பயனாக்கப்பட்ட வங்கிச்சேவையில் புதியதொரு தர ஒப்பீடாகவும் அமைந்துள்ளது. இலங்கையில் வழக்கமாக வங்கிகளால் கவனிக்கப்படாது விடப்பட்டுள்ள இப்பிரிவுக்கு சேவைகளை வழங்கும் வகையில், அனைவருக்கும் வங்கிச்சேவையை கிடைக்கப்பெறச் செய்வதிலும், புத்தாக்கத்திலும் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டுக்கு இத்தீர்வு சிறந்ததொரு சான்றாக உள்ளதென நாம் நம்புகின்றோம்,” என்று குறிப்பிட்டார்.   

இத்தகையதொரு தீர்வை முதன்முதலாக அறிமுகப்படுத்திய வங்கி என்ற வகையில், இலங்கையில் பகுதி நேர தொழில் புரிகின்றவர்களின் வாழ்க்கைமுறைகள் மற்றும் அபிலாஷைகளுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட, முழுமையான நன்மைகளை வழங்குவதே DFCC வங்கியின் நோக்கமாகும். அந்த வகையில் DFCC Freelance கணக்கைக் கொண்டுள்ள பகுதி நேர தொழில் புரிகின்றவர்கள், தனிநபர் வெளிநாட்டு நாணயக் கணக்குகள் மற்றும் வர்த்தக வெளிநாட்டு நாணயக் கணக்குகளுக்கு கவர்ச்சியான வட்டி வீதங்களை அனுபவிப்பதுடன், சர்வதேச பரிவர்த்தனைகளை தங்குதடையின்றி நிர்வகிப்பதற்கு அனுசரணையளிக்கின்றது. வருமானத்தின் அடிப்படையில், DFCC Pinnacle, Prestige, Salary Partner,  அல்லது Salary Plus போன்ற தீர்வுகளை வாடிக்கையாளர்கள் தெரிவு செய்ய முடிவதுடன், இதன் மூலமாக அவர்களுடைய வங்கிச்சேவை அனுபவத்தில் நிகரற்ற பெறுமதியைச் சேர்ப்பிக்கின்றது. சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புக்களுக்கு உயர்ந்த வட்டி வீதங்களை வழங்குவதன் மூலமாக பகுதி நேர தொழில் புரிகின்றவர்கள் கஷ்டப்பட்டு உழைக்கின்ற பணத்தினைப் பெருக்கிக் கொள்வதையும் DFCC வங்கி உறுதி செய்கின்றது.நிதியியல் சுதந்திரத்தை மேம்படுத்துகின்ற DFCC Freelancer தீர்வு, பிரத்தியேகமான DFCC மாஸ்டர்கார்ட் கடனட்டையையும் வழங்குகின்றது. இணைந்துகொள்வதற்கான கட்டணத்திற்கு தள்ளுபடி, வெளிநாட்டு நாணய பரிவர்த்தனைகளின் போது எந்தவொரு DFCC வங்கிக் கணக்கிற்கும் 2% பணமீளளிப்பு மற்றும் சௌகரியமான வட்டியின்றிய இலகு தவணைக் கொடுப்பனவுத் திட்டங்கள் ஆகிய சலுகைகள் இதற்கு கிடைக்கப்பெறுகின்றன. பகுதி நேர தொழில்புரிகின்றவர்களின் சமூகத்தின் பல்வகைத்தன்மையை இனங்கண்டு, பகுதி நேர தொழில் புரிகின்ற பெண்களுக்கு விசேடமான தீர்வுகளையும் DFCC Freelancer வழங்குவதுடன், பெண்களுக்கு மட்டுமே உரித்தான DFCC Aloka கணக்கின் மூலமாக கிடைக்கின்ற அனைத்து சலுகைகளையும் அவர்கள் அனுபவிக்க முடியும். பகுதி நேர தொழில் புரிகின்றவர்களுக்கு கூடுதல் நிதியியல் பாதுகாப்பு மற்றும் மன நிம்மதியை வழங்குவதற்கு, விசேடமாக வடிவமைக்கப்பட்ட காப்புறுதித் திட்டங்களையும் DFCC Freelancer வாடிக்கையாளர்கள் அணுக முடியும். இப்புத்தாக்கமான தீர்வானது, தனிப்பயனாக்கப்பட்ட வங்கிச்சேவையில் புதிய தர ஒப்பீட்டை நிலைநாட்டி, பகுதி நேர தொழில் புரிகின்றவர்கள் தமது நிதியியல் பயணங்களினூடாக செழிப்படையச் செய்வதற்கு அவர்களுக்கு வலுவூட்டுவதில் DFCC வங்கியின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. தனிப்பயனாக்கப்பட்ட வங்கிச்சேவையின் புதிய சகாப்தத்தை அனுபவிக்குமாறு பகுதி நேர தொழில் புரிகின்றவர்களுக்கு DFCC வங்கி அழைப்பு விடுக்கின்றது. இது தொடர்பில் மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள, 011 2350000 என்ற இலக்கத்தின் மூலமாக எமது 24 மணி நேர சேவை மையத்தை அழையுங்கள் அல்லது https://www.dfcc.lk/products/dfcc-freelancer/ என்ற இணையத்தளத்தைப் பாருங்கள். கணக்கொன்றை 100% இணைய வழியில் ஆரம்பித்துகொள்ள முடியும் அல்லது எந்தவொரு DFCC வங்கிக் கிளைக்கு வருகை தந்து மேற்கொள்ளவும் முடியும். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here