DFCC வங்கி அறிமுகப்படுத்தும் கட்டமைக்கப்பட்ட வீட்டுக் கடன்கள் உச்சபட்ச நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன

41

வாடிக்கையாளர்களின் தனித்துவமான மற்றும் பல்வகைப்பட்ட தேவைகளைப் புரிந்துகொண்டுள்ள DFCC வங்கி, தனது DFCC வீட்டுக் கடன்களுக்கு பல்வேறுபட்ட மீள்கொடுப்பனவுத் தெரிவுகளை வழங்கியுள்ளது. வெறும் 3 தினங்களுக்குள் கடன் அங்கீகாரங்களுடன், உச்சபட்ச நெகிழ்வுத்தன்மை மற்றும் சௌகரியத்தை வழங்குகின்றது. சந்தையில் மிகவும் கவர்ச்சிகரமான வட்டி வீதங்களை வழங்கும் DFCC வீட்டுக் கடன்கள், பல்வேறு நெகிழ்வுத்தன்மையுடன் கட்டமைக்கப்பட்ட மீள்கொடுப்பனவுத் திட்டங்களையும் வழங்குகின்றது.

குடியிருப்பதற்காக வெற்றுக்காணியொன்றை அல்லது ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள அல்லது நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற வீடு அல்லது அடுக்குமனையொன்றை வாங்க விரும்புகின்றவர்களுக்கு DFCC வீட்டுக் கடன்கள் மிகச் சிறந்த தெரிவாகும். ஏற்கனவே சொந்தமாகவுள்ள காணியில் வீடொன்றை நிர்மாணிக்க, காணியொன்றை வாங்க, வீடொன்றை நிர்மாணிக்க அல்லது கொள்வனவுத் தொகையை மீளச்செலுத்த விரும்புகின்றவர்களுக்கும் இது மிகவும் பொருத்தமானது. DFCC வங்கி வழங்கும் நெகிழ்வுத்தன்மையானது ஏனைய வங்கிகளில் நீங்கள் ஏற்கனவே கொண்டுள்ள கடன்களை இன்னும் கூடுதலான சாதகமான மற்றும் சீரான ஏற்பாட்டுடன் DFCC வீட்டுக் கடன்களாக மாற்றிக்கொள்ளவும் இடமளிக்கின்றது.          

DFCC வங்கியின் தனிநபர் வங்கிச்சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிப் பிரிவின் சிரேஷ்ட உப தலைவரான ஆசிரி இத்தமல்கொட அவர்கள் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “வீட்டை சொந்தமாகக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தையும், அதற்கான நிதியியல் பயணத்தையும் நாம் விளங்கிக்கொண்டுள்ளோம். உங்களுக்கென வீடொன்றைச் சொந்தமாகக் கொண்டிருப்பது ஒருவரின் வாழ்வில் முக்கியமான சாதனைகளில் ஒன்றாக உள்ளதுடன், இந்த அபிலாஷையை அடைவதில் அவர்களுடைய நிதியியல் கூட்டாளராக எமது வாடிக்கையாளர்களுக்கு உதவ விரும்புகின்றோம். இதனாலேயே வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்றவாறு பல்வகைப்பட்ட மீள்கொடுப்பனவுத் தெரிவுகளுடன் உச்சபட்ச நெகிழ்வுத்தன்மை மற்றும் சௌகரியத்தை வழங்கும் வகையில் எமது கட்டமைக்கப்பட்ட வீட்டுக் கடன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வகையில், உங்களுக்கு எது மிகவும் சௌகரியமானது என்பதை தெரிவு செய்து, வீடொன்றைச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற உங்களுடைய கனவை நனவாக்கிக் கொள்ள முடியும்,” என்று குறிப்பிட்டார்.

DFCC வீட்டுக் கடன்கள் பல்வேறுபட்ட நிதியியல் நிலைமைகள் மற்றும் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் பல்வகைப்பட்ட மீள்கொடுப்பனவுத் தெரிவுகளை வழங்குகின்றன.

முதலாவது தெரிவாக அதிகரிக்கும் முறைமை மீள்கொடுப்பனவுத் தெரிவின் கீழ் சம தொகைகளை மீள்கொடுப்பனவாகத் தெரிவு செய்து கொள்ள முடியும். முதல் 3 ஆண்டுகளில் கடன் தொகையில் 10% ஐ மாத்திரமே வாடிக்கையாளர்கள் மீளச் செலுத்த வேண்டியுள்ளதுடன், 3வது முதல் 6 ஆண்டுகள் வரை 30% அதிகரிப்பையும், 6வது முதல் 10 ஆண்டுகள் வரை 60% அதிகரிப்பையும் மேற்கொண்டு மீளச்செலுத்த முடியும்.   

இரண்டாவது தெரிவானது நிலையான வருமானத்தை ஈட்டுகின்றவர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், 5 ஆண்டுகள் கருணைக் காலத்தையும், அதன் பின்னர் வாடிக்கையாளரின் மீள்கொடுப்பனவு இயலுமையைப் பொறுத்து சம தொகை மூலதனம் அல்லது கட்டமைக்கப்பட்ட மீள்கொடுப்பனவுகளாக செலுத்த முடியும். இத்தெரிவானது அதிகபட்ச கடன் காலமாக 20 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படுவதுடன், 5 ஆண்டுகளின் பின்னர் எதிர்வுகூறப்படுகின்ற வருமானமும் கருத்தில் கொள்ளப்படுகின்றது.    

மூன்றாவது தெரிவானது ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் ஒரு தொகைக் கொடுப்பனவை வருடாந்த மூலதன கொடுப்பனவுகளாக மீளச் செலுத்தும் மாற்று அணுகுமுறையை வழங்குவதுடன், எனினும் மாதாந்த வட்டிக் கொடுப்பனவுகள் தொடர்ந்தும் விதிக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது. அதிகபட்சமாக 10 ஆண்டுகள் கடன் காலத்துடன் இத்தெரிவு கிடைக்கின்றது.    

கடைசித் தெரிவாக, சமமான மாதாந்த மூலதன மீள்கொடுப்பனவுகளுடன், எஞ்சியுள்ள 50% மூலதனம் கடன் காலத்தின் முடிவில் மொத்தத் தொகையாக மீளச் செலுத்தும் வாய்ப்பினை வழங்குகின்றது. தேவைப்படும் பட்சத்தில் கடன்காலத்தின் முடிவில் எஞ்சியுள்ள 50% முலதன மீள்கொடுப்பனவை மேலும் 5 ஆண்டுகளுக்கு மேற்கொண்டு செல்லவும் இத்தெரிவு இடமளிக்கின்றது.

குறைந்தபட்ம் 1 வருட கால சேவையுடன் மாதாந்தம் ரூபா 100,000/- அல்லது மேற்பட்ட தொகையை ஈட்டுகின்ற சம்பளம் பெறும் ஊழியர்கள், கடைசி 1 வருடத்திற்கான வருமானத்தை நிரூபிக்கும் ஆதாரத்துடன், குறைந்தபட்சமாக ரூபா 100,000/- தொகையை சம்பாதிக்கின்ற சுயதொழில் புரிகின்ற தொழில் வல்லுனர்கள், மற்றும் குறைந்தபட்சமாக ரூபா 100,000/- என்ற மாதாந்த வருமானத்தைக் காண்பிக்கும் வகையில் குறைந்தபட்சமாக 3 ஆண்டுகளுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக் கூற்றுக்களைக் கொண்டுள்ள சுயதொழில் புரிகின்றவர்கள் கட்டமைக்கப்பட்ட DFCC வீட்டுக் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் தகைமையைக் கொண்டுள்ளனர்.   

DFCC வீட்டுக் கடன் தொடர்பில் இன்றே அறிந்து கொள்ளுங்கள் அல்லது விண்ணப்பியுங்கள். DFCC வங்கியின் 24/7 சேவை மையத்தை 0112442076 என்ற இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டோ அல்லது உங்களுக்கு அருகாமையிலுள்ள DFCC வங்கிக் கிளைக்கு வருகை தந்தோ மேலதிக விபரங்களை அறிந்து, உங்களுடைய கனவு இல்லத்தை நனவாக்கிக் கொள்ளும் பயணத்தை இன்றே ஆரம்பியுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here