இலங்கையில் மற்றுமொரு தனித்துவத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தும் வகையில், வாடிக்கையாளர்கள் தமது முற்கூட்டிய வருமான வரி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கு அவர்களுக்கு இடமளிக்கின்றதொரு புதியதொரு அம்சமாக, தனது இணைய வங்கிச்சேவை தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து DFCC வங்கி பெருமையுடன் அறிவித்துள்ளது. எந்தவொரு கிளைக்கும் நேரடியாக செல்ல வேண்டிய சிரமத்தைப் போக்கி, வாடிக்கையாளர்களுக்கு 24 மணி நேர அணுகலை வழங்குவதுடன், பசுமையை நோக்கிய தீர்வையும் ஊக்குவிக்கின்றது. எமது வாடிக்கையாளர்கள் மீது நாம் காண்பிக்கும் ஓயாத அர்ப்பணிப்பின் உந்துசக்தியால் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், 2025 ஆம் ஆண்டளவில் மிகவும் வாடிக்கையாளரை மையப்படுத்திய மற்றும் டிஜிட்டல்ரீதியாக இயக்கப்படுகின்ற வங்கியாக மாற வேண்டும் என்ற DFCC வங்கியின் மூலோபாய குறிக்கோளுடனும் ஒன்றியுள்ள அதேசமயம், வங்கி மற்றும் நிதியியல் சேவைகள் துறையில் புதியதொரு தரஒப்பீட்டு நியமத்தையும் நிலைநாட்டியுள்ளது.
DFCC வங்கியின் பிரதம டிஜிட்டல் அதிகாரி ஒமர் சஹீப் அவர்கள் இது குறித்து விளக்குகையில், “எமது வாடிக்கையாளர்களின் தேவைகளின் பரிணாம வளர்ச்சிக்கு அமைவாக, எமது டிஜிட்டல் சேவைகளையும் நாம் தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றோம். முற்கூட்டிய வருமான வரி சான்றிதழ்களை இணைய வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் ஆற்றல், இலங்கையில் டிஜிட்டல் வங்கிச்சேவையின் முன்னோடி என்ற எமது ஸ்தானத்தை மீள உறுதிப்படுத்தியுள்ளதுடன், சௌகரியம், வினைதிறன் மற்றும் நிலைபேண்தகைமை ஆகியவற்றின் மீதான எமது அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கின்றது. எமது வாடிக்கையாளர்களின் பொன்னான நேரத்தின் அருமையை நாம் தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளதுடன், வங்கிச்சேவை அனுபவத்தை எளிமைப்படுத்தி, அதனை மேலும் தங்குதடையற்றதாகவும், அணுகக்கூடியதாகவும் மாற்றும் தீர்வுகளை வழங்குவதே எமது நோக்கம். மேலும், வணிகங்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் சூழல் மீது கணிசமானதொரு செலவாகக் காணப்படுகின்ற காகித பயன்பாட்டில் தங்கியிருப்பதைக் குறைத்து, காகிதப் பயன்பாடற்ற வங்கிச்சேவையை ஊக்குவிப்பது உட்பட்ட எமது நிலைபேற்றியல் நோக்கங்களுடனும் இம்முயற்சி ஒன்றியுள்ளது,” என்று குறிப்பிட்டார்.
டிஜிட்டல் முனையில் தொடர்ச்சியான புத்தாக்கத்துடன், மூலோபாய கூட்டாண்மைகளின் அனுகூலத்துடன், தனது டிஜிட்டல் தளங்கள் மத்தியில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் கிடைச் செயற்பாடுகளையும் DFCC வங்கி சமீபத்தில் முன்னெடுத்துள்ளது. அரசாங்க ஸ்தாபனங்கள் மற்றும் ஏனைய பல்வேறு அரச திணைக்களங்களுக்கு தங்குதடையின்றிய கொடுப்பனவுகள் அடங்கலாக, ஏனைய பல்வேறு சௌகரியமான அம்சங்களும் உள்ளன. அதிநவீன மத்திய வங்கிச்சேவை கட்டமைப்பின் பக்கபலத்துடன், முதன்முதலாக உத்தியோகபூர்வமாக டிஜிட்டல் கையொப்பங்களை ஏற்றுக்கொள்வது மற்றும் வாடிக்கையாளர்களை இணைய வழியில் உள்வாங்கிக் கொள்வது ஆகியவற்றையும் வங்கி அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் புத்தாக்கத்தின் மீது DFCC வங்கி கவனம் செலுத்தியுள்ளமை, வாடிக்கையாளர்களின் சௌகரியத்தை மேம்படுத்தி, மேலும் நிலைபேணத்தக்கதொரு எதிர்காலத்தை வளர்க்கின்றது. வாடிக்கையாளரை மையப்படுத்திய செயல்பாடு மற்றும் டிஜிட்டல் இடமளிப்பு ஆகியவற்றின் மீதான ஓயாத அர்ப்பணிப்பு, இலங்கையில் டிஜிட்டல் வங்கிச்சேவை துறையில் DFCC வங்கியை முன்னிலைப்படுத்தியுள்ளதுடன், வங்கிச்சேவையானது தங்குதடையின்றிய, சௌகரியமான மற்றும் சூழல்ரீதியாக பொறுப்புணர்வுமிக்க ஒன்றாக அமையும் எதிர்காலத்தை நோக்கி உழைத்து வருகின்றது. எதிர்காலத்தை நோக்கிய வங்கிச்சேவை சௌகரியத்தை இன்றே அனுபவியுங்கள். DFCC வங்கியின் இணைய வங்கிச்சேவை தளத்தில் உள்நுழைந்து, உங்களுடைய முற்கூட்டிய வருமான வரி சான்றிதழை இலகுவாகப் பெற்றுக்கொள்ள, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதியின் அனுகூலத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலதிக விபரங்களுக்கு, dfcc.lk இற்கு செல்லுங்கள் அல்லது DFCC வங்கியின் 24 மணி நேர பிரத்தியேக வாடிக்கையாளர் சேவை மையத்தை 011 235 0000 ஊடாக தொடர்பு கொள்ளுங்கள்.