DFCC வங்கி இணைய டிஜிட்டல் வழிமுறையில் வாடிக்கையாளர்களை உள்வாங்கும் வழிமுறையை ஆரம்பித்துள்ளது – பிரயாணம் இல்லை, வரிசை இல்லை, காகித ஆவணங்கள் இல்லை, சிரமம் இல்லை!

35

டிஜிட்டல் வங்கிச்சேவை மற்றும் சேவை வழங்கலில் முன்னோடியான DFCC வங்கி, மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 100% இணைய டிஜிட்டல் வழிமுறையில் வாடிக்கையாளர்களை உள்வாங்கும் தளத்தின் வலையமைப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கியின் டிஜிட்டல் பயணத்தில் இது முக்கியமான ஒரு மைல்கல்லாக மாறியுள்ளதுடன், புதிய வாடிக்கையாளர்கள் கைமுறையான அல்லது காகித ஆவண நடைமுறை தேவைப்பாடின்றி, இணைய வழியில் கணக்குகளையும், ஏனைய வசதிகளையும் ஆரம்பிக்கவும், பெற்றுக்கொள்ளவும் அவர்களுக்கு வலுவூட்டுகின்றது. அந்த வகையில், வாடிக்கையாளர்கள் தற்போது ஒப்பற்ற சௌகரியத்தை அனுபவிக்க முடிவதுடன், எங்கேயும், எப்போதும் DFCC வங்கிச்சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக தம்மை இணைத்துக்கொள்ள முடியும். வங்கிக்கு பிரயாணம் செய்து, வரிசைகளில் காத்திருந்து, காகித ஆவணங்களை பூர்த்தி செய்து அல்லது கணக்குகள் செயல்படுத்தப்படும் வரை காத்திருக்க வேண்டிய தேவை இனியும் கிடையாது. ஒட்டுமொத்த நடைமுறையும் பயனர்நேயமான, தங்குதடையின்றிய மற்றும் மெய்நிகராக உடனடி அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல்மயமாக்கம் செய்யப்பட்டுள்ளதை DFCC வங்கி தற்போது உறுதி செய்கின்றது. வாடிக்கையாளர்கள் தம்மை வங்கியுடன் இணைத்துக்கொள்ளும் போது நேரலை முறையில் முகவரின் ஆதரவும், உதவியும் அவர்களுக்கு கிடைக்கின்றது.      

செல்லுபடியான தேசிய அடையாள அட்டை அல்லது இலத்திரனியல் அடையாள அட்டையைக் கொண்டுள்ள, பதின்ம வயதினர் உட்பட, 16 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தற்போது இச்சேவை கிடைக்கப்பெறுகின்றது. https://applyonline.dfcc.lk/ என்ற தளத்தினூடாக 24 மணி நேரமும் இதனை அணுக முடியும். இணைய வழியில் வாடிக்கையாளரை உள்வாங்கும் செயல்முறை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், DFCC wallet, இணைய வங்கிச்சேவை, இலத்திரனியல் வடிவ கணக்குக்கூற்றுக்கள், DFCC Alerts, மற்றும் டெபிட் அட்டைகள் போன்ற பல்வகைப்பட்ட டிஜிட்டல் வங்கிச்சேவை மார்க்கங்கள் அடங்கலாக, நாம் வழங்கும் பல்வேறுபட்ட சேவைகளுக்கான அணுகலை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.     

100% டிஜிட்டல் வழிமுறை உள்வாங்கல் நடைமுறை மாற்றத்தின் முக்கியத்துவம் குறித்து DFCC வங்கியின் தனிநபர் வங்கிச்சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான சிரேஷ்ட உப தலைவர் ஆசிரி இத்தமல்கொட அவர்கள் கருத்து வெளியிடுகையில், “தனித்துவமான, பயனர்நேயம் மிக்க மற்றும் தங்குதடையின்றிய வங்கிச்சேவை அனுபவத்தை வழங்கும் எமது தொடர் முயற்சியில், இலங்கை மக்கள் சௌகரியத்தையும், இலகுவான அணுகலையும் நாடுகின்றனர் என்பதை நாம் இனங்கண்டுள்ளோம். டிஜிட்டல்ரீதியாக வலுவூட்டுவதில் எப்போதும் முன்னிலை வகிக்கும் ஒரு வங்கி என்ற வகையில், உண்மையாக இணைய வழியில் கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கு இடமளித்து, உண்மையில் டிஜிட்டல்ரீதியான மற்றும் இணைய வழியில் வாடிக்கையாளரை உள்வாங்கும் தளத்தை அறிமுகப்படுத்துவதற்கு, தொடர்புபட்ட அனைத்து தரப்பினருடனும் நாம் ஒத்துழைத்து செயல்பட்டுள்ளோம். சௌகரியம், எளிமை மற்றும் இலகு ஆகியவற்றுக்கு உலகளாவிய தராதரங்களுடன் எமது வாடிக்கையாளர்களின் அனுபவத்தை ஒன்றிக்கச் செய்வதில் இது ஒரு சாதனை மைல்கல்லாகும். காகித பாவனையில் நாம் தங்கியிருப்பதைக் குறைத்து, வாடிக்கையாளர்கள் நேரடியாக வங்கிக்கு வருகை தர வேண்டிய தேவையைப் போக்கி, எமது நிலைபேற்றியல் சார்ந்த இலக்குகளுக்கும் இது உதவுகின்றது,” என்று குறிப்பிட்டார்.      

உண்மையான தங்குதடையின்றிய அனுபவத்தை உறுதி செய்வதற்கு, ஏனைய சௌகரியமான அம்சங்கள் பலவற்றுக்கும் இப்புதிய தளம் இடமளிக்கின்றது. உங்களுடைய விண்ணப்பத்தின் நிலவரத்தை சரிபார்த்தல், இலங்கை ரூபா மற்றும் வெளிநாட்டு நாணயக் கணக்குகளை ஆரம்பித்தல், நீங்கள் பகுதியளவில் பூர்த்தி செய்துள்ள விண்ணப்பத்தை சேமித்தல் மற்றும் அடுத்த தடவை நீங்கள் அதனை விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்து செயல்முறையை தங்குதடையின்றி மேற்கொண்டு செல்லல் போன்றவையும் அதில் அடங்கியுள்ளன. இந்த நகர்வுடன், உள்வாரியாகவும், வெளிவாரியாகவும் தனது சேவைகள் மற்றும் நடைமுறைகளை டிஜிட்டல்மயமாக்கம் மற்றும் தன்னியக்கமயப்படுத்தும் தனது இலக்குகளை நோக்கி DFCC வங்கி பாரியதொரு அடியை முன்னெடுத்து வைத்துள்ளதுடன், இலங்கையில் டிஜிட்டல் வங்கிச்சேவை புரட்சியில் அது முன்னிலையும் வகிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here