DFCC வங்கி, அனைவருக்கும் நிதியியல் சேவைகளை வழங்கும்

30

அர்ப்பணிப்புக்காக LankaPay Technovation Awards நிகழ்வில் முதல்முறையாக தங்க விருதை வென்றுள்ளது

டிஜிட்டல் புத்தாக்கத்தினூடாக அனைவருக்கும் நிதியியல் வாய்ப்பினை வழங்கும் வழிமுறைகளை மேம்படுத்துவதில் DFCC வங்கியின் மகத்தான முயற்சிகளுக்கான அங்கீகாரமாக அண்மையில் இடம்பெற்ற LankaPay Technovation Awards விருதுகள் நிகழ்வில், நிதியியல் உள்ளடக்கம் – பிரிவு C இல் ஆண்டின் மிகச் சிறந்த நிதியியல் நிறுவனத்திற்காக (Financial Institution of the Year for Financial Inclusion) தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்புமிக்க பாராட்டுக்குப் புறம்பாக, பிரிவு B இல் ஆண்டின் மிகச் சிறந்த சாதாரண ஏடிஎம் செயலூக்கத்திற்கான சிறப்பு விருதையும் (Best Common ATM Enabler), DFCC வங்கி பெற்றுள்ளது. டிஜிட்டல் செயலூக்கத்தினூடாக அனைவருக்கும் நிதியியல் வாய்ப்புக்களை வழங்கி நிலைபேணத்தகு எதிர்காலத்தைச் செதுக்கி, ‘அனைவருக்கும் ஏற்ற வங்கி’ ஆகத் திகழ்வதில் DFCC வங்கியின் அர்ப்பணிப்பை இந்த விருதுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.            

இச்சாதனை குறித்து DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திமால் பெரேரா அவர்கள் கருத்து வெளியிடுகையில், “இந்த மதிப்பிற்குரிய விருதுகளுடன் கிடைக்கப்பெற்ற அங்கீகாரம் எமக்கு மிகுந்த கௌரவம் அளிக்கின்றது. மிகவும் மதிப்பிற்குரிய இந்த மேடையில் எமக்கு கிடைக்கப்பெற்ற முதலாவது தங்க விருதாக இது அமைந்துள்ளதுடன், DFCC வங்கியை அனைவருக்கும் ஏற்ற ஒரு முதன்மையான நிதியியல் நிறுவனமாக நிலைநிறுத்துவதற்காக உழைக்கின்ற பல்வேறு நபர்கள் மற்றும் அணிகளின் ஓயாத அர்ப்பணிப்பிற்கு சான்று பகருகின்றது. சவால்மிக்க சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் கூட, அவர்களுடைய அயராத முயற்சிகள் மூலமாக நிலையான வளர்ச்சியை நாம் எட்டியுள்ளோம். முக்கியமாக, எமது வாடிக்கையாளர்கள் மீது நாம் கொண்டுள்ள ஓயாத அர்ப்பணிப்பு, முக்கியமான நிதியியல் சேவைகளை தங்குதடையின்றி அவர்களுக்கு வழங்குவதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அங்கீகாரத்தை எமக்கு வழங்கிய அமைப்பிற்கு இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், எமது அணியின் உறுப்பினர்களின் மகத்தான பங்களிப்புக்களையும் பாராட்டுகின்றேன். மேலும், எமது விசுவாசம்மிக்க வாடிக்கையாளர்கள் DFCC வங்கிக்கு வழங்கும் ஓயாத ஆதரவிற்காக அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்,” என்று குறிப்பிட்டார்.     

இலங்கை மக்கள் அனைவரையும் கவருகின்ற வகையில், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தீர்வுகளை வழங்குவதில் DFCC வங்கியின் ஓயாத அர்ப்பணிப்பை இவ்விருதுகள் பிரதிபலிக்கின்றன. டிஜிட்டல் சேவை வழங்கல் மற்றும் உள்ளக டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு முன்னோடி என்ற வகையில், தங்குதடையின்றிய பல்வழி வாடிக்கையாளர் அனுபவத்தை DFCC வங்கி வழங்கி வருகின்றது. மேலும், காகிதம் மற்றும் ஏனைய வளங்களில் தங்கியிருப்பதைக் குறைத்து, செயல்பாட்டுத் திறனை அதிகரித்து, காபன் அடிச்சுவட்டைக் குறைப்பதற்கு உதவுவதில் வங்கியின் நிலைபேற்றியல் இலக்குகளுடன் இந்த முயற்சிகள் மிகவும் சிறப்பாக ஒத்திசைகின்றன.  

நிதியியல் தொழில்நுட்ப புத்தாக்கத்திற்கு விருதுகளை வழங்குவதில் இலங்கையின் உச்ச அமைப்பாக LankaPay Technnovation Awards நிகழ்வு திகழ்ந்து வருகின்றது. 2019 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இவ்விருதுகள் நிகழ்வு, நாட்டிலுள்ள மிகச் சிறந்த தொழில்நுட்ப புத்தாக்கங்களுக்கு அங்கீகாரமளிப்பதுடன், இலத்திரனியல் கொடுப்பனவுகளை ஊக்குவித்து, வாடிக்கையாளர் சேவை மற்றும் அனுபவத்தை மேம்படுத்துவதில் மிகச் சிறந்த பங்களிப்புக்களை வழங்கியோருக்கு கௌரவித்து, விருது வழங்கி வருகின்றது. இவ்விருதுகள் மிகவும் போட்டித்தன்மை கொண்டதுடன், விண்ணப்பிப்பவர்கள் மிகவும் கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட வேண்டியுள்ளதுடன், கிடைக்கப்பெறுகின்ற நுழைவு விண்ணப்பங்கள் அனைத்தும் தொழில்துறை வல்லுனர்கள் அடங்கிய சுயாதீன குழுவால் மதிப்பீடு செய்யப்படுகின்றன.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here