பகுதி நேர தொழில் புரிகின்றவர்கள் சமூகத்தில் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், அவர்களுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நிதித் தீர்வுகளை வழங்குவதில் இலங்கையில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகின்ற DFCC வங்கி, களனி பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த “How to be a Successful Freelancer” (வெற்றிகரமான பகுதி நேர தொழில் புரிபவராக மாறுவது எப்படி) என்ற குழுநிலை கலந்துரையாடல் நிகழ்வில் பங்குபற்றுவதற்காக அழைக்கப்பட்டிருந்தது. நிகழ்வில் பங்குபற்றியவர்களுக்கு நிதியியல் முகாமைத்துவம் குறித்த கண்ணோட்டத்தை வழங்கி, பகுதி நேர தொழில் புரிகின்றவர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு இலங்கையில் வழங்கப்படும் ஒரேயொரு நிதிச் சேவையான DFCC Freelancer தீர்வு குறித்தும் விளக்குவதற்காக வங்கி அழைக்கப்பட்டிருந்தது. பல்வகைப்பட்ட சேமிப்பு மற்றும் பரிவர்த்தனை வங்கிச்சேவை தீர்வுகள் மற்றும் சேவைகளுக்குப் புறம்பாக, கடன் தகுதியை மதிப்பீடு செய்யும் வலுவான புதிய கட்டமைப்பொன்றை உள்வாங்கி, முதல்முறையாக பல்வகைப்பட்ட கடன் சேவைகளை பகுதி நேர தொழில் புரிகின்றவர்கள் அணுகுவதற்கும் DFCC Freelancer இடமளிக்கின்றது. டிஜிட்டல் வங்கிச்சேவை மூலோபாயத்திற்கான உதவி உப தலைவர் பிரதீபன் சிவலிங்கம் அவர்கள் இக்குழுவில் DFCC வங்கியை பிரதிநிதித்துவம் செய்தார்.
தனிநபர் மற்றும் வர்த்தக வெளிநாட்டு நாணயக் கணக்குகளுக்கு கவர்ச்சியான வட்டி வீதங்களை DFCC Freelancer வழங்குவதுடன், சராசரி வருமானத்தின் அடிப்படையில் DFCC Pinnacle, Prestige, Salary Partner, அல்லது Salary Plus ஊடாக பிரத்தியேகமான வரப்பிரசாதங்களுடன், சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புக்களுக்கு ஒப்பீட்டளவில் சிறந்த வட்டி வீதங்களையும் வழங்குகின்றது. வெளிநாட்டு நாணய பரிவர்த்தனைகளுக்கு பிரத்தியேக 2% cashback சலுகை மற்றும் வட்டியின்றிய இலகு தவணைக் கொடுப்பனவுத் திட்டங்களுடன், கணக்குதாரர்கள் இணையும் சந்தா கட்டணத்திற்கான விலக்குடன், DFCC வங்கி மாஸ்டர் காட் கடனட்டையையும் பெற்றுக்கொள்வர். பகுதி நேர தொழில் புரிகின்ற மகளிர் DFCC ஆலோக மூலமாக தனித்துவமான வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். பகுதி நேர தொழில் புரிகின்றவர்களுக்கு மனநிம்மதியளிக்கும் வகையில் பல்வகைப்பட்ட, பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட காப்புறுதித் திட்டங்களும் கிடைக்கப்பெறுகின்றன.