DFCC வங்கி, இலங்கை தொழில்சார் வங்கியாளர்கள் சங்கத்தின் 34வது ஆண்டு நிறைவில் நிலைபேற்றியல் மீது கவனம் செலுத்தியுள்ளது

37

தொழில்சார் வங்கியாளர்கள் சங்கத்தின் (Association of Professional Bankers) 34வது ஆண்டு நிறைவு மாநாடு அண்மையில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது. “முன்னோக்கிய பயணம் – பொருளாதார நிலைபேண்தகமைக்கான வழி” (Forward Gear – Road to Economic Sustainability) என்ற தொனிப்பொருளில் இம்மாநாடு இடம்பெற்றதுடன், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பீ. நந்தலால் வீரசிங்க அவர்கள் இந்நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.  

DFCC வங்கியும் இந்நிகழ்வில் முக்கிய பங்கு வகித்ததுடன், பிரதம நிறைவேற்று அதிகாரி திமால் பெரேரா அவர்களும் நிகழ்வில் பங்குபற்றிய ஏனைய வங்கிகளின் உயர் அதிகாரிகள் பலருடன் இணைந்து இதில் கலந்துகொண்டார். வெளிநாட்டு வங்கிச்சேவை, பணம் அனுப்புதல் மற்றும் வணிக மேம்பாட்டுக்கான சிரேஷ்ட உப தலைவர் திரு. அன்டன் அறுமுகம் அவர்கள் தொழில்சார் வங்கியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் என்ற வகையில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்வதில் முன்னின்று உழைத்துள்ளார். DFCC வங்கியின் நிலைபேண்தகமை மற்றும் ஆலோசனைக்கான உப தலைவர் நளின் கருணாதிலக அவர்களின் நெறியாள்கையில் “பசுமைக்கான கடன் வசதி – இலங்கை வங்கிகளின் முன்னோக்கிய பயணம்” (Green Financing – The Road Ahead for Sri Lankan Banks) என்ற தலைப்பில் விடயம் சார்ந்த தொழில்நுட்ப அமர்வொன்றும் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here