DFCC வங்கி, அதிசிறந்த தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு மற்றும் சேவை நெகிழ்திறனுக்காக SLT உடன் புதிய கூட்டாண்மையின் அனுகூலத்தை பயன்படுத்துகிறது 

21

DFCC வங்கி, தனது தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்காக, ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்துடன் (SLT) கூட்டாண்மையொன்றை ஏற்படுத்தி, தனது டிஜிட்டல் பரிமாண மாற்றத்திற்கான பயணத்தில் மற்றுமொரு முக்கியமான அடியை முன்னெடுத்து வைத்துள்ளது. SLT இன் இன்ரநெட் தரவு மையத்தில் (Internet Data Centre -IDC) இணை அமைவிட சேவைகளை (Co-location) நடைமுறைப்படுத்தல் மற்றும் அனைத்து கிளைகள் மத்தியிலும் Cisco SD-WAN தொழில்நுட்பத்தை ஏற்பாடு செய்தல் ஆகியவற்றை இந்த மூலோபாய கூட்டாண்மை உள்ளடக்கியுள்ளதுடன், சேவை வழங்கல் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை உச்சப்படுத்துகின்றது. வங்கியின் சேர்வர்கள் (Server) அனைத்தும் SLT இன் IDC  இல் பாதுகாப்பாக பேணப்படுவதற்கு Co-location இடமளிப்பதுடன், கிளை வலையமைப்பின் மத்தியில் இன்ரநெட் இணைப்புத்திறனை மேம்படுத்துவதற்கு உதவுகின்ற ஒரு தொழில்நுட்பமாக SD-WAN காணப்படுகின்றது.             

DFCC வங்கியின் சிரேஷ்ட உப தலைவரும், பிரதம தகவல் அதிகாரியுமான விந்திய சொலங்காராச்சி அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “DFCC வங்கியின் டிஜிட்டல் பரிமாண வளர்ச்சியை முன்னெடுப்பதில் SLT உடனான எமது கூட்டாண்மை மற்றும் Cisco SD-WAN தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்தல் ஆகியன மிகவும் முக்கியமானவை. எமது தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பினை எதிர்காலத்திற்கு ஏற்றவாறான ஒன்றாக மாற்றியமைத்து, தொழிற்பாட்டு திறனை கணிசமான அளவில் மேம்படுத்துவதில், சர்வதேச தொழில்நுட்பத்தின் பக்கபலத்தைக் கொண்ட உள்நாட்டு நிபுணத்துவத்தின் அனுகூலத்தைப் பயன்படுத்திக்கொள்வதில் பெருமை அடைகின்றோம். தொழில்நுட்பத்தால் முன்னெடுக்கப்படுகின்ற தீர்வுகளில் நாம் தொடர்ந்தும் முன்னிலை வகித்து வருகின்ற நிலையில், அதியுயர் மட்ட சேவைகளை எமது வாடிக்கையாளர்கள் அனுபவிப்பதை இப்புத்தாக்க அணுகுமுறை உறுதி செய்யும்,” என்று குறிப்பிட்டார்.        

Co-location சேவைகளுக்கு SLT இன் IDC வசதிகளை பயன்படுத்துவதனூடாக, தனது முக்கியமான தொழிற்பாடுகளுக்கு வலுவான, நம்பகமான மற்றும் மேலும் விரிவுபடுத்தக்கூடிய உட்கட்டமைப்பினை DFCC வங்கி ஏற்படுத்திக் கொண்டுள்ளது. மேம்பட்ட தரவுப் பாதுகாப்பு, மேம்பட்ட அனர்த்த மீள்வு ஆற்றல்கள் மற்றும் அதிநவீன உட்டகட்டமைப்பிற்கான அணுகல் ஆகியவற்றை இக்கூட்டாண்மை வங்கிக்கு வழங்குவதுடன், அதன் தகவல் தொழில்நுட்ப சூழல் நெகிழ்திறன் கொண்டதாகவும், எதிர்கால தேவைகளுக்கு அமைவாக தகவமைப்புத்திறன் கொண்டதாகவும் இருப்பதை உறுதி செய்கின்றது. மேலும், Co-location சேவைகளுக்கு மாறிக்கொண்டமை வங்கி தனது வளாகத்தினுள் சொந்தமாக தரவு மையங்களைப் பேணிப் பராமரிப்பதில் பெருந்தொகை முதலீடுகளை மேற்கொண்ட வேண்டியை தேவையைப் போக்கி, செலவுகளை கணிசமான அளவில் குறைப்பதற்கு வழிவகுத்துள்ளது. வன்பொருள், எரிசக்தி நுகர்வு மற்றும் பணியாளர் செலவுகளை குறைக்க முடிந்துள்ளமை, தனது வளங்களை இன்னும் கூடுதலான அளவில் மூலோபாய முயற்சிகளை நோக்கி திசைதிருப்ப DFCC வங்கிக்கு இடமளிப்பதுடன், அதன் மூலமாக நிதியியல் திறனை மேம்படுத்துகின்றது.          

Cisco SD-WAN தொழில்நுட்பமானது DFCC வங்கியின் கிளை வலையமைப்பின் மத்தியில் வலையமைப்பு இணைப்புத்திறனில் புரட்சிக்கு வழிவகுத்துள்ளதுடன், தங்குதடையின்றிய தொடர்பாடல் மற்றும் தொடர்ச்சியான சேவை வழங்கலுக்கு இடமளித்துள்ளது. இந்த அதிநவீன தீர்வானது bandwidth பயன்பாட்டை மேம்படுத்தி, தாமதங்களைக் குறைத்து வலையமைப்பு பெறுபேற்றுத்திறனை உச்சமாக்கி, கிளைகள் அனைத்தும் திறன்மிக்க வழியிலும், பாதுகாப்பாகவும் இணைக்கப்படுவதை உறுதி செய்கின்றது. Cisco SD-WAN வழங்கும் மத்திய முகாமைத்துவ ஆற்றல்கள் வங்கியின் தகவல் தொழில்நுட்ப அணி ஒரே தளத்தின் மூலமாக ஒட்டுமொத்த வலையமைப்பையும் கண்காணித்து, கட்டுப்பாட்டில் வைத்திருக்க இடமளிப்பதுடன், அதன் மூலமாக தொழிற்பாட்டுத் திறனை மேம்படுத்தி, பரந்து கிடக்கும் வலையமைப்பினை நிர்வகிப்பதில் எழுக்கின்ற சிக்கல்களை குறைக்கின்றது.      

நிலைபேணத்தக்க தகவல் தொழில்நுட்ப நடைமுறைகள் மீது DFCC வங்கியின் உறுதிப்பாடு மற்றும் புத்தாக்கத்தினூடாக வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மாற்றியமைப்பதில் அதன் அர்ப்பணிப்பு ஆகியவற்றை இக்கூட்டாண்மை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. அந்த வகையில் தொழிற்துறையில் முன்னிலையில் திகழும் தனது ஸ்தானத்தை வங்கி தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுப்பதுடன், ஒப்பற்ற சேவை நெகிழ்திறன் மற்றும் தொழிற்பாட்டு மகத்துவம் ஆகியவற்றின் மாற்றங்கண்டு வருகின்ற தனது வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு தயாராகவுள்ளது. மிகவும் பாதுகாப்பான, தகவமைப்புதிறன் கொண்ட மற்றும் விரிவுபடுத்தக்கூடிய தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு தீர்வுகளை நோக்கிய மாற்றமானது, சந்தையில் போட்டித்திறன் அனுகூலத்தை மேம்படுத்துவதில் DFCC வங்கியின் தற்போதைய முயற்சிகளை பிரதிபலிப்பதுடன், அனைத்து மார்க்கங்கள் மூலமாகவும் அதிநவீன வங்கிச்சேவை தீர்வுகளை வழங்குவதில் முன்னிலையாளராக தொடர்ந்தும் திகழ்வதை உறுதி செய்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here