DFCC வங்கி பீஎல்சி, அனுபவம்மிக்க மனித வள நிபுணர் பதும சுபசிங்க அவர்கள் வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவ அணியில் சிரேஷ்ட உப தலைவர்/பிரதம மனித வள அதிகாரியாக இணைந்துள்ளமை தொடர்பில் அறிவித்துள்ளது. மனித வள முகாமைத்துவத்தில் 22 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட அனுபவத்தைக் கொண்டுள்ள அவர், மனித வள நிர்வாகத்தில் மகத்தான திறமைகளைக் கொண்டுள்ளார். சிரேஷ்ட உப தலைவர்/பிரதம மனித வள அதிகாரியாக வங்கியில் பதும அவர்கள் புதிய பணிப்பொறுப்பில், தனது நீண்ட அனுபவத்தின் அனுகூலத்துடன், பணியாளர்களை மையமாகக் கொண்ட மனித வள கொள்கைகளை வடிவமைத்து, நடைமுறைப்படுத்தி, புத்தாக்கமான மற்றும் நெகிழ்வுப்போக்குடனான மனித வள நடைமுறைகளை அறிமுகப்படுத்தி, பெறுபேற்றுத்திறன் அடிப்படையிலான நிறுவன கலாச்சாரமொன்றை வளர்ப்பார்.
பதும அவர்கள் DFCC வங்கியில் இணைந்து கொள்வதற்கு முன்னர் மாபெரும் சர்வதேச மதுபான நிறுவனமான Heineken குழுமத்தின் உறுப்பு நிறுவனமான Heineken Lanka இல் மனித வளப் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார். Heineken Lanka நிறுவனத்தில் அவர் பணியாற்றிய போது, அவரது அதிசிறந்த திறமைகளுக்கான அங்கீகாரமாக அக்குழுமத்தின் Management Team Fast Track என்ற சர்வதேச நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்பதற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பாரிய கூட்டு நிறுவனங்கள் குழுமம், தொலைதொடர்பாடல் பல்தேசிய நிறுவனங்கள், ஏற்றுமதி உற்பத்தி, மற்றும் ஆலோசனை போன்ற துறைகளில் அவர் மனித வள அனுபவத்தைக் கொண்டுள்ளார். அவரது தொழிற்பயணத்தில் சுறுசுறுப்பான மனித வள செயல்பாடு மற்றும் மாற்றத்திற்கான முகாமைத்துவம் ஆகியன அவரது குறிப்பிடத்தக்க பலமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பதும அவர்களின் பல்துறை ஆற்றல் மற்றும் பரந்துபட்ட துறைகளில் நீண்ட அனுபவம் ஆகியன தனது பணியாளர்கள் மீது காண்பிக்கும் அக்கறையை இன்னும் மேம்படுத்தி, தற்போதைய நிலைமையை சிறப்பிப்பதற்காக அதற்கு சவால்விடும் வகையில் பெரும் இலட்சியங்களை உள்ளடக்கியுள்ள DFCC வங்கியின் மாற்றத்திற்கான பயணத்துடன் சிறப்பாக ஒன்றியுள்ளது. வங்கி தொடர்பில் பழுத்த அனுபவம் மற்றும் புதிய கண்ணோட்டத்தைக் கொண்டுள்ள அவரது தொலைநோக்குடனான தலைமைத்துவ பாணி, ஒத்துழைப்பு மற்றும் வலுவூட்டல் ஆகியவற்றை வலியுறுத்துவதுடன், நிறுவனத்தினுள் பன்மைத்துவம், சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் DFCC வங்கியின் விழுமியங்களை இது பிரதிபலிக்கின்றது. நிறுவனத்தின் வெற்றியை முன்னெடுப்பதில் மனித மூலதனத்தின் முக்கியத்துவம் தொடர்பான தெளிவான புரிந்துணர்வுடன், ஒவ்வொரு ஊழியரும் தான் மதிக்கப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டு மற்றும் உத்வேகம் பெறுவதை உணருகின்ற பணியிட கலாச்சாரத்தை நிலைநாட்டுவதில் பதும அவர்கள் அர்ப்பணிப்புடன் உழைப்பார்.
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் (PIM) பட்டதாரியான பதும அவர்களின் கல்விரீதியான விசேட துறையும் பணியாளர்களை நிர்வகிப்பதற்கான அவரது ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அந்த வகையில், அவரது மேற்பட்டப்படிப்பு மனித வளங்களை இலக்காகக் கொண்டிருந்ததுடன், அவர் அமெரிக்காவின் International Public Management Association இல் மனித வளங்களுக்கான சான்றுபடுத்தப்பட்ட சிரேஷ்ட தொழில்வல்லுனர் (Senior Certified Professional) என்ற தகைமையையும் பெற்றுள்ளார். Harvard, INSEAD, மற்றும் Indian School of Business போன்ற முன்னணி வணிக கற்கைமையங்களில் தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவம் சார்ந்த மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்களில் அவர் பங்குபற்றியுள்ளார்.