DFCC வங்கியின் புத்தாக்க இணையத்தளம் BestWeb.LK Awards 2023 நிகழ்வில் வெள்ளி விருதை வென்றுள்ளது

34
இடமிருந்து வலப்புறமாக நிற்பவர்கள்: பிரதீபன் சிவலிங்கம் - சிரேஷ்ட முகாமையாளர்/டிஜிட்டல் வங்கிச்சேவை, தினேஷ் ஜெபமணி - துணைத் தலைவர்/டிஜிட்டல் மூலோபாயம், அமிஷா தனசூரிய - வங்கிச்சேவை உதவியாளர்/டிஜிட்டல் வங்கிச்சேவை, நில்மினி குணரத்ன - துணைத் தலைவர்/சந்தைப்படுத்தல் மற்றும் நிலைபேற்றியலுக்கான தலைவர், அசங்க உடுவெல - தலைமைச் செயற்பாட்டு அதிகாரி, விந்தியா சொலங்காராச்சி - பிரதம தகவல் அதிகாரி

புத்தாக்கம் மற்றும் பயனர்களை மையமாகக் கொண்ட வடிவமைப்பிற்கான அதன் ஓயாத அர்ப்பணிப்பின் எதிரொலியாக, DFCC வங்கியின் புத்தாக்கத்துடனான இணையத்தளம் மீண்டும் ஒரு முறை வெற்றிபெற்றுள்ளதுடன், BestWeb.LK Awards 2023 விருதுகள் நிகழ்வில் வங்கிச்சேவை மற்றும் நிதிப் பிரிவில் மிகச்சிறந்த இணையத்தளத்திற்கான மதிப்புமிக்க வெள்ளி விருதை தனதாக்கியுள்ளது. இந்த விருதானது வங்கியைப் பொறுத்தவரையில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை இலக்கினைக் குறித்து நிற்பதுடன், டிஜிட்டல் துறையில் ஒரு புத்தாக்குநராக அதன் ஸ்தானத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வண்ணம், தொடர்ந்து 4 வது ஆண்டாக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. BestWeb.LK விருதுகள் என்பது LK Domain Registry ஆல் ஒழுங்கமைக்கப்படுகின்ற டிஜிட்டல் மேன்மைக்கு அங்கீகாரமளிக்கும் வருடாந்த கொண்டாட்டமாகும்.

இந்த அங்கீகாரமானது, மேன்மை மீதான DFCC வங்கியின் அயராத நாட்டம் மற்றும் வழக்கமான தளங்களைத் தாண்டி டிஜிட்டல் அனுபவங்களை மேம்படுத்தும் வகையில் வடிவமைப்பதில் அதன் தூரநோக்குடனான இலக்கிற்கு ஒரு சான்றாகும். இந்த இணையத்தளம் புத்தாக்கத்தில் முன்னணியில் உள்ளதுடன், பயனர் நட்புடனான இடைமுகத்துடன் கூடிய அதிநவீன தொழில்நுட்பத்தை தங்குதடையின்றி இணைத்துக் கொள்கிறது. வங்கிச்சேவை நுழைமுகம் என்ற அதன் வகிபாகத்திற்கு அப்பால், இந்த இணையத்தளமானது பல்வேறுபட்ட வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விரிவான சேவைகள் மற்றும் தீர்வுகளை வழங்கும் ஒரு வலிமையான தளமாகவும் வளர்ந்துள்ளது.

DFCC வங்கியின் டிஜிட்டல் மூலோபாயத்திற்கான துணைத் தலைவர் தினேஷ் ஜெபமணி அவர்கள் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, கருத்துத் தெரிவிக்கையில், “இந்த மதிப்பிற்குரிய விருது அங்கீகாரத்தைப் பெறுவதற்கு நாம் மீண்டும் ஒருமுறை அதிர்ஷ்டசாலியாக மாறியுள்ளோம் என்பதால் இது உண்மையிலேயே எமக்கு மிகவும் பெருமைக்குரிய தருணம். எமது இணையத்தளமானது அதன் வடிவம் மற்றும் செயல்பாட்டின் ஒருங்கிணைப்பைக் குறித்து நிற்பதுடன், அணுகல், உள்ளடக்கம் மற்றும் செயல்திறனுக்கு முன்னுரிமை அளிக்கும் நுட்பமான வடிவமைப்பு நெறிமுறைகளை உள்ளடக்கியது. இது சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பயனர்களுக்கு சேவை வழங்கும் ஒரு மும்மொழி மையமாக வலுவாக உள்ளது. இதன் மூலம் அனைத்து இலங்கை மக்களுக்கும் எம்மால் சாத்தியமான அளவுக்கு மிகச்சிறந்த உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் அனுபவங்களுடன் சேவைகளை வழங்குவதற்கான எமது உண்மையான அர்ப்பணிப்பை இது உள்ளடக்கியுள்ளது,” என்று குறிப்பிட்டார்.

BestWeb.LK 2023 இல் அதற்கு கிடைத்துள்ள அங்கீகாரத்தின் மையமாக, DFCC வங்கியின் மேன்மையை நோக்கிய முயற்சி காணப்படுவதுடன், இது அதன் இணையத்தளத்தில் அதன் சமீபத்திய டிஜிட்டல் மேம்பாடுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது. இந்த சிறப்பம்சங்களில் இடைத்தொடர்பாடும் இணைய வழி படிவங்கள் மற்றும் சேவைகள், தீர்வுகள் தொடர்பான விசாரணைகள் மூலம் தங்குதடையற்ற வழியில் வாடிக்கையாளர்களை வங்கியில் உள்ளிணைக்கும் முறைமையும் அடங்கும். இது பல்வேறு தலைமுறைகளுக்கு பயனர் நேயத்துடனான அனுபவத்தை வளர்க்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், சிங்களம் மற்றும் தமிழில் உள்ள மும்மொழி இடைமுகம், இணைய உள்ளடக்க அணுகல் வழிகாட்டுதல்களுடன் சீரமைக்கப்பட்ட உள்ளடக்கத்திற்கான வங்கியின் அர்ப்பணிப்பைக் காண்பிக்கிறது. பலவிதமான நிதிக் கருவிகளின் ஒருங்கிணைப்பு மிகவும் ஈர்க்கக்கூடிய மற்றும் பயனுள்ள அனுபவத்தை வழங்குகிறது.

நிதிச் சேவைகளுக்கு அப்பால் சென்று, DFCC வங்கியின் இணையத்தளமானது உள்ளுணர்வு சார்ந்த நிதிக் கணிப்பொறிகளின் வரிசையைக் கொண்டுள்ளதுடன், இது வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி அனைத்துப் பயனர்களும் வருமான வரி, வீட்டுக் கடன்கள், குத்தகை மற்றும் பலவற்றில் அறிவுபூர்வமான தீர்மானங்களை மேற்கொள்ள இடமளிக்கிறது. நிதியியல் அறிவை வளர்ப்பதற்கான அதன் உறுதிப்பாட்டிற்கு இணங்க, DFCC வங்கியின் இணையத்தளம் ஒரு அறிவூட்டல் வழித்தடமாகவும் செயல்படுவதுடன், இது விவேகமான நிதியியல் தீர்மானங்களை மேற்கொள்ள உதவுகின்ற வளங்களை இலகுவில் அடையப்பெற வழிகோலுகிறது. இலங்கையில் உண்மையாகவே டிஜிட்டல் வழிமுறையில் வாடிக்கையாளர்களை உள்வாங்கும் நடைமுறையை பாதுகாப்பாகவும் வினைத்திறனுடனும் வழங்கும் முதல் இணையத்தளங்களில் ஒன்றாகவும் இந்த இணையத்தளம் திகழ்ந்தது.

நுண்ணறிவுமிக்க வலைப்பதிவுகள், சமூக ஊடக ஒருங்கிணைப்பு மற்றும் விரிவான வளங்கள் மூலம் அறிவூட்டல் சார்ந்த வகிபாகத்தையும் உள்வாங்கிக்கொண்டு, DFCC வங்கியின் இணையத்தளம் ஒரு எளிமையான நிறுவன இணையத்தளம் என்பதற்கு அப்பால் மகத்துவம் மிக்கது. புத்தாக்கத்துடனான வடிவமைப்பு மற்றும் ஓயாத பாதுகாப்பை இணைத்து, இது நிதிச் சேவைகள் மற்றும் அறிவூட்டல் மையமாகத் திகழும் அதே நேரத்தில், வங்கியின் பல்வேறு வகையான தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய தகவல்களையும், நிறுவனம் சார்ந்த முக்கிய தகவல்களையும் திறம்பட வெளிக்கொண்டு வருகிறது. தரவு பாதுகாப்பை மேம்படுத்தும் SSL குறியாக்கத்துடன், இணையத்தளமானது வங்கிச்சேவை மற்றும் நிதித்துறையின் டிஜிட்டல் துறையை மீள்வரையறை செய்து, மேன்மைக்கான புதிய தர ஒப்பீட்டு மட்டங்களை முன்வைக்கிறது.

மேன்மையை முன்னெடுத்தல், பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட DFCC வங்கியின் அர்ப்பணிப்பு, BestWeb.LK Awards 2023 விருதுகள் நிகழ்வில் இந்த வெற்றியை உறுதி செய்தது. வங்கிச் சேவை மற்றும் நிதித்துறையில் டிஜிட்டல் புத்தாக்கத்தில் முன்னோடியாகத் திகழ்வதற்கான அதன் அர்ப்பணிக்கு இது மிகச் சிறந்த சான்றாகும். நிதியியல் துறை தொடர்ந்து வளர்ச்சி மாற்றம் கண்டு வருவதால், DFCC வங்கியின் டிஜிட்டல் சேவைகள், புதிய தர ஒப்பீட்டு நிலைகளை அமைத்து, புதிய தலைமுறையினருக்கு டிஜிட்டல் வங்கிச்சேவை அனுபவங்களுக்கு மீள்விரைவிலக்கணம் வகுப்பதற்கு தயாராக உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here