DFCC வங்கியின் Read the Way பிரச்சாரம் தகுதியான மாணவர்களின் வாழ்க்கையில் பிரகாசமான மற்றும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது

34
DFCC வங்கியின் அதிகாரிகள் பல்வேறு பாடசாலைகளில் மாணவர்களுக்கு புத்தகங்களை கையளித்து, கிராமப்புறங்களில் உள்ள பல இளம் மாணவர்களின் முகங்களில் பிரகாசத்தைக் கொண்டு வருவது படத்தில் காணப்படுகிறது.

மாற்றத்திற்கான பயணத்தின் ஆரம்பமாக, DFCC Read the Way 2023 நிலைபேண்தகு முயற்சி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதுடன், இது இளம் உள்ளங்களிலும், எண்ணங்களிலும் அழியாத முத்திரையை பதித்துள்ளது. இலங்கையில் பின்தங்கிய சிறுவர்களுக்கான கல்வியை மேம்படுத்துவதற்கான உறுதியான அர்ப்பணிப்புடன், இந்த முயற்சியானது கற்றல் கலாச்சாரத்தை ஊக்குவிக்க உதவியுள்ளது.

தொடர்புபட்ட அனைத்து மதிப்புமிக்க தரப்பினரின் கூட்டு முயற்சியின் மூலம், 19 மாவட்டங்களில் உள்ள 50 பாடசாலைகளில் 14,000 க்கும் மேற்பட்ட மாணவர்களை இந்த திட்டம் எட்டியுள்ளதுடன், இது நிதியியல் சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக தலைப்பட்டுள்ளது. வாசிப்பு மீதான ஆர்வத்தை வளர்ப்பதன் மூலம், DFCC Read the Way முயற்சியானது, ஐக்கிய நாடுகள் நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்கு 4 உடன் எதிரொலிக்கும் அதே வேளையில், அனைவருக்கும் உள்ளடக்கிய கல்வி மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்பதற்கான வாய்ப்புகளை உறுதி செய்ய உழைத்து வருகிறது. ஒளிமயமான எதிர்காலத்தை செதுக்குவதில் கல்வியின் ஆற்றலைக் கொண்டாட DFCC வங்கி இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here